இகவானவன் வெகுநாட்களாக ஓர் இருசக்கர வாகனம் வாங்கி இன்னபிற நகரத்து மாந்தர் போன்று, ஹெல்மெட் அணியாமலும் சாலை விதிகளை மதிக்காமலும் விரைய வேண்டுமென்று பேராவல் கொண்டிருந்தான். ஆனால் மனைவியாகப்பட்டவளோ முட்டுக்கட்டை போட்டால்கூடப் பரவாயில்லை, கையில் விறகுக் கட்டையையே தூக்கிக் காட்டினாள். “உங்களுக்கு வர்ற வருமானம் கைக்கும் வாய்க்குமே சரியா இருக்குது. (என்ன செய்ய.. அத்தனைப் பெரிய வாய் அவளுக்கு!) இதுல வண்டி வேற வாங்கி, அதுக்குப் பெட்ரோல் போடறேன்னு வேற எக்ஸ்ட்ரா செலவா..? பேசாம நடந்தும் பஸ்லயும் எப்பயும்போல போய்ட்டு இருங்க. நடக்கறது நல்ல எக்சர்சைஸ் தெரியுமோ..? ஷுகரே கிட்ட வராது.” என்றாள். இப்படியாகத்தானே நிராசையுடன் வாழ்ந்துவந்த இகவுக்கு, அது தீரும் ஒரு காலச்சதுரமும் வாய்த்தது.
இதைப் படித்தீர்களா?
ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித்...
வருகிற மே பதிநான்காம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் ஐம்பத்து இரண்டாவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ளார் பூஷன் ராம்கிருஷ்ண கவாய். தான் ஓய்வு...
Add Comment