தாமிரபரணி பாயும் – ஓடும் அல்ல – நிஜமாகவே பாயும் சேரன்மகாதேவிக்கு அருகில் உள்ள சின்ன கிராமம் கூனியூர். ‘கூனியூருக்குப் போகணும்னா...
வணக்கம்
நேற்று இருந்து, இன்று இல்லாமல் போய்விட்டவற்றை நினைவுகூரும் விதமான இந்த இதழின் சிறப்புப் பகுதியில் முதலில் மூன்று கட்டுரைகள் வெளியிட நினைத்திருந்தோம். பிறகு அது நான்கானது. அதுவே ஐந்தாகி ஆறுமானது. விஷயம் அதுவல்ல. அறுபது கட்டுரைகள் வெளியிட்டாலும் இந்தக் குறிப்பிட்ட இயல் மட்டும் முழுமையடைய வாய்ப்பே இல்லை என்பதைக் கண்டுகொண்ட தருணம் இருக்கிறது பாருங்கள்! அது, அபாரம்.
சிறு வயது முதல் நாம் மறந்து தொலைத்தது, இழந்து வருந்தியது, விரும்பி விலக்கியது என்று நம் வாழ்விலிருந்து காணாமல் போய்விட்டதையெல்லாம் மீட்டுவிட முடிந்தால் எவ்வளவோ நன்றாக இருக்கும் என்று எண்ணாதவர் இருக்க முடியாது. ஆனால் எதை நம்மால் அப்படியே மீட்க முடிந்திருக்கிறது? நபர்களின், இடங்களின், பொருள்களின், சம்பவங்களின் வாசனையை நினைவில் மீட்க முடிந்தாலே திருப்தியடைந்துவிடுகிறோம். உண்மையில் கை நழுவிச் சென்றதெல்லாம் காலம் கொள்ளை கொண்டு போனவைதாம்.
இந்த இதழில் ஹரன் பிரசன்னா எழுதியிருக்கும் திருநெல்வேலியின் திரையரங்குகள் குறித்த ஒரு கட்டுரை போதும். தனது பால்யத்தின் வழியாக நம் ஒவ்வொருவரின் பால்யத்துக்குள்ளும் நுழைந்து வெளியேறும் அற்புதத்தை அதில் அவர் நிகழ்த்திக் காட்டியிருப்பதை மிகவும் ரசிப்பீர்கள்.
இருபது வருடங்களுக்கு முந்தைய தமிழ் இணையத்தளங்கள், முப்பது வருடங்களுக்கு முந்தைய தமிழர் வாழ்க்கை, நாற்பது வருடங்களுக்கு முந்தைய கேளிக்கை அனுபவங்கள், ஐம்பதாண்டுகளுக்கும் முற்பட்ட வீட்டுப் பயன்பாட்டு உபகரணங்கள் என்று இந்த இதழெங்கும் பழமையின் நறுமணம் நீக்கமற நிறைந்திருக்கிறது.
கடந்து சென்ற எதையும் நம்மால் மீட்டெடுக்க முடியப் போவதில்லை. குறைந்தபட்சம் நினைவில் சேமித்து, நீந்திக் களிக்கலாமல்லவா?
சென்ற வாரம் காலமான இங்கிலாந்து ராணி எலிசபெத் குறித்து ஜெயரூபலிங்கமும் ராணியின் ‘ராணிப் பதவி நீக்கிய’ தோற்றத்தைக் குறித்து பாபுராஜ் நெப்போலியனும் இந்த இதழில் எழுதியிருக்கிறார்கள். அமீகரகத்தில் மழையின் பொருட்டு கடைப்பிடிக்கப்படுகிற ‘க்ளவுட் சீட்டிங்’ நுட்பம் பற்றிய நசீமாவின் கட்டுரை மிகவும் முக்கியமானது. அதைப் போலவே கிரிப்டோ கரன்சி வர்த்தகம் தொடர்பான தியாகராஜனின் அறிமுகக் கட்டுரையும் பல திறப்புகளைத் தரவல்லது.
சென்ற வாரம் வெளியான இளையராஜா சிறப்புக் கட்டுரைகள் பெற்ற வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியளித்தது. காலம் என்னவாக மாறினாலும் மக்களின் அடிப்படை விருப்பம், ரசனை, ஆர்வங்கள் அடியோடு மாறிவிடுவதில்லை என்பதை அது புரிய வைத்தது. அது தந்த ஊக்கத்திலேயே இந்த இதழை உருவாக்கியிருக்கிறோம்.
படித்துவிட்டு உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். மேலும் பல சிறப்பான படைப்புகளுடன் அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போம்.
சிறப்புப் பகுதி: காணாமல் போனவை
வளர்ந்த நாடு என்று இன்று சொன்னாலும் அமெரிக்கா வளர்ந்துகொண்டிருந்த காலம் ஒன்று உண்டல்லவா? அன்று அமெரிக்கர்களின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்? சில...
தமிழ் இணையம் செயல்படத் தொடங்கிய காலத்தில் உயிர்ப்புடன் இருந்த பல இணையத்தளங்கள் இன்று இல்லை. அல்லது இருக்குமிடம் தெரியாமல் இருக்கின்றன...
1959ம் ஆண்டு பரிசோதனை முயற்சியாக தூர்தர்ஷன் தனது சிறிய சேவையைத் தொடங்கியது. ஒரு குழந்தை வளர்வதைப்போல் இருபத்து மூன்றாண்டுகள் மெதுவாக வளர்கிறது...
என் மகளுடைய பாடப் புத்தகத்தில் புல்லி (கப்பி) பற்றி விளக்குவதற்கு இப்போதும் கிணறு படம் தான் இருக்கிறது. பென்டுலம் (ஊசல்) பற்றி விளக்க அந்தக் காலக்...
இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு டிரைவ் இன் உட்லண்ட்ஸ் என்றால் தெரியாது. (2008ல் அது மூடப்பட்டு, பிறகு செம்மொழிப் பூங்கா ஆனது.)...
உலகைச் சுற்றி
28 ஏப்ரல் 2025, திங்கள் கிழமை மதியம் பன்னிரண்டரை மணியளவில் ஐபீரியத் தீபகற்பம் என அழைக்கப்படும் ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளின் பகுதிகளில் ஒரு திடீர்...
வியட்நாம் போர் முடிந்த ஐம்பது ஆண்டு நிறைவு அண்மையில் அனுசரிக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் வட வியட்நாம் படையினர் தென் வியட்நாம் தலைநகரான...
நைஜீரியாவில் தாய்மதத்துக்குத் திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இன்றைய தேதியில் இதுதான் அந்தப் பிராந்தியத்தின் தலைப்புச் செய்தி. நைஜர் ஆற்றின்...
அரசியல் தலைமைகளை மதிப்பிடுவதற்கு அமெரிக்காவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் அளவுகோல் ‘நூறு நாள் மதிப்பீடு’ ஆகும். குற்றவாளியாகக்...
ருசிகரம்
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத முகாம்களின்மீது இந்தியா...
தொடரும்
சஞ்சய் காந்திக்கு நேரெதிரான மென்மையான குணம் கொண்டவர் ராஜிவ் காந்தி. சிறு வயது முதலே அவர்களின் சுபாவம் அப்படித்தான். ராஜிவ் பிறந்து சுமார் இரண்டு வருடங்களுக்கு எல்லாம் சௌகரியமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. 1946ல் இந்திரா காந்தியும், ஃபெரோஸ் காந்தியும் அலகாபாத்திலிருந்து லக்னௌவிற்கு இடம்...
16 புதியதோர் உலகம் எதிரும் புதிருமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு இரவு வெகுநேரம் கழித்துத் தூங்கச் சென்றவன், படுத்ததும் பயணக் களைப்பில் தூங்கிவிட்டான். அப்போதுதான் படுத்ததைப் போலிருந்தது. யாரோ உலுக்கி எழுப்பப் பதற்றத்துடன், என்ன என்ன எனக் குழறியபடி எழுந்து படுக்கையில் உட்கார்ந்துகொண்டு...
ஜில்லா படத்தில் மோகன்லால் ஒரு பெரிய ரவுடி. அவருடைய செயல்களினால் வரும் பாதிப்புகளைப் பார்த்துத் திருந்தும் மகனாக வரும் விஜய், தந்தையை எதிர்த்து வேலை செய்வார். இந்தக் கதையைப் போன்றது, ட்விட்டர் (தற்போது எக்ஸ்) நிறுவனத்தால் தொடங்கப்பட்ட “ப்ளூஸ்கை” செயலியின் கதை. ட்விட்டர் நிறுவனரான ஜாக் டோர்சி, அதன்...
மண் சொல்லும் சேதி இரண்டாயிரத்து இரண்டாம் வருடத்தின் ஆகஸ்ட் மாதம் அது. இங்கிலாந்திலுள்ள சொஹம் (Soham) கிராமத்தினர் மிகவும் கவலையாக இருந்தனர். ஹோலியையும் ஜெசிக்காவையும் நீண்ட நேரமாகத் தேடியும் கண்டுபிடிக்கமுடியவில்லை. இருவரும் பத்து வயதே நிரம்பிய இணைபிரியாத் தோழிகள். இனிப்பு வாங்கி வருவதாகச்...
15 நரகம் கையைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டான். சற்று நேரம் அமைதியாக இருந்தவன், ‘நீ பின்னால் உட்கார். நான் ஓட்டுகிறேன்‘ என்றான். ‘இட்ஸ் ஓகே நர்ஸி. நானே ஓட்டுகிறேன்‘ என்றாள் அவள். கொஞ்ச நேரம் ஒன்றும் சொல்லாமல் இருந்தவன், ‘இல்லை. வண்டியை நிறுத்து நான்...
154. டிரக்கில் பயணித்த மாருதி எப்படியும் மாருதி காருக்கு வீ.ஆர்.டி.ஈ என்ற வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் அங்கீகார சான்றிதழ் கிடைக்காது; அது கிடைக்காவிட்டால், கார் தயாரிப்பு சாத்தியமில்லை. அப்போது மாருதி கார் திட்டம் தானாகவே ஒரு முடிவுக்கு வந்துவிடும். இந்திரா காந்திக்கும் அனாவசியமான...