Home » ‘தல’ புராணம் – 25
தல புராணம் தொடரும்

‘தல’ புராணம் – 25

சுந்தரராஜன் வெங்கடகிருஷ்ணன்

வங்கித் தலைவன்

பொதுவாகப் பதவி உயர்வு என்றால் அதிகப் பொறுப்புகளும் அதற்கேற்ப அதிக வருமானமும் சேர்ந்தே வரும். ஆனால் அமெரிக்காவில் பார்க்ளேஸ் வங்கியின் உலகச் சந்தைகள் பகுதிக்குத் தலைவராக இருந்த வெங்கட் என அழைக்கப்படும் கோயம்புத்தூர் சுந்தரராஜன் வெங்கடகிருஷ்ணன் அந்நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியாகப் பொறுப்பேற்ற போது அவரது பொறுப்பு அதிகரித்தது ஆனால் சம்பளம் குறைந்தது. அவருக்கு முன்னர் இருந்த தலைமைச் செயலதிகாரியின் சம்பளத்தோடு ஒப்பிடும் போது இவருக்குச் சற்று அதிகமான சம்பளமே. இத்தனைக்கும் பார்க்ளேஸ் வங்கி ஒரு சிறிய நிறுவனமல்ல. அது முந்நூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட ஒரு பிரிட்டிஷ் வங்கியாகும். பிரிட்டனிலுள்ள முக்கிய வங்கிகளில் ஒன்று. அத்துடன் உலகில் பல நாடுகளிலும் பார்க்ளேஸ் வங்கி பல நிதிசார்ந்த துறைகளில் இயங்கி வருகிறது. உலகளவில் தொண்ணூறாயிரம் ஊழியர்கள் பணிபுரியும் நிதி நிறுவனம்.

வெங்கடகிருஷ்ணனின் சம்பளம் குறைந்ததற்குக் காரணம் பிரிட்டிஷ் வங்கிகளில் கொடுக்கப்படும் சம்பளம் அமெரிக்காவில் வங்கிகள் கொடுக்கும் சம்பளத்தோடு ஒப்பிடும் போது குறைவானவையே. அமெரிக்காவில் இருந்த அவர் தலைமைச் செயலதிகாரியாக லண்டன் வந்ததே அவரது வருமானத்தைக் குறைத்துப் பொறுப்புகளை அதிகரித்தது. இரண்டாயிரத்து இருபத்தோராம் ஆண்டு நவம்பர் மாதம் பார்க்ளேஸ் வங்கிக்கு வெங்கடகிருஷ்ணன் தலைமைச் செயலதிகாரியாகப் பதவியேற்றார். அவருக்கு முன்னர் தலைமைச் செயலதிகாரியாக இருந்த ஜெஸ் ஸ்டேலி என்பவர் பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டெயின் என்பவரோடு இருந்த தொடர்பு காரணமாகத் தனது பதவியை விலக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!