Home » Archives for February 2023 » Page 7

இதழ் தொகுப்பு February 2023

உலகம்

சொறியாதே! சுடப்படுவாய்!

காவல் துறை என்பது பல அடுக்குகளைக் கொண்டது. சாலையோர ரோந்துப் பணி, துப்பறியும் பணி, போதைப்பொருட்கள் தடுக்கும் குழு, திறனாய்வுக்குழு, கல்விக்குழு மற்றும் சட்டதிட்ட ஆலோசகர்கள் குழு, கொள்கைகள் குழு சமூகப் பணிக் குழு, இதைத்தவிர மக்கள் பணிக்குழு எல்லாம் உள்ளடக்கியதே காவலர் துறை. இரட்டைக்கோபுரங்கள்...

Read More
சமூகம்

தங்கக் கோட்டையைத் தட்டிப் பறித்தவர்கள்

தங்கம் விலை கடந்து வந்த பாதையைச் சற்றுத் திரும்பிப் பார்ப்போம். 1920களில் இருபத்தொரு ரூபாயாக இருந்திருக்கிறது. நாற்பது ஆண்டுகள் கழித்து 1961-ல் நூற்று நான்கு ரூபாயாக மாறியிருக்கிறது. அறுபதுகளில் ஆசிரியர் பணிக்குச் சேர்ந்த ஆசிரியர்கள் பல முறை அலுத்துக் கூறக் கேட்டிருப்பீர்கள். அன்று நினைத்திருந்தால்...

Read More
கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் – 10

கண்ணின் அருமை கண்ணின் அருமை தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஐம்புலன்களில் மிக முக்கியமான புலன் இது. குறிப்பாகச் சொல்லப்போனால் நமது சுற்றுப்புறத்திலிருந்து வரும் தகவல்களில் கிட்டத்தட்ட 80 % தகவல்கள் கண்கள் மூலமாகத்தான் நமது மூளையை வந்தடைகின்றன. நமது மூளையில் பின்புறத்தில் விஷூவல் கார்டெக்ஸ் எனப்படும்...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 10

10 – வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (22.11.1839 – 15.7.1897 ) அறிமுகம் ‘தமிழ்க் கடவுள்’ என்று சொல்லப்படுபவர் முருகவேள். தமிழில் முருக பக்த இலக்கியமாகவும், செறிவு மிக்க இலக்கியமாகவும் விளங்கிய ஒரு நூல் என்றால் உடனே நமக்குச் சட்டென்று நினைவுக்கு வரும் ஒரு பெயர் உண்டு. அது திருப்புகழ்...

Read More
இலக்கியம் உலகச் சிறுகதைகள்

பட்ஜெட்

மாரியோ பெனதெத்தீ (Mario Benedetti) ஸ்பானிய மூலத்திலிருந்து ஆங்கிலத்தில்: ஜெரால்ட் ப்ரௌன் (Gerald Brown) தமிழில்: ஆர். சிவகுமார் 1920களிலிருந்து மாறாமல் ஒரே பட்ஜெட்* எங்கள் அலுவலகத்தில் அமலில் இருந்து வருகிறது. அதாவது, எங்களில் பெரும்பான்மையோர் நிலநூலோடும் பின்னக் கணக்குகளோடும் போராடிக்கொண்டிருந்த...

Read More
நகைச்சுவை

பேயெழுத்து

விதியானது சிலரின் வாழ்க்கையில் எக்கச்சக்கமாகக் கபடி விளையாடி விடுகிறது. அப்படியானதொரு விளையாட்டில்தான் இக ஓர் எழுத்தாளனாய் உருவெடுத்தான். எந்தவொரு பத்திரிகைக்கும் ‘வாசகர் கடிதம்’ அல்லது ‘சொல்லக் கேட்டவர்’ என்று துணுக்கோகூட எழுதியறியாதவனாக ‘பெருமாளே’ என்று மனைவி அவனைத் தாக்க, அவனை மனைவி தாக்க என்று...

Read More
உலகம்

தக்காளிச் சட்னி செய்வது எப்படி?

சென்ற இதழில் ‘குரங்கு கையில் ஏகே47’ என்கிற கட்டுரையைப் படித்திருப்பீர்கள். இந்த வாரம் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கிறது. இஸ்ரேல் படைகள் துப்பாக்கியை வைத்துக் கொண்டு சுட்டு விளையாடுவதற்குத்தான் ரோந்துக்குச் செல்கிறார்கள் என்று நினைக்கும் அளவிற்குத் தாக்குதல்கள் வரைமுறையின்றி நடந்து கொண்டுள்ளன...

Read More
சமூகம்

கற்றுக்கொடுக்கும் மாணவன்

புத்தாண்டு பிறந்தால் தீர்மானமே தேய்ந்து போகுமளவிற்குத் தீர்மானம் எடுப்பதுதான் வழக்கம். சரி… இன்றோடு புத்தாண்டு தொடங்கி ஒரு மாதம் முடிந்துவிட்டது. அப்படித் தீர்மானம் எடுத்தவர்கள் எடுத்த அன்றோடு மறந்துவிட்டார்களா? நினைவில் வைத்து நகர்கிறார்களா? எந்த அளவிற்கு முன்னேறி இருக்கிறார்கள்? பல்வேறு...

Read More
இந்தியா

சரியும் அதானி குழுமம்

இந்தியாவின் இரண்டாவது பெரிய நிறுவனம் அதானி குழுமம். குஜராத் மாநிலத்தைப் பூர்வீகமாக் கொண்ட கௌதம் அதானி இந்தக் குழுமங்களின் தலைவராக உள்ளார். நிலக்கரி, மின் உற்பத்தி, துறைமுகங்கள், விமான நிலையங்கள், கிரீன் எனர்ஜி உள்ளிட்ட ஏராளமான தொழில்களில் ஈடுபட்டு வருகிறது அதானி குழுமம். உலகின் மூன்றாவது பணக்காரராக...

Read More
ஆபீஸ் தொடரும் நாவல்

ஆபீஸ் – 35

35 இடம் ஏஓவின் கர்ர்ரில் அலறியடித்துகொண்டு அவன் ஓடிவந்ததைப் பார்த்து இளித்த டிஓஎஸ், தினந்தோறும் நடக்கிற இந்தக் கூத்திற்கு இவ்வளவு நேரம்தான் ஒதுக்கமுடியும் என்பதைப்போல திரும்ப மேஜையில் கைகளை வைத்துக் கவிழ்ந்துகொண்டார். அடுத்து, இங்கிருந்து வரப்போகிற கொர்ர்ரை வேறு கேட்கவேண்டுமா என்பதைப் போல எழுந்து...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!