தனது பசியைத் தணிக்கத் துரத்துகிற புலி, தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடுகிற மான். ஓட்டம் நீளநீள இருவருமே களைப்படைகிறார்கள். தனது அந்தஸ்தைக் காப்பாற்றப் புலியும், உயிரைக் காத்துக்கொள்ள மானும் ஓடுவதை நிறுத்த முடியவில்லை. மானுக்கு தூரத்திலிருந்து ஆதரவுகள் திரள, களத்தில் இப்போது புலியும் மானும் மட்டும்...
Tag - உலகம்
சன்னா மரின், பின்லாந்து பிரதமர். மிக இளம் வயதில் இப்பதவிக்கு வந்தவர். உலகின் இளைய தலைவர் என்ற பெருமை பெற்றவர். இளம் தலைவர் என்றால் அறுபது வயதில் நம்மூர் இளைஞர் அணித் தலைவர் போல் கற்பனை செய்துகொள்ளக் கூடாது. 1985-இல் பிறந்தவர். 2019இல் அதாவது முப்பத்து நான்கு வயதில் பின்லாந்தின் பிரதமர் பதவியை...
இதுவும் கடந்து போகும் என்று போரையும் கடக்கின்றனர் உக்ரைனியர்கள். காலங்காலமாக ஆக்கிரமிப்புகளை சந்தித்து வரும் இவர்களுக்கு மனோதிடத்தைக் கொடுக்க முயல்வது கலை. ஆம். டைட்டானிக் திரைப்படத்தில் படகு மூழ்கும் வேளையிலும், இசைக்கருவிகளை வாசித்து மக்களை உற்சாகப்படுத்துவார்களே அதுபோல. மேடைச் சிரிப்புரை, இசை...
கறுப்பர்களுக்கு எதிரான ஆங்கிலேய அடக்குமுறை பற்றி சரித்திரம் படித்தவர்களுக்குத் தெரியும். ஆப்பிரிக்காவை ஒரு காலத்தில் கூறு போட்டு ஆண்ட அனைத்து ஐரோப்பிய நாடுகளும் தத்தம் பங்குக்கு முத்திரை பதிக்காது சென்றதில்லை. ஆனால் ஆப்பிரிக்கர்களுக்கே நிறவெறி இருக்குமா என்றால், இருக்கும்; இருக்கிறது. வடக்கு...
நீங்கள் ஓர் உணவகத்துக்கோ ஆலயத்திற்கோ சென்றால் அங்கே வரும் மனிதர்களைக் கவனியுங்கள். உங்களை அறியாமல் என்ன செய்கிறீர்கள் என்பதை நீங்களே கவனித்துப் பாருங்கள். சென்று இறங்கிய நேரம் முதல் உங்களையே அறியாமல் எத்தனை புகைப்படங்கள் எடுத்தீர்கள், நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள, குறிப்புகள் எழுத என உங்கள் மனம்...
ஆப்கனிஸ்தான், மீண்டும் உலகின் முக்கியப் பேசுபொருளாகிக் கொண்டிருக்கிறது. என்ன பெரிய புது விஷயம்? அதே தாலிபன், அதே ஐ.எஸ்.கேதானே என்று தோன்றலாம். இல்லை. இது இன்னும் வீரிய விவகார வினோத ரச மஞ்சரி. நிரந்தரத் தீவிரவாதிகளும் திடீர் ஆட்சியாளர்களுமான தாலிபன் பதவிக்கு வந்தது முதல் தமது முதல் மற்றும் ஒரே...
அதிகாலை இரண்டு மணிக்கெல்லாம் புறப்பட்டால் மட்டுமே கொழும்புக்குப் போகும் வேனில் இடம் கிடைக்கும். பாப்பாவுடன் தாயோ தந்தையோ, யாராவது ஒருவர் போகலாம். வவுனியாவிலிருந்து பயணம் தொடங்கி பல மணி நேரங்கள் கடந்து கொழும்பு புற்றுநோய் வைத்தியசாலையை அடைவதற்குள் குழந்தை சோர்ந்தே போய்விடும். ஒரு பயணத்திற்கான...
‘ஸ்கொட்லான்ட் யார்ட் போலீஸை அழைத்து வந்து ஈஸ்டர் குண்டு வெடிப்பின் பின்னணியில் மகா மூளையாய்ச் செயற்பட்ட நபர்களின் முகங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவேன்’ என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, திடீரென்று திருவாய் மலர்ந்திருக்கிறார். இப்படித்தான் கடந்த ஜூலை மாதம் ஜனாதிபதியான போது கூட...
பொன்னியின் செல்வன் பூங்குழலி கதாபாத்திரம் ஓட்டும் பாய்மரப்படகு ஞாபகம் இருக்கிறதா? பஞ்ச பூதங்களில் ஒன்றான காற்றின் விசையைக் கொண்டியங்கும் அற்புதக் கண்டுபிடிப்பு (படகைச் சொன்னேன்). நிலக்கரி, எரிவாயு போன்று சுற்றுசூழலுக்குப் பங்கமின்றி, இயற்கையோடு இணைந்த தொழில்நுட்பம் கூடியது. இவற்றின் பக்கம்...
இம்மாதம் 15-ஆம் தேதி மீண்டும் ஒரு விமான நிலையம் தாக்கப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு முன் உக்ரைன் தலைநகர் கீவில் நடந்ததுபோல. இம்முறை சூடானில். தலைநகர் கார்ட்டூம் விமான நிலையத்திலிருந்து கரும்புகை பேரலையாய் எழும்புகிறது. மக்கள் மறைவிடங்களைத் தேடி ஒளிகிறார்கள். இராணுவத் தளம் மற்றும் அதிபர் மாளிகை துணை...