Home » திரை மலர்ந்த காலம்
நினைவில் வாழ்தல்

திரை மலர்ந்த காலம்

தாமிரபரணி பாயும் – ஓடும் அல்ல – நிஜமாகவே பாயும் சேரன்மகாதேவிக்கு அருகில் உள்ள சின்ன கிராமம் கூனியூர். ‘கூனியூருக்குப் போகணும்னா குனிஞ்சிக்கிட்டே போகணுமா’ என்னும் பழமொழியில் இந்த ஊரின் பேரை நீங்கள் கேட்டிருக்கலாம். எப்படியும் பல இடங்களில் இந்தப் பெயரில் ஊர்கள் நிச்சயம் இருக்கும். இது சேரன்மாதேவியின் கூனியூர்.

சேர்மாதேவியில் இருந்து பொடிநடையாக நடந்தால் அரைமணி நேரத்தில் கூனியூருக்குப் போய்விடலாம். அப்படித்தான் நடப்போம். ஓரளவுக்குப் பெரிய கிராமமான சேரன்மாதேவிக்கு இல்லாத ஒரு பெருமை கூனியூருக்கு வந்துவிட்டிருந்தது. டூரிங் டாக்கீஸ்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • செண்ட்ரல் தியேட்டரே இப்போது Metro Cities ல் இருக்கும் IMAX களுக்கு முன்னோடி என்பதை கர்வத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் – மற்றுமொறு திருநெல்வேலி சினிமா கோட்டி

  • அருமையான கட்டுரை. அந்த காலத்திற்கு உங்களுடன் உங்களின் ஊர்களுக்கு கூட்டி சென்றுவிட்டீர்கள். நன்றி

  • கல்லூரியில் சேர்ந்து முதல் படமாக பூர்ணகலாவில் அண்ணாமலை பார்த்தேன். அருணகிரி போகும் வழியில், பேரின்பவிலாஸ் என்று ஒரு தியேட்டர் இருந்தது. அந்த சமயத்தில் அது நெல்லையின் மிகவும் பிரபலமான திரையரங்காக பேசப்பட்டது. அங்குதான் பாம்பே திரைப்படம் நான்கைந்து முறை பார்த்தேன். பாட்ஷா படம் ரத்னாவில் ஓடியது என்று நினைக்கிறேன். “நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்…” பாட்டுக்கு மொத்த தியேட்டருமே நின்று ஆடியதை மறக்க முடியாது.

  • செம்பருத்தி பட பாடல்களுக்கு திரையை சுற்றிலும் மின் விளக்குகள் மின்ன பார்த்து ரசித்திருக்கிறேன்.
    “மூங்கில் மூச்சு” சுகா திருநெல்வேலி தியேட்டர்களை விவரித்ததை படித்ததுண்டா…அவ்வளவு அருமையாக இருக்கும்.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!