Home » Archives for February 2023 » Page 8

இதழ் தொகுப்பு February 2023

தல புராணம் தொடரும்

‘தல’ புராணம் – 10

 தொழிற்சாலைப் பெண்மணி ரேவதி அத்வைதி கல்லூரியில் மெக்கானிகல் எஞ்சினியரிங் படிக்கப் போகும் போது அவரது வகுப்பில் அவர் மட்டும் ஒரே ஒரு மாணவி. நண்பர்கள், உறவினர்கள், “பெண்பிள்ளை ஏன் மெக்கானிகல் எஞ்சினியரிங் படிக்கப் போகிறாய்?” என்று கேட்டார்கள். அது மட்டுமல்லாது ஒரு பேராசிரியரே, “நீ வொர்க் ஷாப்பில் வேலை...

Read More
நம் குரல்

தேசபக்தி படும் பாடு

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான கௌதம் அதானி தலைமையில் இயங்கும் அதானி குழுமம், பங்குச் சந்தையில் திருகு வேலை செய்ததாகவும், கணக்கு மோசடியில் ஈடுபட்டதாகவும் ஹிண்டன்பர்க் என்னும் அமெரிக்க ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ஓர் அறிக்கையால் அதானி குழுமமே ஆட்டம் கண்டு நிற்கிறது. பங்குச் சந்தையில், அதன் பங்குகளின்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை -36

36. தேர்தல் வெற்றி முதல் முறை சிறைவாசம் முடிந்து வெளியில் வந்ததும், ஜவஹர்லால் நேரு அகமதாபாத் சென்று சிறையிலிருந்த காந்திஜியைச் சந்தித்துப் பேசினார். அப்போது, காந்திஜியின் மீதான வழக்கு அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. நீதிமன்றம் சென்று பரபரப்பான அந்த வழக்கினைக் கவனித்தார். அந்த நீதிபதி ஒரு...

Read More
கல்வி

இனி நம் பிள்ளைகள் ஆக்ஸ்போர்டிலும் கேம்பிரிட்ஜிலும் படிப்பார்கள்!

மத்திய அரசினுடைய ‘புதிய கல்விக் கொள்கை’யின்  முக்கியமான அம்சங்கள்  வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு இந்தியாவில் அனுமதி, என்ஜினியரிங் படிப்புக்கு ஜேஇஇ நுழைவுத் தேர்வு, கலை அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு க்யூட் (CUET) நுழைவுத்தேர்வு, மூன்றாண்டு பட்டப்படிப்பை நான்காண்டு பட்டப்படிப்பாக உயர்த்துவது...

Read More
இந்தியா

தேர்தல்களும் தெளிவுகளும்

2023ஆம் ஆண்டிற்கான தேர்தல் கொண்டாட்டங்கள் இந்தியாவின் வட கிழக்கிலிருந்து தொடங்கியிருக்கின்றன. திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி திரிபுரா மாநிலத்திற்கு பிப்ரவரி 16ஆம் தேதியும், மேகாலயா மற்றும்...

Read More
நுட்பம்

கூகுள் தரும் கூடுதல் வசதிகள்

நாம் எல்லோருக்கும் கூகுள் என்றவுடன் அவர்களின் தேடுபொறி, யூ-ட்யூப், ஜிமெயில், கூகிள் போட்டோஸ் இவைதான் நினைவில் வரும், இவற்றைத் தாண்டி அவர்களின் சில இலவசச் செயலிகளை நாம் அறிந்து கொண்டால் தினந்தோறும் நம் கணினி/செல்பேசிப் பயன்பாடு எளிதாகும். கூகிள் காண்டாக்ட்ஸ் நம்மில் பலருக்கு இது நடந்திருக்கும்...

Read More
சுற்றுலா

உலகத்தின் முடிவு நிலம்

அந்தக் காலையில் என் கால்களுக்கு நான் மிகுந்த நன்றியுடையவளாக இருந்தேன். ஏனெனில் பூமியின் சுவர்க்க நிலத்தை நோக்கி அது அன்று என்னை நடத்திச் சென்றது. நடக்க நடக்கக் கால்கள் கற்றுத் தருகின்றன, நீண்டு நடக்கவும், நிலைத்து நிற்கவும். இயற்கையின் பிரமிக்கிற அடைவுகளின் முன், பாதைகளின் முன் நான் மௌனித்து...

Read More
இலங்கை நிலவரம்

ஒன்பதில் சனி

இலங்கையில் ஜனநாயகமும், ஆட்சியாளர்கள் மீதான மக்களின் நம்பிக்கையும் எந்தளவுக்குச் சிதைந்து போயிருக்கிறதென்றால் ‘மார்ச் 9ம் தேதி உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறும்’ என்ற தேர்தல் திணைக்களத்தின் அறிவிப்பைப் பலரும் ஒரு பொருட்டாக மதிப்பதாகத் தெரியவில்லை. ‘தேர்தலா, அது நடக்குமா?’ என்று...

Read More
குற்றம்

கிரிப்டோ ராணியின் மோசடி சாம்ராஜ்யம்

அமெரிக்க ஃஎப்.பி.ஐ.யின்  தேடப்படுபவர்கள் பட்டியலில் முதல் பத்து இடங்களில் இருப்பவர் ருஜா இக்னடாவா. இந்தப் பட்டியலில் தற்போது இருக்கும் ஒரே பெண் இவர் மட்டும்தான். இவரைப் பற்றிய தகவல் தெரிவித்தால் கிடைக்கும் பரிசுத் தொகை எண்பது லட்சத்துக்கு மேல். அப்படி என்ன செய்தார் ருஜா..? நான்கு பில்லியன் அமெரிக்க...

Read More
உலகம்

வேலை போகும் காலம்

தினமும் 20 சிகரெட்டுக்களுக்கு மேல் புகை பிடிப்பதும், 5 பாட்டில்களுக்கு மேல் மது அருந்துவதும் உடலுக்குத் தீமை விளைவிக்கும் என்று தெரிந்திருந்தும், நோய்க்கான அறிகுறிகள் தெரியவந்தும், படி ஏறியிறங்கும் போது மூச்சிரைத்தும், புற்றுநோய் என்று ஒரு நாள் மருத்துவர் சொல்லும் போது அதிர்ச்சி வந்து, ‘எனக்கா...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!