Home » 3. மாநில அரசுப் பணியின் தொடக்க நிலை
வேலை வாய்ப்பு

3. மாநில அரசுப் பணியின் தொடக்க நிலை

தமிழக அரசில் பணிபுரிய ஆசிரியர் பணியிடங்களுக்குத் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளை எழுதி வெற்றிபெற்று உள்ளேவர வேண்டும். அது தனி வரிசை. தனித் தகுதி. அதை விடுவோம். பொதுவான கல்வித் தகுதி படைத்த யாரும் மாநில அரசு இயங்கத் தேவையான அடிப்படை பணியாளர்கள் முதல் அதிகாரப் பணியாளர்கள் வரை சென்று அமரலாம். இவர்களைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தேர்ந்தெடுக்கிறது. தமிழக அரசிற்குப் பணிபுரியத் தேவையான அனைத்துப் பணியாளர்களையும் இவர்கள்தான் தேர்ந்தெடுக்கிறார்கள்.

TNPSC இணையதளத்திற்குள் சென்றால் ஆண்டுத் திட்ட அறிக்கை வெளியிட்டிருப்பார்கள். அதில் எந்தெந்த தேர்வுகள் எந்தெந்த மாதங்களில் வெளியாகும், வெளியாகி நடந்து முடிந்த தேர்வுகளின் நிலை, இனி நடக்கப்போகும் தேர்வுகள் என்ன போன்ற தரவுகள் அங்கே இருக்கும். அதில் நமக்குத் தகுதியான தேர்வெது என்று பார்த்து முடிவுசெய்ய வேண்டும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!