தேர்வுக்கூடத்தி்ல் டீச்சரிடம் பேப்பர்களை ஒப்படைக்கக் கடைசி ஐந்து நிமிடம் என்று மணி அடித்ததும் இன்னும் தீவிரமாக எழுதுவார்கள் சில மாணவர்கள். அப்படி போரில் ஒரு இடைவெளி ஒப்பந்தம் முடிவானதும் அது தொடங்கும் நேரத்துக்குச் சிலமணி நேரம் முன்பு கூட ஐநா பள்ளிக்கூட த்தின் மீது குண்டு வீசி 27 பேரைக் கொன்றது...
இதழ் தொகுப்பு November 2023
“அண்ணா, நான் சுரங்கத்தில் மாட்டிக்கொண்டேன் என்று அம்மாவிடம் சொல்லாதே. வருத்தப்படுவார்கள்.” மெல்லிய, சோர்வடைந்த குரலில் புஷ்கர், அண்ணன் விக்ரமிடம் சொல்கிறார். உத்தரகாசி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சுரங்க விபத்தில் சிக்கியிருக்கிறார் புஷ்கர். அவரது அம்மா கவலைப்படக் கூடாதென்பதே அவரது முதல்...
79. நேரு, இந்திரா கைது காந்திஜி தன் உரையில் ‘செய் அல்லது செத்துமடி’ என்று உணர்ச்சி பொங்க முழக்கமிட்டாலும், இறுதியாக அவர் தனக்கே உரிய கடிவாளத்தைப் போடத் தவறவில்லை. போராட்டத்தில் இறங்கலாம். ஆனால், அதில் வன்முறைகளுக்குத் துளியும் இடமில்லை! நம்முடைய போராட்டம் நூறு சதவிதம் அஹிம்சை வழியில்தான் நடக்க...
ஒரு நிறைமாதக் கர்ப்பிணி. பிரசவ வலியும் வந்துவிட்டது. அவசர ஊர்தியையும் அழைத்தாயிற்று. ஆனால் அந்த வண்டி வரக் கூடிய அளவு சீரான பாதை இல்லை. கர்ப்பிணியுடன் தங்கள் வண்டியிலேயே அவர்கள் திரும்பிச் செல்கிறார்கள். வண்டிச் சக்கரம் பழுதடைந்து விடுகிறது. வேறு வழியே இல்லாமல், நிறைந்த இரவில், கழுதைப் புலிகளின்...
திருப்பதி. பெயரைக் கேட்டாலே ஏழுமலையானுக்கு இணையாக நம் அனைவரின் நினைவுக்கும் வருவது- லட்டு. பசுநெய், முந்திரி, ஏலக்காய், கல்கண்டு, பச்சைக் கற்பூரம் உள்ளிட்டவற்றை சரியான விகிதத்தில் கலந்து மணக்க மணக்கத் தயாரிக்கப்படும் திருப்பதி லட்டுக்கு நிகர் வேறொன்றில்லை. ஒரே தரத்தில், ஒரே அளவில், சுவை மாறாமல்...
07 – போரால் மீண்டெழுந்த சோவியத் நாள்: 22 – ஜூன் – 1941. இடம்: கதின் கிராமம், பெலாரஸ் எட்டு வயது விக்டர் ஆண்ட்ரீவிச், வைக்கோல் களஞ்சியத்தில் அம்மாவுடன் உட்கார்ந்து கொண்டிருந்தான். கிராமத்திலிருந்த அனைவரும் அங்குதான் அடைக்கப்பட்டிருந்தனர். கதவு வெளிப்புறம் தாழிடப்பட்டிருந்தது...
‘நாடகமும் நடிப்பும் என் மூச்சு. நடிப்புக்கலையில் ஒரு பெரிய சாதனை நிகழ்த்தாமல் திரும்பக் கூடாது’ என்ற வைராக்கியத்துடன் லண்டனில் உள்ள ராயல் அகாடமி ஆஃப் டிராமாவில் சேர்ந்து கற்றுக்கொள்ள விமானம் ஏறினாள் அந்தப் பெண். டில்லியில் ஆறு சகோதர சகோதரிகள் கொண்ட குடும்பத்தில் கடைக்குட்டியாய்ப் 1933-இல் பிறந்த...
இவ்வாண்டின் கோடை விடுமுறையில் நியூஜெர்சி மாகாணத்தில் ராபின்ஸ்வில்லியில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது ஸ்வாமி நாராயணர் கோயில். 2010ம் ஆண்டில் தொடங்கிய இவ்வாலயத்தின் கட்டுமாப் பணிகள் இடையில் கோவிட் மற்றும் இதர பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு ஒருவழியாகத் திறப்பு விழா இவ்வாண்டு அக்டோபர் 8ஆம் நாள்...
78 எதிர்கொள்ளல் 2 யார் கண்னிலும் படும் முன் போய்விடவேண்டும் என்று ஜீன்ஸ் குர்தா ஜோல்னா பையுடன் விறுவிறுவென லிஃப்டை பார்க்க நடந்தவன், ‘யாரை சார் பாக்கணும்.’ என்று வழிமறிக்கப்பட்டான். ‘இந்த டிபார்ட்மெண்ட்டுதான். எல்டிசி.’ ‘அப்படியா சார். நான் யாரோ வடநாட்டு...
1970-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவைப் பிரதமர் பதவிக்குக் கொண்டுவரக் கம்யூனிஸ்டுகள், தேசியவாதிகள், பவுத்தத் துறவிகள் என்ற பெரும் பட்டாளம் களமிறங்கி லிபரல்வாத ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்குச் சாவுமணி அடித்ததைக் கடந்த வாரம் பார்த்தோம். கம்யூனிஸச் சித்தாந்தப் பின்புலத்தை...