Home » உலகம் » Page 13

Tag - உலகம்

உலகம்

வங்க தேச அரசியல்: சைவ ராணுவமும் ஒரு சாது தலைவரும்

சந்தேகமோ ஆச்சர்யமோ எதுவுமில்லை. பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேய்க் ஹசீனாவின் ஆட்சி இப்படித்தான் முடிந்து போகும் என்று சர்வதேச அரசியலைக் கூர்ந்து கவனிக்கும் யாருக்குமே தெரிந்துதான் இருந்தது. அது என்றைக்கு என்று தான் கேள்வியாய் இருந்தது. போராட்டக்கார மாணவர்களை ‘தேசத் துரோகிகள்’ என்று பொருள்படும்...

Read More
உலகம்

எங்கெங்கும் போராட்டம், எப்போதும் திண்டாட்டம்

ஆப்பிரிக்க நாடுகளில் இன்றும் பொருளாதார வளர்ச்சியில் பின் தங்கியிருக்கும் நாடுகள் 22. சஹாரா பாலைவனத்திற்குக் கீழே உள்ள 53 ஆப்பிரிக்க நாடுகளை, சப் சஹாரன் ஆப்பிரிக்கா என்கிறார்கள். அதில் இந்த 22 ஏழை நாடுகளும் அடக்கம். எப்போது பார்த்தாலும் சண்டை, போராட்டம் என்றுதான் இருக்கும். ஆனால் சமீப காலமாக Gen Z...

Read More
உலகம்

மொட்டுக் கட்சியின் குட்டித் ‘தல’

திடீரெனப் பெரும் சலசலப்புடன் விதவிதமான புகைப்படங்கள் இண்டர்நெட் முழுக்கப் பரவத் தொடங்கின. அனைத்திலும் டிசைனர் ரக ஆடைகளுடன் ஜொலித்தார் நாமல் ராஜபக்ஷ என்கிற ராஜபக்ஷ புத்திரன். என்ன இருந்தாலும், தந்தையைப் போல, வெண்ணிற ஆடையுடன் சிவப்பு சால்வை போட்ட அவரின் ‘தேசிய’ படமளவு வேறெதுவும் எடுபடவில்லை...

Read More
உலகம்

இனவாதிகளுக்கு இடம் இல்லை!

ஜூலை முப்பதாம் தேதியில் இருந்து ஒரு வாரமாகப் பிரித்தானியாவின் பல நகரங்களிலும் கலவரம் மூண்டது. சவுத்போர்ட் நகரில், பதினேழு வயது கொண்ட ஒருவனால் மூன்று சிறுமிகள் கத்தியினால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டதே இக்கலவரங்களுக்கான ஆரம்பப் புள்ளி. கொலை செய்தவன் படகு மூலம் சட்ட விரோதமாக வந்திறங்கிய ஒரு இஸ்லாமிய...

Read More
உலகம்

குற்றம் புரிந்தாலும் குடியுரிமை வேண்டும்!

ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளை மட்டுமே அந்தக் கூடாரங்களில் காண முடியும். வெயிலையோ, குளிரையோ தாங்க முடியாத கூடாரங்கள் இவை. முதலுதவியைத் தாண்டிய மருத்துவ வசதிகள் இல்லை. தொற்று நோய்களுக்குக் குறைவில்லை. இறந்துவிடாமல் தாக்குப் பிடிக்குமளவு உணவு வழங்கப்படுகிறது. மற்றபடி வெளியுலகைத் தொடர்பு...

Read More
உலகம்

ஆக்சிஜனும் ஓர் ஆழ் கடல் அரசியலும்

வருடம் 2013. பேராசிரியர் ஆண்ட்ரூ ஸ்விட்மேன் தலைமையிலான குழு ஆய்வுப்பணிகளுக்காகக் கிளம்பியிருந்தது. அவர்கள் ஸ்காட்டிஷ் கடல் அறிவியல் சங்கத்தைச் சேர்ந்தவர்கள். அது உலகளவில் பெரிய, பழமையான கடல் ஆய்வு மையம். அவர்கள் சென்றிறங்கிய இடம், பசிபிக் பெருங்கடலின் கிளாரியன்-கிளிப்பர்டன் மண்டலம். ஹவாய்க்கும்...

Read More
உலகம்

இஸ்மயில் ஹனியா: திட்டமிட்ட படுகொலை; முற்றுப்பெறாத யுத்தம்

“ஒரு தலைவன் மடிந்தால் இன்னொரு தலைவன் வருவான்…” ஈரான் தலைவர் அயத்துல்லா கமேனியிடம் விடைபெறும்போது, இஸ்மயில் ஹனியா, கடைசியாகச் சொன்னது இதுதான். சில மணி நேரங்களில் அவர் படுகொலை செய்யப்பட்ட பிறகு அச்சொற்கள் அவருடைய கடைசிச் செய்தியாக மாறிவிட்டன. புதிதாகப் பதவியேற்ற ஈரான் அதிபருக்கு வாழ்த்துச் சொல்ல...

Read More
உலகம்

அதிகார போதை; தவறான பாதை

அதிகாரம் ஒரு போதை. அதைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்ய வைக்கும். இதனாலேயே கட்சிகள் தேர்தல் சமயத்தில் பல முறைகேடுகளைத் தலைவர்கள் பெயரில் நிகழ்த்துகின்றன.மக்களாட்சியில் தேர்தல் நடக்கும் போது சில வன்முறைகள் நடப்பது இப்போதெல்லாம் சகஜமாகி விட்டது. வரலாறு காணாத நிகழ்வாக...

Read More
உலகம்

இங்கிலாந்தில் வதந்தித் தீ

சவுத்போர்ட் என்பது வடமேற்கு இங்கிலாந்தில் கடற்கரையோடு உள்ள ஒரு நகரம். அங்கு சென்ற வாரம் 29 ஜூலை திங்கள் கிழமை அன்று ஒரு நடனப் பள்ளியில் ஒரு நிகழ்வு. பல சிறுவர்கள் அந்நிகழ்வில் பங்கேற்றனர். அங்கு வந்த பதினேழு வயதான ஒருவன், அந்நிகழ்வுக்கு வந்திருந்தவர்கள் மீது கத்தியினால் தாக்குதல் நடத்தினான். இது...

Read More
உலகம்

அமெரிக்கத் தேர்தலும் ‘விடுதலை’ அரசியலும்!

“நான் முதல்முறை அழுதது, நான் எதிர்பாராத நேரத்தில் எனக்கு அனுப்பப்பட்ட பார்சலைப் பார்த்து. சிறைக்குள் இருக்கும் எனக்கு என்னென்ன தேவை என்று அக்கறையுடன் ஒவ்வொரு பொருளும் தேர்வு செய்யப்பட்டிருந்தன. பல் துலக்க பிரஷ், இனிப்பும் நெய்யும் கலந்த அல்வா மற்றும் சூடான காபி. இதைப் போன்ற சின்ன சின்ன...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!