புத்தாண்டு தீர்மானங்கள் எடுப்பதெல்லாம் சரி தான். ஆனால் அதை உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள். எதற்காக நானுண்டு என் பொடி மசால் தோசை உண்டு என்று சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் என்னை வம்புக்கு இழுக்க வேண்டும்.? “இப்படி மசால் தோசையாகச் சாப்பிடுவது நல்லதில்லை. புத்தாண்டில் இருந்தாவது காய்கறி, பழங்கள் மட்டும்...
Tag - நகைச்சுவை
நான் நர்சரி டீச்சர் என்பதாலோ என்னவோ எங்கள் நண்பர்கள் எல்லோரும் அவர்கள் வீட்டுக் குழந்தைகளை எங்கள் வீட்டில் விட்டுவிட்டு ஷாப்பிங் போகும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது எனக்குக் கடினமான விஷயம் இல்லை. ஆனால் அவர்களுக்கே உரிய பிரத்தியேக பாஷையைப் புரிந்து கொள்வது தான்...
நம் இகவுக்குச் சிறுவயதிலிருந்தே அடியோடு பிடிக்காத விஷயம் ஒன்று உண்டென்றால், அது வீடுகளில் நாய் வளர்ப்பது. அந்த வர்க்கத்தைத் தனது முதல் எதிரியாக என்றும் நினைக்கிறான். அதற்குப் பல காரணங்கள் உண்டு. சிறுவன் இகவின் பக்கத்து வீட்டுக்காரரொருவர் நாய் வளர்த்து வந்தார். அப்புத்திசாலியானவர், நாயைத் தன்...
‘லை டிடெக்டர்’ என்றொரு கருவி இருப்பதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்தானே… அதனைப் பயன்படுத்தினால் ஒரு மனித ஜீவன் பொய் பேசுகிறதா, உண்மை பேசுகிறதா என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்து விடலாம் என்று கேள்வி. மனிதர்களைத் துல்லியமாகப் பொய் பேசவைக்கக் கூடிய ‘லை க்ரியேட்டர்’ என்கிற கருவியையும்...
மனிதனாய்ப் பிறந்த எவனொருவருக்கும் கூடவே இருந்து தொல்லை தருவது அது. எவனொருவனாலும் அதைத் தவிர்த்துவிட்டு வாழ்ந்து விடவும் இயல்வதில்லை. அஃதை முழுமையாக ஒழித்துவிடவும் இன்றளவும் மனிதனால் இயலவில்லை. வெயிட்… வெயிட்… நீங்கள் நினைப்பது தவறு. நான் ஓர் ஆணாதிக்கவாதியாகப் பேசவ்ல்லை. நான் சொல்வது...
அவன் சிறுவயதில் எல்லாரையும் போலத்தான் இருந்தான். புத்தகங்கள் என்று சொன்னால் பாடப் புத்தகங்கள்தவிர வேறெதுவும் தெரியாது அவனுக்கு. சினிமாவென்றால் எம்ஜியார் தவிர வேறெவரும் தெரியாது. அவனுக்கொரு பெயர் வேண்டுமல்லவா? இளங்கணேசன் என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த இக என்கிறவன் கல்லூரிப் படிப்பினுள் நுழைந்ததும்...
சென்னைப் புத்தகக் கண்காட்சி கண்ணுக்கெட்டிய தொலைவில் நெருங்கிவிட்டது. எழுத்தாளர்கள் ஓவர்டைம் செய்ய ஆரம்பித்துவிட்டிருப்பார்கள். வாசகர்கள் என்னென்ன வாங்கலாம் என்று லிஸ்ட் போடத் தொடங்கியிருப்பார்கள். என்னடா இது, நாமும்தான் ஏகப்பட்ட அனுபவங்களைச் சேர்த்து வைத்திருக்கிறோம்; ஒரு புத்தகம் எழுதி கையோடு...
டெபாசிட், லோன், டெபிட், கிரெடிட் என்று சதா சர்வகாலமும் உழன்று கொண்டிருக்கும் பேங்க்குகளின் பிராஞ்ச் மேனேஜர்களுக்கு அவ்வப்போது செமை காமெடியான அனுபவங்களும் ஏற்படும். அதுவும் குறிப்பாகக் கிராமப்புறங்களில் உள்ள கிளைகளில் வேலை பார்க்கிறவர்களுக்கு இத்தகைய அனுபவங்களுக்கு அக்மார்க் உத்தரவாதமுண்டு. ஒரு...
அக்டோபர் மாதம் ரிஷப ராசிக்காரர்கள் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வெற்றியில் முடியும் என்று எங்கள் ஊர் முருங்கை மரத்தடி ஜோசியர் சொல்லியிருக்கிறார். 2021 அக்டோபர் மாதம் எழுத்தாளராக வேண்டும் என்ற முடிவை எடுத்தேன். எழுத்தாளராகி விட்டேன். எனது அடுத்த இலக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வாங்குவதுதான்...
வெளிநாட்டில் வசித்தாலும் நான் ஒரு சுத்தத் தமிழ் பெண். உண்மை, நம்புங்கள். தமிழ்க் கலாசாரத்தை தாங்கிப் பிடிக்க எவ்வளவு பாடுபடுகிறேன் தெரியுமா..? நானொரு தமிழ்ப் பெண் என்று காட்டிக்கொள்ள ஒரு சிறிய வாய்ப்பு கிடைத்தாலும் அதை விடுவதே இல்லை. அப்படி ஒரு வாய்ப்பு சென்ற வாரம் கிடைத்தது. எனது பதினொரு ஆண்டு கால...