57. நாமகரணம் மூன்றடி இடைவெளியில் அவனுக்கு எதிரே அமர்ந்திருந்தேன். அவனது உயரம் என்னைச் சிறிது கலைத்துக் கலைத்து ஆடிக்கொண்டிருந்தது. இயல்பில் நான் கட்டுமஸ்தான தோற்றத்தில்தான் இருப்பேன் என்றாலும் வளர்ந்துகொண்டிருந்த காலத்தில் யாரோ உச்சந்தலையில் கையை வைத்து அழுத்தி, நிறுத்தினாற்போலக் காட்சியளிப்பதாக...
Tag - நாவல்
128 பத்து ஷங்கர் ராமன் வீட்டுப் பச்சை நிற இரட்டை மரக்கதவின் மேல்பகுதியில் மெல்லிய இரும்புக்கம்பிகள் பொருத்தப்பட்டிருக்கும். ஆளே ஒல்லி என்பதால் இவன் கைகளும் மெலிதானவை; விரல்களும் நீளம். எனவே, இவனே கைவிட்டுத் தாளிடப்பட்டிருக்கும் கதவைத் திறந்துவிடுவான். காலிங் பெல் அடித்தாலும் டிவி...
56. காணா ஒளி குடிசையை விட்டு நான் வெளியே வந்தபோது கானகத்து ஓடையில் நீராடிவிட்டு அதர்வன் வந்துகொண்டிருந்ததைக் கண்டேன். தான் குளிக்கும் ஓடையிலேயே அவனும் நீராட வருவது பற்றி சூத்திர முனி பலமுறை என்னிடம் சொல்லியிருக்கிறான். எத்தனையோ சம்பவங்கள். எவ்வளவோ அனுபவங்கள். எல்லாமே ரணம் மிகுந்தவை. அவன்...
55. ஆனந்த வல்லீ ஐயத்துக்கு இருக்கையற்ற சிலவற்றை நினைவின் மேல் வரிசையில் எப்போதும் தூவி வைப்பது நல்லதென்று மாணாக்கர்களிடம் சொல்வேன். எறும்புகளுக்கு உணவிடுவதைப் போல அது அவசியமானது. கடக்கும்தோறும் அது பார்க்கும். தேவைக்கு ஏந்திச் செல்லும். சிலந்தி தனது வலைநூலைத் தானே பின்னிக்கொள்கிறது. அது அவசியத்தின்...
54. தரு மீண்டும் காய்ச்சல் தீவிரமடையத் தொடங்கியிருந்தது. இம்முறை அது பனியினாலோ, குளிரினாலோ உண்டானதல்ல என்று அந்த பிராமணனிடம் சொன்னேன். வாழ்வில் முன்னெப்போதும் கண்டிராத அதிர்ச்சியும் பதற்றமும் என்னை இறுகக் கவ்வியிருந்தன. சுவாசம் சீராக இல்லை. நடுக்கம் உள்ளுறுப்புகள்வரை இருப்பதை உணர முடிந்தது. கண்கள்...
53. ஜீவாத்மா ஒவ்வொன்றும் விசித்திரமாக இருந்தது. எல்லாமே வினோதமாக இருந்தது. ஒரு கொலைச் செயலை நிகழ்த்தவிருப்பவனுக்கு இருக்கக்கூடிய ஆகக் குறைந்தபட்சப் பதற்ற உணர்ச்சிகூட எனக்கில்லை. தன்னை அழிப்பதற்காக வந்திருப்பவன் என்று தெரிந்தும் அவன் என்னை ஓர் அதிதியாகவே நடத்தினான். உலகு தோன்றிய நாள்முதல் எங்குமே...
52. மூப்பன் அதர்வனின் ஆசிரமத்தை நெருங்கியபோது உக்கிரமாகப் பனி பெய்யத் தொடங்கியிருந்தது. இரவு நடந்து வந்த வழியெல்லாம் பனிதான், குளிர்தான். ஆனால் பொறுக்க இயலாத அளவுக்கு இல்லை. இன்னொன்றையும் கவனித்தேன். எங்கள் கிராத பூமியில் நான் காணாத பனியில்லை. நடந்து செல்லும்போது கட்டிக் கட்டியாகவே தலையில் விழும்...
பாகம் 2 51. ஆயுதம் இருள் முற்றிலும் விலகியிருக்கவில்லை. இரவெல்லாம் நடந்த களைப்பில் சிறிது அமர்ந்து இளைப்பாறலாம் என்று தோன்றினாலும், உடனே வேண்டாம் என்றும் சொல்லிக்கொண்டேன். இன்னும் அரை நாழிகை நடந்தால் அவனது ஆசிரமத்தை நெருங்கிவிடலாம். கடமையைச் செய்து முடித்த பின்பு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும்...
50. மூன்று நாழிகை சிசிர ருது தொடங்கிய முதல் நாள் பிரம்ம முகூர்த்த நாழிகையில் நாங்கள் வித்ரு தென்படும் தொலைவைச் சென்றடைந்தோம். அம்முறை வழக்கத்தினும் அதிகமாகப் பனி பெய்துகொண்டிருந்தது. சாரனுக்குப் பனிப் பொழிவு ஒரு பொருட்டாக இல்லை. ஹிமத்திலேயே பிறந்து வளர்ந்தவன் என்பதை நான் அளித்த கம்பலத்தை...
127 தனிமரம் ரப்பர் செருப்பு கக்கூஸ் போவதற்காக அணிவது என்று குஷாலப்பா சொன்னதிலிருந்து மலிவான விலையில் கிடைக்குமா என்று ஷூ தேட ஆரம்பித்திருந்தான். பர்மா பஜார் பெட்ரோல் பங்கை ஒட்டிய கடையில் கருப்பு நிற ஷூ கொட்டிக்கிடந்தது. பார்க்க புரூஸ்லீ அணிவதைப்போல இருக்கவே, விலை கேட்டான். கடைக்காரன் மலிவாகச்...