Home » ப்ரோ-7
தொடரும் ப்ரோ

ப்ரோ-7

1970-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவைப் பிரதமர் பதவிக்குக் கொண்டுவரக் கம்யூனிஸ்டுகள், தேசியவாதிகள், பவுத்தத் துறவிகள் என்ற பெரும் பட்டாளம் களமிறங்கி லிபரல்வாத ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்குச் சாவுமணி அடித்ததைக் கடந்த வாரம் பார்த்தோம். கம்யூனிஸச் சித்தாந்தப் பின்புலத்தை ஆன்மாவாகக் கொண்டு, இடதுசாரிக் கருத்தியலைப் பேசி, புரட்சிகர இயக்கமாய் உருப்பூண்ட ஜனதா விமுக்தி பெரமுன(JVP)வும் ஸ்ரீமாவோவின் வெற்றியை உள்ளூர விரும்பியது. இதனால்தான் சிறையில் இருந்த தன் தலைவர் ரோஹன விஜேவீரவின் ஆலோசனைப்படி ஆளும் கட்சிக்கு எதிராகக் கடும் பிரசாரத்தைக் கட்டவிழ்த்தது. ஸ்ரீமாவோவும் வென்று மகிந்த ராஜபக்சே போன்றோரின் தலையீட்டில் ரோஹன விஜேவீரவும் விடுதலையான பின்னர் யாவரும் நலம் என்று அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்விட்டார்கள். ஆனால் ஜே.வீ.பி.யின் புரட்சித் தீயோ அணையவில்லை.

1971 மார்ச் மாதத்திற்குள் கணிசமான ஆயுதங்களைச் சேகரித்துக் கொள்ளுமாறு ரோஹன விஜேவீர அதன் உறுப்பினர்களுக்குக் கட்டளையிட்டு இருப்பதாக ஒரு பரபரப்பு அறிக்கையை ஸ்ரீமாவோவிடம் பாதுகாப்பு அமைச்சு சமர்ப்பித்தது. ஆனால் சுதாரித்துக் கொண்டு எழ அரசுக்குக் கால அவகாசம் இருக்கவில்லை. இத்தனைக்கும் ஸ்ரீமாவோவின் ஆட்சி மூடிய பொருளாதாரக் கொள்கையில் இருந்தது. அதாவது அத்தனை இறக்குமதிகளும் தடை செய்யப்பட்டு உள்ளூர் உற்பத்திகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. கண்ட கண்ட தனியார் நிறுவனங்களை, தொழிற்சாலைகளை எல்லாம் நினைத்த மாத்திரத்தில் அரசுக்கு வார்த்து எடுத்தார் ஸ்ரீமாவோ. எவ்வளவுதான் நட்டம் வந்த போதிலும் அரச வளங்கள் எதையும் தனியாருக்கு விற்காத ஆட்சி அது. ஜே.வி.பி.யும் கம்யூனிஸ்டுகளும் வழிமொழிந்த சீன, ரஷ்யச் சித்தாந்தம் தான் ஸ்ரீமாவின் ஆட்சி ஸ்டைலும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!