இலங்கையில் ஜனநாயகமும், ஆட்சியாளர்கள் மீதான மக்களின் நம்பிக்கையும் எந்தளவுக்குச் சிதைந்து போயிருக்கிறதென்றால் ‘மார்ச் 9ம் தேதி உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறும்’ என்ற தேர்தல் திணைக்களத்தின் அறிவிப்பைப் பலரும் ஒரு பொருட்டாக மதிப்பதாகத் தெரியவில்லை. ‘தேர்தலா, அது நடக்குமா?’ என்று ஒருவித கேலிச் சிரிப்புடனேயே பாதி சனம் கடந்து போகிறது. எதிக்கட்சிகள் கூட ‘மார்ச் 9ம் தேதி தேர்தல் நடந்தால்…’ என்று ஒருவித விநோத அறிவிப்புடனேயே பேச்சைத் தொடங்குகின்றன. லிபரல் ஜனநாயகத்தின் கட்டற்ற கலைக்களஞ்சியம் என்ற மாஸ்க்கைப் போட்டுக் கொண்டு உலகத்தை வலம் வந்து கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் ஓசைப்படாமல் இந்த அவநம்பிக்கை அவலத்தின் கதாநாயகராய் இருக்கிறார்.
இதைப் படித்தீர்களா?
5. கூச்சம் கூடாது 1901ம் ஆண்டுக் காங்கிரஸ் மாநாடு வங்காளத்திலுள்ள கொல்கத்தா நகரில் நடைபெற்றது. மும்பையைச் சேர்ந்த வணிகரும் அரசியல் தலைவருமான சர்...
5. கருஞ்சிவப்புக் கல் பைசாசக் குன்றின் அடிவாரத்தில் இருந்தேன். இந்தத் தொலைவை என்னால் தோராயமாகக் கூடக் கணக்கிட முடியவில்லை. நெடு நாள் –...
Add Comment