Home » இனவாதிகளுக்கு இடம் இல்லை!
உலகம்

இனவாதிகளுக்கு இடம் இல்லை!

ஜூலை முப்பதாம் தேதியில் இருந்து ஒரு வாரமாகப் பிரித்தானியாவின் பல நகரங்களிலும் கலவரம் மூண்டது. சவுத்போர்ட் நகரில், பதினேழு வயது கொண்ட ஒருவனால் மூன்று சிறுமிகள் கத்தியினால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டதே இக்கலவரங்களுக்கான ஆரம்பப் புள்ளி.

கொலை செய்தவன் படகு மூலம் சட்ட விரோதமாக வந்திறங்கிய ஒரு இஸ்லாமிய அகதி எனும் வதந்தி வலதுசாரிகளின் சமூகவலைத் தளங்களிலும் குழுக்களிலும் வைரலாகப் பரவத் தொடங்கியது. வலதுசாரிகள், “இந்நாட்டின் குடியேற்றம் கட்டுக்கடங்காமல் போகிறது. அதனால் எமது சிறுவர்கள் இப்படி அநியாயமாகப் பலியாகிறார்கள்” என்று எதிர்ப்புக் கூட்டங்கள் ஆரம்பித்தனர். சட்டப்படி அமைதியாக ஒன்று கூடித் தங்கள் கருத்தினைத் தெரிவிப்பதற்குக் கருத்துச் சுதந்திரம் உள்ள நாடு பிரித்தானியா. ஆனால் இப்படியான ஒன்று கூடல்கள் அகதிகளுக்கும் குடியேற்றத்துக்கும் எதிரான சுலோகங்களோடு ஆரம்பித்து விரைவிலேயே வன்முறைகளாக மாறின.

பல இடங்களில் வாகனங்கள் தீக்கிரயாக்கப் பட்டன. கடைகள் உடைக்கப்பட்டுக் கொள்ளை அடிக்கப்பட்டன. தடுக்க வந்த போலீஸார் தாக்கப்பட்டனர். எதிர்பாராமல் ஆரம்பிக்கப்பட்ட இத்தொடர் கலவரங்களைப் போலீஸாரும் கட்டுப்படுத்தச் சிரமப்பட்டனர்.

ஒவ்வொரு இரவும் சிறிது சிறிதாக ஆரம்பித்த கலவரம் ஆகஸ்ட் எட்டாம் திகதி புதன் கிழமை இரவு உச்சக் கட்டத்தை அடையுமோ எனும் பயம் பலரின் மனதிலும் தோன்றியது. அதற்கான காரணம் அன்றிரவு முப்பது இடங்களில் ஒன்று கூடும்படி வலதுசாரிச் சமூக வலைத் தளங்களில் அழைப்பு விடப்பட்டதாகச் செய்திகள் வெளி வந்தன. இவை முக்கியமாக அகதிகளை ஆதரிக்கும், அவர்களுக்காக வாதாடும் சட்டத்தரணிகளின் நிறுவனங்களைக் குறி வைத்து ஏற்பாடு செய்யப் படுவதாகவும் செய்திகள் வெளி வந்தன. புதன் கிழமை காலை அளவில் நூறு ஒன்று கூடல்கள் பற்றிய தகவல்களை போலீஸ் அவதானித்து வருவதாகவும் செய்திகள் வெளி வந்தன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்