Home » Archives for செ இளங்கோவன்

Author - செ இளங்கோவன்

Avatar photo

நம் குரல்

‘தஹி’க்கு இங்கே ‘நஹி’

‘மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று அதனை விரும்புவதில்லை’ என்று மாவோ சொன்னதை நினைவூட்டி விட்டது மத்திய அரசு. நாம் அனைவரும் சாதாரணமாகப் பயன்படுத்தும் தயிர் விஷயத்தில் தனது முகமூடியைத் தானே விலக்கி, தனது உண்மையான முகம் இதுதான் என்பதைப் பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது...

Read More
நம் குரல்

ஆர்வத்தைத் தூண்டும் 2024 தேர்தல்!

எங்கள் வீட்டில் திருடிக் கொண்டு ஒருவன் ஓடினான் ‘திருடன் திருடன்’ என்று கத்தினேன் அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக என்னைக் கைது செய்து விட்டார்கள். – கவிக்கோ அப்துல் ரகுமான். ’பப்பு’ (சிறுவன்) என்று பாஜகவினரால் முன்பு கிண்டல் செய்யப்பட்ட ராகுல் காந்திதான் இன்று எல்லோராலும் பேசப்படும் அளவுக்கு...

Read More
நம் குரல்

டிஎம்எஸ்: ஒரே குரல்… எத்தனை அவதாரம்!

டி.எம். செளந்தரராஜன். சுமார் முப்பதாண்டு காலம் தமிழ்த்திரையுலகில் யாரும் எட்ட முடியாத உயரத்தில் கொடிகட்டிப் பறந்த, ஓர் அற்புதக் குரலோன். அவருக்கு, இந்த மார்ச் 24-ல் நூற்றாண்டு ஆரம்பம். சினிமாவில் இவர் பாடிய முதல் பாடல், ‘ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி’.  1950-ஆம் ஆண்டு, ‘கிருஷ்ண விஜயம்’ என்னும்...

Read More
நம் குரல்

இணையவழிச் சூதாட்டம்… தடுக்க என்ன வழி?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அவ்வப்போது ஆளுநர் பேசுபொருளாகாமல் இருந்தால்தான் ஆச்சரியம். அதன்படி இப்போதும் பேசுபொருளாகியிருக்கிறார். ஆக்கியது, ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதா. அதைச் சுமார் நான்கரை மாதகாலம் அங்கீகாரமளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்த ஆளுநர், இப்போது திடீரென்று அந்தச் சட்டத்தை...

Read More
நம் குரல்

எடப்பாடி என்ன செய்ய வேண்டும்?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்  அதிமுக கடுமையாகத் தோற்றதற்கும் திமுக கூட்டணி வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவன் மிக அதிக வாக்கு விதியாசத்தில் வெற்றி பெற்றதற்கும்  பலரும் பல காரணங்களைச் சொல்கிறார்கள். பணம் கொடுத்தார்கள்; பட்டியில் அடைத்தார்கள்; பிரியாணி போட்டார்கள் என்று சொல்லப்படும் காரணங்களை முழுமையாக...

Read More
நம் குரல்

போராட்டத்தில் என்ன பாரபட்சம்?

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேலம்பட்டியைச் சேர்ந்தவர் பிரபு. இவர் ஒரு இராணுவ வீரர். அதேபகுதியைச் சேர்ந்தவர், திமுக பேரூராட்சி கவுன்சிலர் சின்னசாமி. இருவர் குடும்பத்திற்கும் நீண்ட காலமாகவே குடும்பப் பிரச்னை. அதனால் இரு குடும்பங்களுக்கிடையிலான உறவு சரியில்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில்...

Read More
நம் குரல்

ஈரோடு கிழக்கின் தனிச் சிறப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல். ஒரு பொதுத்தேர்தலுக்கான ஆர்வத்திற்குச் சற்றும் குறையாத ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது. இதில் அப்படியென்ன ஆர்வம்? சூடு பறக்கும் இந்த இடைத்தேர்தல் களத்தில், காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ தென்னரசு ஆகிய இருவரோடு நாம் தமிழர்...

Read More
நம் குரல்

மோடிஜியும் அதானிஜியும்

‘நான் இந்த நாட்டு மக்களுக்காக வாழ்கிறேன். இந்த நாட்டுக்காகவே எனது வாழ்க்கையை அர்ப்பணம் செய்திருக்கிறேன். மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காகவே இங்கு வந்திருக்கிறேன். ஆகவே, உங்கள் அனைவரையும் எதிர்கொள்ளும் வைராக்கியம் எனக்கு இருக்கிறது’ என குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும்...

Read More
நம் குரல்

பேனா சிலையில் சர்ச்சை வேண்டாம்!

கலைஞருடைய பேனா எழுதிய அளவுக்கு, வேறு யாருடைய பேனாவும் எழுதியதில்லை. அந்தப் பேனாவின் எழுத்துதான் சிவாஜி  கணேசனை ‘பராசக்தி’யின் மூலம் ஒரே இரவில் சிகரத்தில் சிம்மாசனமிட்டு அமர வைத்தது. பழகு மொழியிலும் அழகு தமிழை அறிமுகப்படுத்தியது. கல்லாய்க் கிடந்த அகலிகை, இராமனின் கால் பட்டுப் பெண்ணானதுபோல், கவருடைய...

Read More
நம் குரல்

தேசபக்தி படும் பாடு

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான கௌதம் அதானி தலைமையில் இயங்கும் அதானி குழுமம், பங்குச் சந்தையில் திருகு வேலை செய்ததாகவும், கணக்கு மோசடியில் ஈடுபட்டதாகவும் ஹிண்டன்பர்க் என்னும் அமெரிக்க ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ஓர் அறிக்கையால் அதானி குழுமமே ஆட்டம் கண்டு நிற்கிறது. பங்குச் சந்தையில், அதன் பங்குகளின்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!