Home » Archives for ராஜ்ஶ்ரீ செல்வராஜ் » Page 5

Author - ராஜ்ஶ்ரீ செல்வராஜ்

Avatar photo

கல்வி

உதவாத கல்வி முறையிலிருந்து ஒரு யு டர்ன்

நமது கல்வி முறையால் நம்மில் எத்தனை பேர் விரக்தியடைந்திருப்போம்? அதைவிட முக்கியமாக, எத்தனை முறை அதைச் சரி செய்ய முயன்றிருப்போம்? புனேவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்களின் கோபத்தை ஆக்கப்பூர்வமாக வெளிக்காட்ட நினைத்தார்கள். கல்வித் திட்டத்தில் தாங்கள் கொண்டுவர விரும்பிய மாற்றத்தை மற்றவர்களுக்குக்...

Read More
தொழில்

ஒசூரில் ஒரு ஜாம்ஷெட்பூர்

வீதிகள் அகலமானதாக இருக்க வேண்டும். அதன் இருபுறமும் நிழல் தரும் மரங்களை நட்டுவிடுங்கள். புல்வெளிகளும் தோட்டங்களும் விசாலமாக இருப்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். கால் பந்து, ஹாக்கி போன்ற விளையாட்டு மைதானங்கள் இருப்பதும் அவசியம். கோயில், மசூதி, தேவாலயங்களுக்கு மறக்காமல் இடம் குறித்து வைக்கவேண்டும். இன்றைய...

Read More
வர்த்தகம்-நிதி

பருத்தி மாஃபியா

பட்டர்பிளை எபெக்ட் (Butterfly Effect) சங்கதி நாம் அறிந்ததே. பூமியில் நிகழும் சிறு செயல்களின் தொடர் விளைவுகளால் ஏற்படும் பெரிய மாற்றத்தை பற்றியது அது. பங்களாதேஷ் விவகாரத்தின் ஒரு வரி குறிப்பும் அது தான். மாணவர் புரட்சியாகத் தொடங்கியது, கட்டுக்கடங்காமல் வலுப்பெற்ற போது, தனது பதவியை ராஜினாமா...

Read More
உலகம்

ஆக்சிஜனும் ஓர் ஆழ் கடல் அரசியலும்

வருடம் 2013. பேராசிரியர் ஆண்ட்ரூ ஸ்விட்மேன் தலைமையிலான குழு ஆய்வுப்பணிகளுக்காகக் கிளம்பியிருந்தது. அவர்கள் ஸ்காட்டிஷ் கடல் அறிவியல் சங்கத்தைச் சேர்ந்தவர்கள். அது உலகளவில் பெரிய, பழமையான கடல் ஆய்வு மையம். அவர்கள் சென்றிறங்கிய இடம், பசிபிக் பெருங்கடலின் கிளாரியன்-கிளிப்பர்டன் மண்டலம். ஹவாய்க்கும்...

Read More
இயற்கை

வயநாடு : பேரிடரும் பெருந்துயரும்

வயநாடு. ஜூலை 30 , 2024 . நள்ளிரவைக் கடந்தும் மேகங்கள் அழுது வடிந்து கொண்டிருந்தன. குளிரும் மழையும் அம்மக்களுக்குப் புதிதல்ல என்றாலும், அன்றைய பேய்மழை ஏற்படுத்தப் போகிற நாசத்தை, அப்போது ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கேரளத்தில் குறுகிய தூரத்திற்குப் பாயும் ஆறுகள்...

Read More
விளையாட்டு

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024: ஒரு ரவுண்ட் அப்

கொட்டும் மழையில் சொட்டச் சொட்ட நனைந்தபடி போட்டியாளர்கள் செய்ன் நதியில் வலம் வர, பாரிஸில் ஜெகஜோதியாகத் தொடங்கியிருக்கிறது 2024 ஆண்டுக்கான ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள். ஜூலை 26 ஆம் தேதி அந்நாட்டு நேரப்படி மாலை 7 .30 மணியளவில் நிகழ்வுகள் ஆரம்பமாகின. சுமார் நான்கு மணி நேர நிகழ்ச்சிகளுக்குப்...

Read More
கிருமி

ஜிகா: தாய்க்குலத்தைக் குறி வைக்கும் கிருமி!

புனேவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கும் அவருடைய பதினைந்து வயது மகளுக்கும் அண்மையில் ஜிகா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவின் புனே, கோலாப்பூர், சங்கம்னர் பகுதிகளில் ஜிகா வைரஸ் காய்ச்சல் கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகிறது. பருவ ல மாற்றங்களின் போது ஏற்படும் நோய்த்...

Read More
பெண்கள்

சரியும் பெண் தொழிலாளர் விகிதம்: சரியா இது?

மும்பை ஐ.ஐ.எம்.-இல் இந்த ஆண்டு சேர்க்கையில், மாணவிகள் அதிக அளவில் இடம்பிடித்துள்ளனர். அதுவும் கடந்த ஆண்டைவிட இரண்டு மடங்கு அதிகமாக. அனுமதிக்கப் பட்ட 518 பேரில் 245 பேர் பெண்கள். இது அந்தக் கல்வி நிறுவனத்தின் வரலாற்றில் புதிய மைல்கல். இதே போன்றதொரு எண்ணிக்கை அடிப்படையிலான ஆய்வறிக்கை ஒன்று...

Read More
ஆளுமை

கண்டெண்ட் க்ரியேட்டர்களின் குலசாமி!

கடந்த வாரம் சென்னை கீழ்க்கட்டளை, போரூர், மேடவாக்கம் பகுதிகளில் மிஸ்டர் பீஸ்ட் என்ற பெயரில் மிகப்பெரிய விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. இரண்டரை லட்சங்களை அதற்கு உபயமாக அளித்தவர்கள், தமிழ் யுடியூபர்கள். காரணம் இல்லாமல் இல்லை. ஜேம்ஸ் ஸ்டீபன். ஜிம்மி டொனல்டுசன் என்னும் பெயர் கொண்ட மிஸ்டர்...

Read More
இந்தியா

துருவ் ரதே: பாஜகவின் புதிய வில்லன்

டெல்லியைக் கைப்பற்ற உத்தரப் பிரதேசம் முதல் படி. கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களிலும் அனாயாசமாக வாரிச் சுருட்டிய பா.ஜ.க., இம்முறை அடி சறுக்கியிருக்கிறது. ஏற்பட்ட சேதங்களுக்குக் காரணகர்த்தாக்களாக இருப்பவர்களில் ஒருவர்தான் ‘நமஸ்காரம் தோஸ்த்தோன்’ என்று தொடங்கும் காணொளிகளில் வரும் துருவ். வடமாநில தேர்தல்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!