கலைஞருடைய பேனா எழுதிய அளவுக்கு, வேறு யாருடைய பேனாவும் எழுதியதில்லை. அந்தப் பேனாவின் எழுத்துதான் சிவாஜி கணேசனை ‘பராசக்தி’யின் மூலம் ஒரே இரவில் சிகரத்தில் சிம்மாசனமிட்டு அமர வைத்தது. பழகு மொழியிலும் அழகு தமிழை அறிமுகப்படுத்தியது. கல்லாய்க் கிடந்த அகலிகை, இராமனின் கால் பட்டுப் பெண்ணானதுபோல், கவருடைய பேனா பட்டுத்தான் தமிழ் சினிமா வசனங்கள் வாலிபமடைந்து வசீகரம் பெற்றன.
இதைப் படித்தீர்களா?
சென்னையைப் பொறுத்தவரை மழை என்பது ஆண்டுக்கு ஒரே ஒரு முறை வருகிற திருவிழா. அதுவும் சில சமயம் இல்லாமல் போக வாய்ப்புண்டு. தப்பித்தவறி பெரிய புயல், அடை...
நீலகிரியில் வடகிழக்குப் பருவமழையைப் பார்த்தவன் எவனும் நாத்திகனாக இருக்கமுடியாது. காற்றும், மழையும் இணைந்து பிரவகிக்கும்போது மனது இயற்கையின்...
ஓர் கலைஞனின் புகழை அவனது படைப்புக்களே காலத்திற்கும் புகழ் சேர்க்கும். மகாகவி காளிதாஸ், சுப்ரமண்ய பாரதி, ரவீந்திரநாத் தாகூர், கண்ணதாசன் போன்ற இன்னும் பல கலைஞர்களின் படைப்புகள் அவர்கள் மறைந்து பல நூறாண்டு கடந்த பின்னும் மக்களால் பேசப்படும். அவர்களின் சிறப்பை சிலை வைத்து வழிபாடு செய்து கொண்டாடித்தான் ஆகவேண்டும் என்பதில்லை. ராமானுஜர், வல்லபாய் படேல், புத்தர் சிலைகள் பெரிய பொருட்செலவில் அமைக்கப்பட்டதே தேவையற்ற ஒன்றுதான். அவர்கள் செய்த அதே தவறை நாமும் செய்ய வேண்டும் என்று அடம்பிடிப்பதும் அதற்காக சுற்றுசூழலையும் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்குவதும் ஏற்புடையதாக இல்லை. மேலும் இந்த சிலை அமைக்க மக்கள் பணம்தான் செலவிடப்படுகின்றது. மக்களின் எதிர்ப்பையும் மீறி மக்கள் பணத்தை செலவழித்து இம்மாதிரி சிலை அமைப்பது அநாவசியமானது. அத்தொகையில் மக்களின் நலத்தை மேம்படுத்த உதவும் திட்டங்களை செயல்படுத்தலாம். கலைஞரின் புகழை அந்த பேனா சிலைதான் நிலை நாட்டும் என்பது சரியல்ல. அவர் எழுதிய புத்தகங்களும் சினிமா வசனங்களும், அவர் ஆண்ட ஆட்சிக்காலங்களும் என்றும் நினைவில் நிறுத்தும். நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு.