இகவின் பள்ளிப் பருவம் திருநெல்வேலியில் கழிந்தது. அப்போது அங்கே பக்கத்து வீட்டில் குடியிருந்தவர் முருகேசண்ணன். இக பத்தாம் வகுப்பில் நுழைந்திருந்த நேரம், வீட்டில் அவருக்குப் பெண் பார்த்துக் கொண்டிருந்தார்கள். தமிழில் என்றில்லை.. உலகின் சகல மொழிகளிலும் முருகேசண்ணனுக்குப் பிடிக்காத ஒரே ஒரு வார்த்தை...
Author - பால கணேஷ்
இகவுக்குச் சிறுவனாய் இருந்தபோதிலிருந்தே காதலித்துக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்று ஒரு கனவு இருந்தது. வாலிபப் பிராயத்தை எட்டியதும், அவனும் பல பெண்களைக் காதல் செய்தான். ஆனால் பாருங்கள்… எந்தப் பெண்ணும் இவனைக் காதல் செய்யவில்லை என்பதால் வேறு வழியின்றி, வீட்டில் பார்த்த பெண்ணே இகவின்...
அன்றைய தினம் பொழுது விடிந்ததிலிருந்தே ‘ருத்ரன்’ படத்தை நாலு தடவை பார்த்துத் தொலைத்தவள் போல வெறுப்பாக எரிந்து விழுந்து கொண்டிருந்தாள் இகவின் மனைவி. மனைவியானவளின் எரிச்சல் வசவுகளைத் தாங்கி ஓரளவு ‘எரிச்சல் ப்ரூஃப்’ ஆகவே இக இருந்தான் என்றாலும் இன்றைய எரிச்சலின் காரணத்தை அவனால் யூகிக்கவே முடியவில்லை...
இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்த வேட்பாளர் போலக் கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருந்த இகவின் அருகில் வந்தாள் மனைவி. “என்னங்க, ஏன் இப்டி டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர்ல எதையோ லவட்டிக்கிட்டு வந்தவன் மாதிரி ‘ழே’ன்னு முழிச்சுட்ருக்கீங்க..? என்னாச்சு..?” கையிலிருந்த ஏடிஎம் கார்டைக் காட்டினான் இக. “இதைப் போட்டு பணம்...
இகவுக்குத் திருமணம் ஆன புதிதில் சில காலத்திற்கு ஒரு விசித்திரமான வியாதியால் பீடிக்கப்பட்டிருந்தான். ‘வியாதியில் என்னய்யா விசித்திரம்..?’ என்பீராயின்… இருக்கிறது. சாதாரணமானவனாக இயல்பாக அனைவருடனும் பேசிக் கொண்டிருக்கும் இகவின் காதில் அந்த ஒற்றை வார்த்தை விழுந்தால் போதும்… வெறி கொண்டவனாக...
மொபைலில் எதையோ நோண்டிக் கொண்டிருந்த இகவின் அருகில் வந்தாள் மனைவி. “என்னங்க… என்ன பண்ணிட்ருக்கீங்க..?” அவள் குரலில் அக்கறையும் கனிவும் தொனித்தாலே அதன் பின்னால் ஏதோ அவனுக்கு ஆபத்தான ஒன்று இருக்கும் என்பதை அனுபவம் உணர்த்தியதால் சற்றே கலவரத்துடன் ஏறிட்டான். “ஒண்ணுமில்ல. சும்மா யூட்யூப்ல...
இகவானவன் வெகுநாட்களாக ஓர் இருசக்கர வாகனம் வாங்கி இன்னபிற நகரத்து மாந்தர் போன்று, ஹெல்மெட் அணியாமலும் சாலை விதிகளை மதிக்காமலும் விரைய வேண்டுமென்று பேராவல் கொண்டிருந்தான். ஆனால் மனைவியாகப்பட்டவளோ முட்டுக்கட்டை போட்டால்கூடப் பரவாயில்லை, கையில் விறகுக் கட்டையையே தூக்கிக் காட்டினாள். “உங்களுக்கு வர்ற...
விதியானது சிலரின் வாழ்க்கையில் எக்கச்சக்கமாகக் கபடி விளையாடி விடுகிறது. அப்படியானதொரு விளையாட்டில்தான் இக ஓர் எழுத்தாளனாய் உருவெடுத்தான். எந்தவொரு பத்திரிகைக்கும் ‘வாசகர் கடிதம்’ அல்லது ‘சொல்லக் கேட்டவர்’ என்று துணுக்கோகூட எழுதியறியாதவனாக ‘பெருமாளே’ என்று மனைவி அவனைத் தாக்க, அவனை மனைவி தாக்க என்று...
இகவுக்கு எலிகள் என்றால் மிகவும் பிடிக்கும். அது தும்பிக்கைமுகக் கடவுளின் வாகனம் என்பதால் பிடிக்கும் என்று நீங்கள் நினைத்தீர்களென்றால் உங்களுக்கு பூஜ்யம் மார்க். இகவின் மனைவிக்கு எலிகள் என்றால் கிஞ்சித்தும் பிடிக்காது. எனவே, இகவுக்கு எலிகள் என்றால் மிகப் பிடிக்கும். அப்படியாகப்பட்ட இகவே ஒருசமயம்...
நம் இகவுக்குச் சிறுவயதிலிருந்தே அடியோடு பிடிக்காத விஷயம் ஒன்று உண்டென்றால், அது வீடுகளில் நாய் வளர்ப்பது. அந்த வர்க்கத்தைத் தனது முதல் எதிரியாக என்றும் நினைக்கிறான். அதற்குப் பல காரணங்கள் உண்டு. சிறுவன் இகவின் பக்கத்து வீட்டுக்காரரொருவர் நாய் வளர்த்து வந்தார். அப்புத்திசாலியானவர், நாயைத் தன்...