இந்தியாவின் இரண்டாவது பெரிய நிறுவனம் அதானி குழுமம். குஜராத் மாநிலத்தைப் பூர்வீகமாக் கொண்ட கௌதம் அதானி இந்தக் குழுமங்களின் தலைவராக உள்ளார். நிலக்கரி, மின் உற்பத்தி, துறைமுகங்கள், விமான நிலையங்கள், கிரீன் எனர்ஜி உள்ளிட்ட ஏராளமான தொழில்களில் ஈடுபட்டு வருகிறது அதானி குழுமம். உலகின் மூன்றாவது பணக்காரராக இருந்த அவர், தற்போது ஏழாவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறார். அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட நீண்ட அறிக்கையே இந்த சரிவுக்கு மிக முக்கியக் காரணம். அறிக்கை வெளிவந்த இரண்டே நாட்களில் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு 4 லட்சம் கோடிகளுக்கும் மேல் சரிவைக் கண்டுள்ளது. கொரோனா காலகட்டத்தில் அதானி குழுமங்களின் மதிப்பு 819 சதவிகிதம் அதிகரித்திருந்தது.
இதைப் படித்தீர்களா?
நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பு என்பது காலம்தோறும் தேவைக்கேற்பச் செய்துகொள்ளப்பட வேண்டிய ஓர் எளிய வசதி. இதற்கு முன்பு இந்திரா காந்தியின்...
ஏறுமுகத்தில் ஏஐ பதிலின் தன்மை சொல்லப்படும் தொனியில் உள்ளது. ஒரே பதிலைப் பல்வேறுவிதங்களாகச் சொல்லமுடியும். நண்பருக்கு நாம் எழுதும் கடிதமும், அரசு...
Add Comment