SREC எனப்படும் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, ஆயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்று நான்காமாண்டு தொடங்கப்பட்ட சுயாட்சிப் பொறியியல் கல்லூரி. பன்னிரண்டு இளங்கலை படிப்புகளையும் ஏழு முதுகலை படிப்புகளையும் கல்லூரி வழங்குகிறது. 2012 ஆம் ஆண்டு முதல், அக்கல்லுரியின் முதல்வராக இருக்கும் முனைவர் என்.ஆர்...
Author - ராஜ்ஶ்ரீ செல்வராஜ்
புத்தகங்கள் ஒருவரது வாழ்க்கையை என்ன செய்யும்? அதிகம் சிரமப்பட வேண்டாம். சென்னை கேகே நகர் டிஸ்கவரி புக் பேலஸுக்குச் சென்று வேடியப்பனைச் சந்தியுங்கள். வாசிப்பையும் வாழ்வையும் பிரிக்க முடியாதவர்களின் வளர்ச்சி எவ்வளவு வண்ணமயமாக இருக்கும் என்று கண்கூடாகத் தெரியும். சினிமாக் கனவுகளோடு சென்னை வந்தவர்...
பொன்னி நதி பாக்கணுமே… இன்று ஊர் முழுக்கப் பாடிக்கொண்டிருப்பது இதைத்தான். மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இந்தப் பாடலைப் பற்றிப் பேசாதவர்கள் இல்லை; எழுதாத செய்தி இல்லை. சில நூறு பேர்கள் மட்டும் புழங்கும் இலக்கிய வட்டத்துக்குள் தெரிந்த பெயராக இருந்த இளங்கோ...
நெருங்கிய சொந்தங்கள், நண்பர்கள் என்று குறுகிய வட்டத்திற்குள் தான் தொண்ணூறுகள் வரையிலும் நம் ஊரில் மாப்பிள்ளை/ பெண் தேடும் படலங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அப்போதெல்லாம் ஐந்து பத்துப் பேரைப் பார்த்து விசாரிப்பதே பெரிய விஷயம். அப்படியிருக்கையில், தன் இணையத் தளம் மூலம், தடாலடியாக லட்சக்கணக்கான...
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது கற்காலம். இன்று அவை இணையத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. நிச்சயம் என்றால் மாப்பிள்ளையும் பெண்ணும் பேசிப் பார்த்துச் சம்மதம் சொல்வது மட்டுமல்ல. பெரியவர்கள் தட்டு மாற்றிக் கொள்ளும் சடங்குகூட கூடப் பெரும்பாலும் ஆன்லைனிலேயே நடந்து முடிந்துவிடுகிறது. குறிப்பாக...
மன அழுத்தம்தான் இன்றைக்கு மக்களின் பெரும் பிரச்னை. அது வருவதற்கு எத்தனையோ காரணங்கள். வீடு, அலுவலகம், நட்பு வட்டம் என்று எங்காவது ஏதாவது வடிவில் வருகிற ஒரு சிறு பிரச்னைகூட பூதாகாரமாகி மனத்தைக் கவ்வி, சோர்வடைய வைத்துவிடும். அப்போது என்ன செய்கிறோம் என்று தெரியாமல் இஷ்டத்துக்குச் சாப்பிடத்...
கோவை, பஞ்சாலைகளுக்குப் புகழ் பெற்ற நகரம். இப்படிச் சொல்லி விடுவது எளிது. ஆனால் தரமான பஞ்சை இனம் காண்பது எளிதல்ல. பஞ்சின் நீளம் எவ்வளவு? அது நன்றாக விளைந்துள்ளதா? பலம், தடிமன் சரியான அளவில் உள்ளதா? அந்தப் பஞ்சின் வியர்வை உறிஞ்சும் தன்மை எந்த அளவில் இருக்கிறது? ஆடை நெய்யும் தரம் உள்ளதா? இந்தப்...
கல்லூரி நண்பர்கள் சிலர், ஒரு மருந்து கம்பெனிக்கு இண்டர்வியூ சென்றார்கள். சும்மாதானே இருக்கே. நீயும் கூட வாவென அந்த இளைஞனை உடன் அழைத்தார்கள். அவனும் சென்றான். வர்றது வர்றே. நீயும் இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணலாமே என்றார்கள். அவர்கள் சொன்னதற்காக இண்டர்வியூவும் அட்டெண்ட் செய்தான். இறுதியில் நண்பர்களுக்கு...
நல்லவர் ஒருவர் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைகிறார். தேவையான அனைத்துப் பொருள்களையும் எடுத்துப் பையில் போட்டுக்கொண்டு நேரே வெளியே வந்துவிடுகிறார். பில் கவுண்ட்டர் பக்கம் போகவில்லை. பணமும் செலுத்தவில்லை. நடப்பது இங்கல்ல. அமெரிக்காவில் சிகாகோ நகரத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில். உடனே நமக்கு...
அந்த மாணவனுக்குக் கணினி அறிவியல் மிகவும் இஷ்டம். ஆனால் கணக்கு வராது. ஆங்கிலம் அடியோடு வராது. ப்ளஸ் டூவில் அவன் சேரும்போது கணிதம் மற்றும் ஆங்கிலப் பாடத்தோடு சேர்ந்ததுதான் கணினி அறிவியல் பாடப் பிரிவு (Computer science group). ஆனாலும் கணினி படித்தே ஆக வேண்டும் என்ற வேட்கை. கணினிப் பாடப் பிரிவைக்...