உக்ரைன் போருக்கான முதல்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை சவூதி அரேபியாவில் கடந்த வாரம் நடந்து முடிந்தது. அமெரிக்க, ரஷ்ய நாடுகளின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் மார்கோ ரூபியோவும், செர்கேய் லாவ்ரோவும் சந்தித்துப் பேசினார்கள். இந்தக் கூட்டத்துக்கு உக்ரைன் தரப்பு அழைக்கப்படவில்லை. அதனாலோ என்னவோ அமெரிக்காவும்...
Tag - நேட்டோ
ரஷ்ய அதிபர் புதினுடன் ஒரு நீண்ட தொலைபேசி உரையாடல். பிறகு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் ஒரு சிறிய தொலைபேசி உரையாடல். இரண்டும் முடிந்தவுடன் ரஷ்யா உக்ரைன் போர் பேச்சுவார்த்தைகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிவிட்டதாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப். சவூதி அரேபியாவில் பட்டத்து இளவரசர் முகமது பின்...
சென்ற வாரம் முழுக்க நம் பத்திரிகைகளை நிறைத்தது இந்த மும்மூர்த்திகளின் படம் தான். ரஷ்ய அதிபர் புதின் நடுவிலிருக்க, இந்தியப் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இருபுறமும் வீற்றிருந்தார்கள். நின்றாலும், நடந்தாலும், அமர்ந்தாலும் நண்பர்கள் மூவரும் பிரியவே இல்லை. உலக உருண்டையில் மேற்குலகம்...
பலயனீட்சா. வட்ட வடிவில் கிடைமட்டமாக ஒருபுறம் வெட்டிய உக்ரைனிய பிரட் இது. உக்ரைனியர்களைப் போல நடிக்கும் ரஷ்ய வீரர்கள் அல்லது உளவாளிகளைக் கண்டுபிடிக்க, இந்த ஒரு வார்த்தையைத்தான் சொல்லச் சொல்வார்களாம். இதன் கடைசி அசை ரஷ்ய மொழியில் இல்லாததால், ரஷ்யர்களால் இதை ஒருபோதும் சரியாக உச்சரிக்க முடிந்ததில்லை...
“உக்ரைனியர்கள் தங்களை இன்னும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். ஐரோப்பிய, அமெரிக்க உதவிக்காகக் காத்திருப்பது எதிர்காலத்தில் உதவாது. அதனால் ரைன்மெட்டல் குழுமம் அவர்களுக்கென ஒரு ஆயுதத் தொழிற்சாலையைத் தொடங்கவுள்ளது” என்று சென்ற வருடம் ஒரு பேட்டி அளித்திருந்தார் ஆமின் பாப்பெர்ஜெர், ஜெர்மனியின்...
“நாங்கள் மீண்டும் உக்ரைனுடன் இணைவோம் என்ற நம்பிக்கை கொஞ்சமும் இல்லை. எங்களைக் காப்பாற்ற இங்கு யாரும் வருவதில்லை” என்கிறார் கெர்சோன் நகரில் வசிக்கும் கலீனா. இரண்டு வருடங்களாக ரஷ்யாவின் பிடியிலிருக்கும் பகுதி இது. உக்ரைனால் மீட்கப்படுவோம் என்ற கனவுகளுக்கு இனி இடமில்லை என்ற நடைமுறை...
23 – பன்முனை உலகை நோக்கி.. 23-10-2002. டுப்ராவ்கா திரையரங்கு, மாஸ்கோ. “ரஷ்யக் காவலர்கள் களமிறங்கி விட்டார்கள். இது என்ன வாயு என்று தெரியவில்லை. ஒருவரையும் உயிருடன் விட்டுவைக்கும் எண்ணம் இவர்களுக்கு இல்லை. எங்களைக் காப்பாற்ற, உங்களால் செய்யக் கூடியதை உடனே செய்யுங்கள்.” திரையரங்கிலிருந்த...
1. 21ம் நூற்றாண்டின் இணையற்ற வில்லன் தேதி: 21-பிப்ரவரி-2022 (உக்ரைன் போருக்கு மூன்று நாட்கள் முன்னர்) இடம்: கிரெம்ளின் மாளிகை அவை: ரஷ்யப் பாதுகாப்பு சபை கைகளை வீசிக்கொண்டு துரித நடையுடன் நுழைகிறார், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின். பளபளவென வெள்ளைத் தூண்களுடைய அந்தப் பெரிய வட்ட அறையின் இருக்கையில்...
செப்டம்பர் 10 ஞாயிறு இரவு. லிபியாவின் கடற்கரை நகரமான டெர்னாவில் ஒரே மழை. ‘டேனியல்’ புயல் மையம் கொண்டிருந்ததால் 9-ஆம் தேதியிலிருந்தே மழை கொட்டிக் கொண்டிருந்தது. பாதி வருடத்தில் பெய்ய வேண்டிய மழையின் அளவு ஒரே நாளில் பெய்தது. மக்கள் அச்சத்திலிருந்தனர். வெள்ளம் வருமோ..? அணைகளைப் பற்றிப் பல காலமாக...
2023, ஜூலை 26-ஆம் தேதி அசர்பைஜானின் இணைய ஊடகத்தில் காணொளி ஒன்று வைரலானது. அத்தனைத் தெளிவில்லாத அந்த வீடியோவில் நீலநிறத் தார்பாலின் போர்த்திய சரக்கு லாரிகள் சாலையில் சென்றுகொண்டிருந்தன. அதன் தொடர்ச்சியாக அஜர்பைஜான் தலைவரின் வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் ஹிக்மத் ஹாஜியேவ் உடனே அந்நாட்டிற்கான இந்தியத்...