Home » வெங்காயமா? வேண்டவே வேண்டாம்!
கணினி

வெங்காயமா? வேண்டவே வேண்டாம்!

கூகுளில் தேட முடியாத வெப்சைட்கள் உண்டென்றால் நம்புவீர்களா? ஒன்றல்ல, இரண்டல்ல… நிறையவே இருக்கின்றன. மேம்போக்காகப் பார்த்தால் இண்டர்நெட்டில் இருக்கும் தகவல்கள் அனைத்தையுமே நாம் கூகுள் போன்ற தேடுபொறிகளைக் கொண்டு எளிதாக எட்டி விடலாம் என்றுதான் தோன்றும். ஆனால் உண்மை இதற்கு மாறானது.

இண்டர்நெட் ஒரு பெருங்கடல். நாம் எளிதில் கற்பனை செய்து பார்க்கவியலாத அளவினதான தகவல் பெருங்கடல். மேலோட்டமாய் நாம் தேடும் இண்டர்நெட் இக்கடற்பரப்பில் எழுந்து வரும் அலைகள் மட்டுமே. இதைத் தவிரவும் இப்பெருங்கடலின் ஆழத்தில் இருப்பன எண்ணிலடங்கா. அவற்றுள் முத்துக்களும் உண்டு. அசந்தால் ஆளையே கொல்லும் பெரும் திமிங்கிலங்களும்!

பொதுவாக நாம் இணையம் என்று கூறிவிடுகிறோம். ஆனால் இதனுள் மூன்று பெரும் அடுக்குகள் உள்ளன. அவை :

• சர்ஃபேஸ் வெப் (Surface Web – மேலோட்டமான இணையம்)

• டீப் வெப் (Deep Web – ஆழ் இணையம்)

• டார்க் வெப் (Dark Web – கரும் இணையம்)

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!