Home » Archives for பா. ராகவன் » Page 11

Author - பா. ராகவன்

Avatar photo

சலம் நாள்தோறும்

சலம் – 4

4. தோன்றாத் துணை நீ என்னைத் தொட்டாயா என்று கேட்டேன். அவள் பதில் சொல்லவில்லை. சிறிது நேரம் காத்திருந்துவிட்டு மீண்டும் கேட்டேன். ‘இல்லை சகோதரனே’ என்று கன்னுலா சொன்னாள். ‘அப்படியா? என் உச்சந்தலையில் ஓர் உள்ளங்கை படிந்து மீண்டது. கணப் பொழுதுதான் இருக்கும். ஆனால் கரம் பட்டதை உணர்ந்தேன். பிரமையல்ல.’...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 3

3. தேவி நண்பகல் வரை நிற்காமல் நடந்துகொண்டிருந்தேன். வழியில் சில காட்டுக்குடிகளைக் கடக்கவேண்டியிருந்தபோது, தென்பட்ட மூப்பர்களிடம் சந்தேகம் எழாதவண்ணம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தேன். அவன் பெயரைக்கூட யாரும் அறிந்திருக்கவில்லை. அதுவல்ல விஷயம். ஒரு பிராமணனைக் குறித்து நான் விசாரிப்பதையே அவர்கள் யாராலும்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 2

2. பாதம் தொட்டவன் அவன் தன்னை துவன்யன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டான். ஏழு-ஏழரை அடி உயரமும் மணலின் நிறமும் கட்டுறுதி மிக்க உடலும் கொண்டவனாக இருந்தான். கண்ணுக்குக் கண் பார்த்தபோது மரியாதையுடன் புன்னகை செய்தான். ‘அந்நியனே, நீ யாராக வேண்டுமானாலும் இரு. ஆனால் இப்படி நீருக்கடியில் அமர்ந்துகொண்டு காலைப்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 1

1. கருவி சலங்களின் நடுவே அமிர்தம் உண்டு. சலங்களில் சிகிச்சை உண்டு. – அதர்வ வேதம்   ஒளி நிறைந்து படர்ந்திருந்தது. கண்ணுக்குப் புலப்படாத தொலைதூரச் சுரங்கங்களில் இருந்து அதனை இழுத்து வரும் நதியே வானை நோக்கி வெளிச்சத்தை வீசியெறிந்துகொண்டிருப்பதாகத் தோன்றியது. இருளையும் ஒளியையும் காற்றையும்...

Read More
சாத்தானின் கடவுள் தொடரும்

சாத்தானின் கடவுள் – 25

25. யாரால்? கடவுளைப் பற்றிய கண்டுபிடிப்பு முயற்சிகளில் ஈடுபட்டவர்கள் பொதுவாக ஒரே ஓர் அம்சம் தவிர மற்ற எதிலும் ஒத்துப் போக மாட்டார்கள். அந்த ஒத்துப் போகும் ஓரம்சம் – உருவமில்லை என்பது. உருவமில்லாத கடவுளுக்கு பிரம்மம் என்றும் அல்லா என்றும் தேவனென்றும் மதங்கள் தம் விருப்பப்படி பெயரிடுகின்றன...

Read More
சாத்தானின் கடவுள் தொடரும்

சாத்தானின் கடவுள் – 24

24. ஒளியிலே தெரிவது  வள்ளலார் 1823 ஆம் ஆண்டு பிறந்தவர். அவரது தாயார், அவரது தந்தைக்கு ஆறாவது மனைவி. முதல் ஐந்து பேரும் பிரசவ காலத்தில் இறந்திருக்கிறார்கள். அந்தக் கணக்கை நேர் செய்வது போல, ஆறாவதாக மணந்த பெண்ணுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்திருக்கின்றன. வள்ளலார், ஐந்தாவது. குழந்தை பிறந்த ஐந்தாம் மாதம்...

Read More
சாத்தானின் கடவுள் தொடரும்

சாத்தானின் கடவுள் – 23

23. தீயினிலே வளர் சோதி வள்ளலார் என்று நாமறிந்த ராமலிங்க அடிகளை ஒரு வகையில் எதிர் புத்தர் என்று சொல்ல இயலும். இருவரது தேடலின் வழிகள் வேறு வேறு என்றாலும் விளைவு ஒன்று. கண்டடைந்தது ஒன்று. இருவரும் பயன்படுத்திய கருவியும் ஒன்றே. அறிவின் துணை கொண்டு மட்டுமே தமது தேடலின் விளைவைப் பகுப்பாய்வு செய்தவர்கள்...

Read More
சாத்தானின் கடவுள் தொடரும்

சாத்தானின் கடவுள் – 22

22. பாதையும் பயணமும் நீங்கள் ஒன்றைக் கவனித்திருக்கலாம். இலங்கையில் எப்போதெல்லாம் தமிழர்கள் மீது சிங்கள அரசு கொடுந்தாக்குதலைக் கட்டவிழ்த்துவிடுகிறதோ அப்போதெல்லாம் இங்கே ஒரு விமரிசனம் வரும். பவுத்தத்தைப் பின்பற்றும் நாடும் மக்களும் இவ்வளவு ரத்த வெறி பிடித்து அலைவதைக் கவனியுங்கள் என்பார்கள். அல்...

Read More
சாத்தானின் கடவுள் தொடரும்

சாத்தானின் கடவுள் – 21

21. பற்று உடலையும் மனத்தையும் வசப்படுத்துவதன் மூலம் சித்தத்தை சிவத்தில் நிலைநிறுத்த வழி சொன்ன சித்தர்களைப் பற்றிப் பார்த்துக்கொண்டிருந்தோம். தவிர்க்க முடியாமல் இந்த இடத்தில் சித்தருக்கு எதிர்ப்பாதையில் சென்ற புத்தரைச் சிறிது கவனிக்க வேண்டியிருக்கிறது. கவனம். நாம் பவுத்தத்துக்குள் செல்லப் போவதில்லை...

Read More
சாத்தானின் கடவுள் தொடரும்

சாத்தானின் கடவுள் – 20

20. உயிர்த் தீயினிலே வளர் சோதி யோசித்துப் பார்த்தால், இரண்டு விஷயங்கள் சார்ந்த வியப்பு உலகமுள்ள வரை தீரவே தீராது. முதலாவது சுவாசிப்பது. இரண்டாவது உணவு தேடுவது. பசி என்ற உணர்ச்சி இருக்கும்வரைதான் உயிர்கள் எதையாவது செய்துகொண்டிருக்கும். அது இல்லை என்றாகிவிட்டால் ஒன்றும் செய்யவேண்டிய அவசியம் இருக்காது...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!