கட்டடங்கள் எல்லாம் சிமெண்ட்டும் கல்லும் குழைத்துச் செய்யப்பட்ட கட்டுமானங்கள் மட்டும் அல்ல. சில நம் உயிரோடும் உணர்வோடும் பிணைந்தவை. அதனாலேயே இரட்டைக்கோபுரங்கள் தாக்கப்பட்டது இன்னமும் அமெரிக்காவில் வருத்தமான ஒரு நிகழ்வாக இருக்கிறது. சீக்கியரின் ஆலயத்திற்குள் இந்திய இராணுவம் நுழைந்ததும்கூட...
Tag - உலகம்
இந்த வாரம் சனிக்கிழமை, ஆகஸ்ட் ஐந்தாம் தேதி பாகிஸ்தானிய அரசியலில் ஒரு புதிய திருப்பம். மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் தேசிய நாயகனாகக் கருதப்பட்ட ஒருவர் இந்த வாரம் நீதி மன்றத்தினால் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுக் காவலர்களால் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் யார்? பாகிஸ்தான் கிரிக்கெட்...
ஜூலை 26, 2023 அன்று மேற்கு ஆப்பிரிக்காவில் பன்னிரண்டு இலட்சம் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் சுமாராக இரண்டரைக் கோடி மக்கள் வாழும் நைஜர் என்ற தேசத்தில் ராணுவப் புரட்சி நடந்தது. 2021-ம் ஆண்டு மக்கள் ஆணை மூலம் பதவிக்கு வந்த மொஹமட் பஸும் என்ற அதிபர் நகர்த்தப்பட்டு ராணுவத் தளபதி அப்துர்ரஹ்மான் ஷியானி...
மூன்று மில்லியன் டாலர் லஞ்சப் பணம். கையும் பணமுமாகக் கைதானது – உக்ரைனின் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, சீவலொத் கன்யாஸிவ். நீதிமன்றத்திற்கு உள்ளேயே அலுவலகம் ஒன்றை வைத்திருக்கிறார். நாடு முழுவதுமிருந்து வந்து குவியும் லஞ்சப்பணத்தை, முறையே கணக்கு வைத்துக் கொள்வதற்கு. லஞ்சம் வாங்குவதை ஆதாரத்தோடு...
2011ம் ஆண்டு நவம்பர் மாதம் ஜி20 மாநாடு நடந்து கொண்டிருந்தது. அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் சாவகாசமாய்ப் பேசிக் கொண்டு கொண்டிருந்தார், பிரான்ஸ் அதிபர் நிகலஸ் சார்கோஸி. “மிஸ்டர் ஒபாமா ! இந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு இருக்கிறாரே.. பெரும் கபடவேடதாரி.. எனக்கு என்னவோ அவர் நடவடிக்கைகள் எதுவுமே...
உலகம் உண்ணும் உணவுப் பொருள்களில் பெரும்பாலும் இருப்பது மாவுச் சத்து. இத்தாலியர் உணவில் மைதா அல்லது கோதுமை மாவில் செய்த பாஸ்தா. அமெரிக்கர்களின் சாண்ட்விச்சில் பிரெட். வட இந்தியர்களின் உணவில் கோதுமையால் செய்யப்பட்ட சப்பாத்தி. சீனர்கள், இந்தியர்கள், தாய்லாந்து வியட்நாமியரின் உணவில் அரிசியால்...
இளஞ்சிவப்பு மேலங்கியும், அதேவண்ணக் குளிர்க் குல்லாயும் அணிந்த ஒன்று தத்தக்கா புத்தக்கா என ஓடி வருகிறது. உற்றுப்பார்த்தால் அந்தக் குல்லாய்க்குள் ஒரு குழந்தை. ரஷ்ய இராணுவ வீரரை ஓடிவந்து கட்டிப்பிடித்துக் கொள்கிறது. இன்னும் பல நீல, வெள்ளை, சாம்பல் நிறக் குல்லாய்களால் அவர் சூழ்ந்து கொள்ளப்படுகிறார்...
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்ததாகப் பொருளாதாரத்தில் பெரும் பாய்ச்சலை நடத்திக் கொண்டிருந்த பங்களாதேஷுக்கு இது போதாத காலம். யார் கண்பட்டதோ தெரியவில்லை… வளர்ச்சி மதிப்பீடுகளும், எதிர்வு கூறப்பட்ட அசத்தல் புள்ளிவிபரங்களும் படிப்படியாய்க் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. 2026-ம் ஆம் ஆண்டளவில் குறைந்த...
பலரும் அண்ணாந்து பார்க்கும் வண்ணம் உயர உயரப் பறந்துகொண்டிருந்த ஒரு வண்ணமயமான பலூன் கொஞ்சம் கொஞ்சமாகத் தரையில் இறங்கினால், ஒரு வித வருத்தமே ஏற்படும். எப்போதாவது அதீத பொருளாதார நெருக்கடியில் பலருக்குக் கடன் கொடுத்துவிட்டு, நமக்கே ஒரு நெருக்கடி வரும் போது அதைத் திரும்பக் கேட்க முடியாமலும் அவர்களாகக்...
உயர்ரக உணவுப் பண்டங்களைப் பரிமாறும் உலகின் உன்னதமான விருந்துபசாரங்களில், கம்பீரமாகக் கோப்பைகளில் மின்னும் பொருள் சிலோன் டீ. ஜப்பானின் வக்யு பீஃப், ஸ்கொட்லாந்தின் வைன், லண்டனின் ஜின் மற்றும் இந்தியாவின் சிக்கன் டிக்காவுடன் சரிசமமாகத் தோள் கொடுத்து இலங்கையின் நாமத்தை சர்வதேசத்தில் மணக்க வைக்கும்...