சென்னை புத்தகத்திருவிழா, முதல் புத்தக வெளியீடு என்று ஜனவரி 2023 கொண்டாட்டம் முடிந்தது. பொறுப்பான எழுத்தாளராக இரண்டாவது புத்தகத்திற்குத் திட்டமிட்டேன். புத்தக ஆராய்ச்சி ஒருபுறம், அது சார்ந்த இடங்களைத் தேடிச்சென்று பெற்ற நேரடிஅனுபவம் மறுபுறம் என்று வேகமாக புத்தகத்தை எழுதத் தொடங்கினேன்...
Author - ஶ்ரீதேவி கண்ணன்
பிழைக்க ஒரு வழி வேண்டும். சங்க இலக்கியங்களில் பெரும்பாலும் தலைவன் பொருள்தேடச் சென்றிருப்பான். பிரிவைத் தாங்கமாட்டாத தலைவி பிரிவுத் துயரை தோழியிடம் சொல்வதைப்போல் பல பாடல்கள் இருக்கும். இன்னும் கொஞ்சம் முன்னேறி வந்து பட்டினத்தார் காலத்தை எடுத்துக் கொள்வோம். எவ்வளவு செல்வந்தராக இருந்தபோதிலும் பொருள்...
எல்லோருக்கும் தெரிந்த நம்பர் ஒன் பதவிக்கான தேர்வு UPSC. இந்தத் தேர்வை எழுதி வென்றால் இந்தியா முழுவதற்கும் சேவை வழங்க வேண்டும். IAS, IPS, IFS, IRS, IA&AS, ICAS, ICLS, IDAS, IDES இப்படி இருபத்து நான்கு துறைகளில் UPSC க்கான அதிகாரப்பணியிடங்கள் இருக்கின்றன. மணிப்பூர் போன்ற வன்முறை பூமிக்கும்...
தமிழக அரசில் பணிபுரிய ஆசிரியர் பணியிடங்களுக்குத் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளை எழுதி வெற்றிபெற்று உள்ளேவர வேண்டும். அது தனி வரிசை. தனித் தகுதி. அதை விடுவோம். பொதுவான கல்வித் தகுதி படைத்த யாரும் மாநில அரசு இயங்கத் தேவையான அடிப்படை பணியாளர்கள் முதல் அதிகாரப் பணியாளர்கள் வரை...
குரூப்-II-ற்கு கல்வித் தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். எந்த டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். குரூப்-II-ற்கு வயது வரம்பு கிடையாது. ஆனால் மூன்று நிலைகளில் தேர்வுகள் நடக்கும். அவைகள் முறையே முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு. முனிசிபல் கமிஷனர், உதவி...
குரூப்-I முப்பத்தேழு வயது வரை தான் எழுத முடியும். குரூப்-2-ஐப்போல் இந்தத் தேர்வும் முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என்று மூன்று நிலைகளைக் கொண்டது. வழக்கம்போல் முதல்நிலைத் தேர்வை முடித்ததும் நாம் வெற்றி பெற்றுவிடுவோம் என்று தெரிந்ததும் முதன்மைத் தேர்விற்குத் தயாராகிவிட...
ஆண்டறிக்கையில் வெளியிட்டபடி நாம் எழுத இருக்கும் தேர்விற்கு அந்த மாதத்தில் அறிவிப்பு வருகிறதாவென காத்திருக்க வேண்டும். அறிவிப்புத்தான் கல்வித்தகுதி, சிலபஸ், எந்தெந்த பாடத்திற்கு எத்தனை மதிப்பெண்கள், தேர்வுத் தேதி நேரம் இன்னும் என்னென்ன சந்தேகங்கள் உள்ளதோ அத்தனைக்கும் வழிகாட்டியாய் இருக்கும். இது...
நாம் எந்தப் போட்டித் தேர்விற்குத் தயாராகப் போகிறோம் என்கிற தெளிவு முதலில் வேண்டும். மத்திய அரசின் பணிகளுக்குத்தான் செல்லப்போகிறோம் எனில் அந்த வழியில் பயணிக்கலாம்- விரைவில் நல்ல பலனை தரும். மாநில அரசுப் பணி எனில் நம் கனவு உயர் பதவியாக இருந்தாலும் குரூப்-4 -ல் ஆரம்பித்து எல்லாத் தேர்வும் எழுதிப்...
முதல்நிலைத் தேர்விற்குப் படிப்பதைத் தெரிந்துகொண்டால் முதன்மைத் தேர்வு தன்னால் வசமாகிவிடும். எனவே முதல்நிலைத் தேர்விற்கு படிப்பது எப்படி என்று பார்ப்போம். ஆண்டுத் திட்டம் விட்டதுமே இந்த மாதத்தில் தேர்வு வரப்போகிறது என்பது தெரியும். ஆனாலும் அறிவிப்பு வந்த பிறகே படிக்க ஆரம்பிப்போம். தேர்வுத் தேதி...
நாம் எடுத்திருக்கும் லட்சிய வேள்விக்கு உடற் பயிற்சியும் உணவும் மிக முக்கியமானது. கண்ணாடியைத் திருப்புவதற்கும் ஆட்டோ ஓடுவதற்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கக் கூடாது. தொடர்பில்லை என்றாலும் நாம் தொடர்பாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். வெற்றி என்ற கனியைப் பறிக்க உடல் மிக முக்கியமானது. அது நம்...