Home » உலகம் » Page 6

Tag - உலகம்

உலகம்

அநுரவின் இன்னிங்ஸ் ஆரம்பம்

ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்று இன்றைக்குச் சரியாக மூன்று மாதங்கள் ஆகின்றன. மூன்றில் இரண்டு பலத்துடன் அவரது கட்சி பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஒரு மாதம் ஆகிறது. இந்தக் குறுகிய காலத்தில் அரசின் போக்கைப் பார்க்கும் போது கலவையான விமர்சனங்களும், நிறைய நல்லெண்ணங்களும், ஏராளமான...

Read More
உலகம்

வீழ்ந்தது பஷார் ஆட்சி; வென்றது யார்?

சிரியாவில் எங்கு பார்த்தாலும் வெடி வெடிக்கிறது. இரண்டாவது முறை விடுதலை அடைந்ததைப் போல, நாடு முழுவதும் கொண்டாட்டங்கள். சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் இருபத்து நான்காண்டுகள் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. அதற்கு முன்னர் அவரது தந்தை ஹஃபீஸ் அல் அசாத்தின் அதிகாரத்தில் ஒரு முப்பதாண்டுகளைக்...

Read More
உலகம்

கே-டிராமா

டிசம்பர் மூன்றாம் தேதி, மணி இரவு பதினொன்றைக் கடந்திருந்தது. தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் அந்நாட்டுத் தொலைக்காட்சிகளில் தோன்றினார். நாட்டு மக்களுக்கு அறிவிப்பு ஒன்றை வழங்கப்போவதாகப் பேச்சைத் தொடங்கினார். ‘நாடு ஆபத்தான சூழ்நிலையில் இருக்கிறது. வட கொரியக் கம்யூனிச சக்திகளிடம் இருந்து பாதுகாக்க...

Read More
உலகம்

ஒரு யூரோ, ஒரு வீடு, ஒரு உலகம்

ஹோ…சானா வாழ்வுக்கும் பக்கம் வந்தேன். ஹோ…சானா சாவுக்கும் பக்கம் நின்றேன். ஹோ…சானா ஏனென்றால் காதல் என்றேன். இப்படியெல்லாம் உங்கள் காதலைச் சொல்லக் கவிதை போன்ற ஓரிடம் உண்டென்றால், அது இத்தாலி தான். அதன் குட்டித்தீவுகளில் உங்களுக்கென்ற ஒரு சொந்த வீடு வாங்க, ஒரு யூரோ போதும். ஆமாம்...

Read More
இயற்கை

புலம் பெயர் பறவைகள்

துபாயில் வசந்த காலம் வந்துவிட்டால் சுற்றுலாவாசிகள் மட்டுமில்லை வேற்று நிலப் பறவைகளும் சந்தோஷமாகிவிடும். ஒவ்வொரு வருடமும் நவம்பர் முதல் பிப்ரவரி மாதங்களில் இருநூற்றுக்கும் மேற்பட்ட பறவையினங்கள் புலம் பெயர்ந்து துபாய் மட்டுமின்றி பக்கத்தில் இருக்கும் அபுதாபி, ராஸ் அல் கைமா போன்ற இடங்களுக்கு வருகின்றன...

Read More
உலகம்

உறவைக் கெடுக்கும் ஊடகங்கள்

திரிபுரா, கொல்கத்தாவில் இருந்து தங்கள் தூதரக அதிகாரிகளை பங்களாதேஷ் திரும்ப அழைத்துக் கொண்டுள்ளது. கனடா இந்தியா உறவுத் தடுமாற்றம் உண்டாகி வெகு நாள்கள் ஆகவில்லை. அதற்குள் இன்னொன்று. இந்தியர்களும் உயிரைக் கொடுத்துப் பெறப்பட்டது பங்களாதேஷ் விடுதலை. அண்டை நாடுகள் என்பதைத் தாண்டிய உணர்வுப் பூர்வமான உறவு...

Read More
உலகம்

அரிஷ்நிக் ஏவுகணையும் ஆயிரம் நாள் தாண்டிய போரும்

“நல்ல நேரம் முடியறதுக்குள்ள தாலியக் கட்டுங்கோ” என்று புரோகிதர் அமெரிக்க அதிபர் பைடனின் காதில் ஓதிவிட்டார் போல. பதவியில் இருக்கப்போகும் கடைசி நாள்களில் உக்ரனைக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் செய்கிறார். அதற்குத் தோதாக லெபனானுடன் போர் நிறுத்தம் என்று இஸ்ரேலின் பாரத்தைக்...

Read More
உலகம்

ஸ்டாலின் கட்டிய எட்டாவது அதிசயம்

வருடம் 1946. சோவியத்தின் 75% சதவிகித எண்ணெய் தேவைகளை அசர்பைஜான் தான் பூர்த்திசெய்துகொண்டிருந்தது. அப்போது அசர்பைஜான் சோவியத் யூனியனின் அங்கம். அடுத்த பதினைந்து ஆண்டுகளில் எண்ணெய் இருப்பு மும்மடங்காக அதிகரித்திருக்க வேண்டும் என்று ஸ்டாலின் கட்டளையிடவே, வளங்களைக் கண்டடையும் பணிகள் உடனே...

Read More
உலகம்

ஆண்களே உஷார்

ஆதிகாலத்தில் குழந்தையைப் பெற்றோமா சமைத்தோமா வேலை முடித்துக் களைத்து வந்த கணவனுக்கு பணிவிடை செய்தோமா என்று மட்டும் பெண்கள் இருந்தபோது உலகம் எவ்வளவு அழகாக இருந்தது. ஆனால் காரியதரிசிகளாக நீண்ட நகங்களும் உயர்ந்த காலணிகளும் குட்டைப் பாவாடையுமாக ஆண்கள் மத்தியிலே பெண்கள் பணி புரிய வந்த போது நன்றாகத்தான்...

Read More
உலகம்

பங்களாதேஷ்: யூனுஸுக்கும் ஹஸினாவுக்கும் என்ன வித்தியாசம்?

பங்களாதேஷ் இடைக்கால அரசு பதவியேற்று நூறு நாள்கள் கடந்துவிட்டது. எதிர்பார்த்த வேகம் இல்லை எனினும் முன்பை விட இப்போது நிலைமை மோசமாகவில்லை என்கிறார்கள் மக்கள். இடைக்கால அரசின் தலைவராக பொறுப்பேற்றுள்ளவர் முஹம்மது யூனுஸ். அறுபதுகளில் சிட்டகாங் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றியவர்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!