தென்காசிக்குப் பக்கத்தில் மத்தளம்பாறை என்று ஒரு கிராமம். மலை அடிவாரம் என்பதால் பசுமைக்குப் பஞ்சமில்லாத கிராமம். அவர் வீடு அங்கேதான். உலகப் பெரும் பணக்காரர்களுள் ஒருவர் என்றாலும் எளிய வாழ்க்கை. வீட்டில் ஏசி கிடையாது. இதர சொகுசுகள் எதுவும் கிடையாது. எப்போதும் வேட்டி சட்டை. வெளியே போவதென்றால் நடந்தே கிளம்பிவிடுவார். அல்லது சைக்கிள். வெளியூர் என்றால் மட்டும் வாகனம். எடுக்கவும் பிடிக்கவும் எவ்வளவோ ஏவலாள் வைத்துக்கொள்ள வசதி இருக்கிறது. ஆனாலும் தன் காரியங்களைத் தானே பார்த்துக்கொள்கிறார்.
இதைப் படித்தீர்களா?
ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித்...
வருகிற மே பதிநான்காம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் ஐம்பத்து இரண்டாவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ளார் பூஷன் ராம்கிருஷ்ண கவாய். தான் ஓய்வு...
Add Comment