12. இன்னும் சில பழக்கங்கள் சம்பளம், கும்பளம் தொடர்பான மீதமுள்ள அனைத்துப் பழக்கங்களையும் இந்த அத்தியாயத்தில் பார்த்துவிடுவோம். 9. அறிமுகப்படுத்திச் சம்பாதித்தல் என்னுடைய பழைய அலுவலகத் தோழர் ஒருவருக்கு நட்பு வட்டம் பெரியது. கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் இளைஞர்களில் தொடங்கி, விரைவில் ஓய்வு...
Author - என். சொக்கன்
11. மேலும் சில பழக்கங்கள் சம்பளம், கும்பளம் தொடர்பான பழக்கங்கள் தொடர்கின்றன. 4. வருமான வரி திரும்பக் கிடைக்குமா? ஒரு நாட்டில் உள்ள குடிமக்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பது அவர்களுக்குத்தான் தெரியும், அரசாங்கத்துக்குத் தெரியாது. அதனால், நிதி ஆண்டு முடிந்தபிறகு, அந்தக் குடிமக்கள்...
10. வரிப்புலி ஆவோம் சம்பளம், கும்பளத்துடன் தொடர்புடைய முதன்மையான தலைப்புகளை நன்கு விரிவாகப் பார்த்துவிட்டோம். இப்போது, மீதமுள்ள சிறு தலைப்புகளைச் சில பழக்கங்களாகத் தொகுத்துப் பார்ப்போம். 1. நம் மதிப்பை அறிந்திருத்தல் நீங்கள் எந்த வேலை செய்தாலும் சரி, எங்கு வேலை செய்தாலும் சரி, உங்களுக்குக்...
9. சிகிச்சை, சிக்கல்கள், தீர்வுகள் வீட்டில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் என்பது யாருக்கும் மிகுந்த பதற்றத்தை உண்டாக்கக்கூடிய சூழல். அந்த நேரத்தில் மக்கள் என்ன செய்வது, எப்படிச் செய்வது என்று புரியாமல் குழம்பிப்போய் நிற்பதுதான் இயல்பு. அந்த நேரத்தில் உங்களுக்குள் எழக்கூடிய ஆயிரம்...
8. மருத்துவக் காப்பீடு ஆயுள் காப்பீடு உயிருக்குக் காவல் என்றால், நலக் காப்பீடு உடலுக்கும் மனத்துக்கும் காவல். உலகெங்கும் மருத்துவச் செலவுகள் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக, மருத்துவமனையில் சேர்த்துச் செய்யவேண்டிய அறுவைச் சிகிச்சைகள், அதற்கு முந்தைய, பிந்தைய பரிசோதனைகள்...
7. ஆயுள் காப்பீடு ‘கடவுளை நம்புங்கள். ஆனால், உங்கள் ஒட்டகத்தைக் கட்டிவையுங்கள்’ என்று ஒரு பழைய அறிவுரை உண்டு. காலப்போக்கில் இதில் ஒட்டகத்துக்குப் பதில் மிதிவண்டி, வீட்டுக் கதவு என ஏதேதோ நுழைந்துவிட்டன. ஆனால், இவை அனைத்தின் மையச் செய்தி ஒன்றுதான்: வாழ்க்கையின்மீது நம்பிக்கை வேண்டும்...
6. விட்டாச்சு லீவு! என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் சொந்தமாக ஒரு மென்பொருள் நிறுவனம் வைத்திருக்கிறார். அந்த நிறுவனத்தில் சுமார் ஐம்பது பேர் வேலை செய்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் இவர் ஒரு வேலை செய்வார். தன்னிடம் வேலை செய்கிற ஐம்பது பேரும் அந்த ஆண்டில் (அதாவது, ஜனவரி முதல்...
5. ஓய்வுக்கால நிதி சிறுவயதில் ‘எறும்பும் வெட்டுக்கிளியும்’ என்று ஒரு கதை படித்திருப்பீர்கள், அல்லது, கேட்டிருப்பீர்கள். அந்தக் கதை உங்களுக்கு நினைவிருக்கிறதா? காட்டில் ஓர் எறும்பு சுறுசுறுப்பாக உழைத்துத் தானியங்களைச் சேர்த்துவைக்கும். வெட்டுக்கிளியோ, ‘வாழ்க்கை வாழ்வதற்கே’...
4. கும்பளம் முன்பெல்லாம் யாராவது தன்னுடைய வேலையைப்பற்றி அல்லது தொழிலைப்பற்றிப் பேசினால், ‘அது சரி, மாசாமாசம் சம்பளம் எவ்வளவு வருது? கிம்பளம் ஏதும் உண்டா?’ என்று கேட்பார்கள். சம்பளம் புரிகிறது. அதென்ன கிம்பளம்? நாம் எல்லாரும் வண்டி, கிண்டி, கலாட்டா, கிலாட்டா, வம்பு, கிம்பு, மழை, கிழை...
3. சம்பள ஆராய்ச்சி நமக்குப் பணத்தைக் கொண்டுவரும் குழாய்களை வருவாய் மூலங்கள் அல்லது வழிகள் (Income Sources/Channels) என்கிறார்கள். இதை நாம் எளிமையாகப் ‘பணவழிகள்’ என்று சொல்வோம். எடுத்துக்காட்டாக, ஒருவர் அலுவலகம் சென்று வேலை பார்த்துச் சம்பளம் பெறுகிறார், இன்னொருவர் கடை வைத்துப் பொருட்களை...