பங்களாதேஷ் இடைக்கால அரசு பதவியேற்று நூறு நாள்கள் கடந்துவிட்டது. எதிர்பார்த்த வேகம் இல்லை எனினும் முன்பை விட இப்போது நிலைமை மோசமாகவில்லை என்கிறார்கள் மக்கள்.
இடைக்கால அரசின் தலைவராக பொறுப்பேற்றுள்ளவர் முஹம்மது யூனுஸ். அறுபதுகளில் சிட்டகாங் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றியவர் யூனுஸ். அமெரிக்காவிலும் பேராசிரியராக வேலை பார்த்தார். எழுபதுகளில் பங்களாதேஷ் மக்கள் பஞ்சங்களால் அவதிப்படுவதைப் பார்த்து வேலையை விட்டு விட்டு கிராமீன் வங்கியைத் தொடங்கினார். ஜியாவுர் ரஹ்மான் ஆட்சியில் அரசுடன் இணைந்து கிராம சர்க்கார் திட்டங்களையும் முன்னெடுத்தார்.
குறைந்த வட்டியில் குறுங்கடன் வழங்கியது கிராமீன் அமைப்பு. ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வங்கிகளில் இருந்து குறுங்கடன் பெற முடியாமல் அதிக வட்டிக்கு வாங்கி வறுமையில் உழல்கின்றனர். ஆய்வு முயற்சியாக கிராமீன் செயல்படுத்தப்பட்டது. முதலில் வங்கிகள் தரப்பில் இதற்கு எதிர்ப்பு இருந்தது. ஆனால் இந்த நிதி மாதிரியால் மக்கள் மத்தியில் முன்னேற்றம் இருந்ததால் அமைதியாகிவிட்டனர். யூனுஸ், பல்வேறு பன்னாட்டு அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றினார். வழிகாட்டியாக இருந்தார். 96ல் பங்களாதேஷ் இடைக்கால அரசின் ஆலோசகராகவும் செயல்பட்டுள்ளார்.
நன்றி கெட்ட உலகம்