உக்ரைனின் போர் விமானங்கள் துல்லியமாய்த் தாக்கப்பட்டன. பின்பு உலா வந்த ட்ரோன்களும் அழிக்கப்பட்டன. இதை ரஷ்ய வீரர்கள் செய்யவில்லை. அவர்கள் அறிந்திருக்கவுமில்லை. இந்த தாக்குதலை நடத்தியது S -350 விட்யாஸ். செயற்கை நுண்ணறிவால் (AI) முழுவதும் தானாக இயங்குகிற சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு அமைப்பு. ஒரே...
Tag - உலகம்
இந்தியப் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடனின் சந்திப்பு பல எதிர்ப்புக் குரல்களுக்கு இடையே ஒருவாறாக நடந்து முடிந்தது. அமெரிக்காவிற்கு, அமெரிக்க அதிபர்களுடைய அழைப்பை ஏற்றுப் பல பாரதப் பிரதமர்கள் இதற்குமுன் வந்து காங்கிரசில் பேசிவிட்டு, வெள்ளை மாளிகையில் விருந்துண்டு சென்றிருக்கிறார்கள். அதிபர்...
காலையில் அமைதியாய்ப் பள்ளிக்குக் கிளம்பிக்கொண்டிருந்தாள் திலிப்போன்சா. திடீரென அம்மாவின் ‘திலிப்போன்சா திலிப்போன்சா’ என்ற பதற்றமான குரலும் அவளை நிலத்தில் தள்ளிய கையும் புரியாமல் பாம்பு போல ஊர்ந்து அடுத்த அறைக்குள் அவளும் அம்மாவும் சென்று, அவளின் தம்பியைத் தூக்கிக்கொண்டு, புத்தகப்பையில் சில...
21 வயது நிகிதா, முக்கிய முடிவு ஒன்றை அன்றிரவே எடுத்தாக வேண்டும். ஒன்று உக்ரைன் இராணுவத்தில் சேர்ந்து போர் வீரனாவது. மற்றொன்று அனைத்தையும் விட்டுவிட்டு பிரிட்டனுக்குச் செல்வது; அகதியாய். தேர்வு எதுவாயினும், இனி வாழ்க்கை மாறத்தான் போகிறது. “வயலின் வாசித்த இந்தக் கைகளால், ஏ.கே.74 துப்பாக்கியேந்த...
கடந்த வாரம் பலஸ்தீன் அதிபர் அல்லது அத்தாரிட்டியின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் சீனாவுக்கு விஜயம் செய்த போது, தம் சரித்திரத்தைவிடப் பழைமையான ஒரு உலகப் பிரச்னையில் மத்தியஸ்தம் வகிக்க விரும்புவதாக அறிவித்திருந்தது சீனா. ஆம். இஸ்ரேல் – பலஸ்தீன் தகராறில் சமாதான சகவாழ்வு விரும்பி என்ற குல்லாவைச் சீனா...
அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸில் வசிக்கிறார் ஜாக் டீக்சீரா. அவர் மாசசூசெட்ஸ் நேஷனல் கார்ட், (Massachusetts Air National Guard, ) என்ற உள்ளூர் பாதுகாப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இருபத்தொரு வயதான ஜாக் Discord (டிஸ்கார்ட்)என்ற செயலியில் தீவிர வீடியோ கேமர். கடந்த ஏப்ரல் மாதம் வரை அவர்...
இந்தியாவின் இளைஞர் கூட்டம் உயர்கல்விக்காகவும், ஆராய்ச்சிக்காகவும் மேலை நாடுகளுக்குச் செல்வது தொண்ணூறுகளிலிருந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆங்கில மொழி பேசும் நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குப் பெருமளவில் மாணவர்கள் கல்வி கற்கச் சென்றுள்ளனர். சமீபகாலமாக ஆங்கில மொழி...
இங்கிலாந்து இளவரசர் ஹாரி சென்ற வாரம் இரண்டு நாள்கள் லண்டன் உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் ஒரு வழக்கில் சாட்சியாகத் தோன்றினார். அண்மைக்காலத்தில் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் ஒருவர் சாட்சிக் கூண்டில் நிற்பது இதுவே முதல் தடவை. இந்த வழக்கு பிரபலங்கள் பலரது தொலைபேசிகளையும் வாய்ஸ் மெயில்களையும் மிரர்...
இந்த வாரம் பிரித்தானிய அரசியலில் எதிர்பாராத திடீர்த் திருப்பங்கள். வெள்ளிக்கிழமையன்று முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் போறிஸ் ஜோன்சன் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை உடனடியாக ராஜினாமாச் செய்து அவரது தொகுதியில் இடைத் தேர்தல் நடத்த வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கினார். அவரைத் தொடர்ந்து அவரது...
வீட்டின் மேற்கூரையில் கைகளை இறுகப்பிடித்துக் கொண்டு நிற்கின்றனர் ஒரு தம்பதியினர். செல்பி எடுப்பதற்கு அல்ல. வீட்டின் உட்கூரை வரை தண்ணீர். வெள்ளம் சூழ்ந்த அப்பகுதியில் மீட்புப் படைக்காகக் காத்து நிற்கின்றனர். உயிர் முதல்பட்சமானதால், உணவும், குடிநீரும் இரண்டாம்பட்சமானது. இதுவரை 4 ஆயிரம் பேர்...