“எவ்வளவு சீக்கிரம் ஆயுத உதவிகள் கிடைக்கிறதோ, அவ்வளவு சீக்கிரம் போர் முடிவுக்கு வரும்.” என்றார் பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில். இரண்டாம் உலகப் போரின்போது அவர் கூறிய இதையேதான், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இன்று அமெரிக்காவிடம் கேட்கிறார். “உங்கள் விரைவான உதவிகள்...
Tag - ஹமாஸ்
மே 19-ஆம் தேதி ஈரான் அதிபர் இப்ராஹீம் ரெய்ஸி எதிர்பாராதவிதமாய் விமான விபத்தில் கொல்லப்பட்ட போது அதுவரை அணிந்திருந்த மத்தியக் கிழக்கு தற்காலிக தாதா மாஸ்கை கழற்றி வைத்தது ஈரான். “சற்று நில்லுங்கள் தம்பிகளே! உள்ளூரில் கொஞ்சம் வேலை இருக்கிறது” என்று தன் ப்ரொக்ஸிகளான ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஏமனின்...
மார்ச் மாதத்தில் இருந்தே ராஃபாவில் தாக்குதல் தொடங்கப் போகிறோம் என்று சொல்லிக் கொண்டிருந்தது இஸ்ரேல். தினமும் நடக்கும் தாக்குதல் போலல்லாது முழுவேகத்தில் உள்ளே நுழைந்து தாக்கும் திட்டம் அது. காஸா பாலஸ்தீனியர்கள், வடக்கு முனையில் ஆரம்பித்துக் கொஞ்சம் கொஞ்சமாக இடம் பெயர்ந்து தென்கோடியில் உள்ள ராஃபாவில்...
பள்ளிக்கூடத்தில் வம்பு செய்வதற்கென்றே சில பிள்ளைகள் இருப்பார்கள். இதில் யாராவது தன்னை அடித்துவிட்டார்கள் என்று முறையிட்டால், “நீ என்ன செய்தாய்?” என்ற கேள்விதான் முதலில் வரும். மத்தியக் கிழக்கு நாடுகளில் எங்கு மிசைல்கள் விழுந்தாலும் இந்தக் கேள்வியும் வந்துவிடும். கூடவே “மூன்றாவது உலகப் போர்...
காஸா கடற்பகுதியில் அவசரமாக ஒரு கப்பல்துறையை அமைக்கவிருக்கிறது அமெரிக்கா. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை அந்தக் கப்பல்துறை மூலமாக வழங்கப் போவதாக அறிவித்திருக்கிறது. அக்டோபர் ஏழாம் தேதியிலிருந்து காஸாவின் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போர் இன்னும் முடிந்தபாடில்லை. ஐந்து...
அக்டோபர் ஏழு தாக்குதலுக்குப் பிறகு முதல் முறையாக ஹமாஸ் பதினெட்டுப் பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுத் தங்கள் தரப்பினை முன்வைத்துள்ளது. ஆங்கிலத்திலும் அரபு மொழியிலும் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை ஐந்தாகப் பிரித்து பல்வேறு விளக்கங்களை அளித்துள்ளது ஹமாஸ். பற்றுறுதிமிக்க பாலஸ்தீனியர்கள், அரபு முஸ்லிம்...
பாலஸ்தீன் ஸ்டேட் என்கிற தீர்வை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் அவ்வப்போது சொல்லி வருகின்றன. இஸ்ரேல் தொடர்ந்து அதை மறுத்து வருகிறது. சமீபத்தில் பைடன், ஏதோவொரு விதத்தில் பாலஸ்தீன் ஸ்டேட் அமைவதை நெதன்யாகு ஒப்புக்கொள்வார் என்று நம்புவதாகத் தெரிவித்தார். ஷபாத் நாளாக இருந்தாலும் பரவாயில்லை என்று...
இஸ்ரேல் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது தென் ஆப்பிரிக்கா. காஸாவில் இருபத்தியோராயிரத்திற்கும் மேலான பாலஸ்தீனியர்களை இனப்படுகொலை செய்து வருகிறது என்பது தென்னாப்ரிக்காவின் குற்றச்சாட்டு. கடந்த அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பு தங்கள் நாட்டுப் பொதுமக்களைக் கொன்றதற்குப் பதிலடியாக இஸ்ரேல்...
அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பது பழங்காலச் சொலவடை. அமெரிக்கா அன்றி ஓரணுவும் அசையாது என்பது நவீனச் சொலவடை. அதிபர் ஜோ பைடனும் அவரது நிர்வாகமும் ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையே நிகழும் உரசல்களில் ஜனநாயகம் பக்கம் நிற்பதை அடியொட்டியே பன்னாட்டுக் கொள்கைகளில் முடிவெடுக்கிறார்கள். மக்களின்...
ஒரு வாரம் இடைவெளி கொடுத்து 110 பணயக் கைதிகளை மீட்டது இஸ்ரேல். பெரும்பாலும் பெண்களும், குழந்தைகளும், வெளிநாட்டவரும். 240 பாலஸ்தீனியர்கள் விடுதலை ஆனார்கள். ஹமாஸிடம் மீதம் இருக்கும் 140 பணயக் கைதிகள் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலும் ஆண்கள். ஒருவார இடைவெளிக்குப் பிறகு இஸ்ரேல் தொடங்கிய தாங்குதல்...