Home » தொடரும் » Page 17

Tag - தொடரும்

தொடரும் பணம்

பணம் படைக்கும் கலை – 31

31. வாங்கலாமா, வேண்டாமா? ‘கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்று ஒரு வரியைக் கேட்டிருப்பீர்கள். இது எவ்வளவு பொருத்தமான உவமை என்பது உண்மையில் கடன்பட்டவர்களுக்குத்தான் தெரியும். அந்தக் கடனைச் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்த இயலாமல் தடுமாறியவர்களுக்குத்தான் தெரியும்...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 126

126 தேவைகள் ‘எனக்கான தேவைகள் மிகவும் குறைவு’ என்று பச்சையப்பாஸ் கல்லூரி மாணவனாக பரீக்‌ஷாவில் சேர்ந்த புதிதில் ஞாநியிடம் எதைப்பற்றிய பேச்சுக்கிடையிலோ சொன்னான். ‘அப்படியா சொல்றே’ என்றார் உடைந்த தொண்டையில். ‘ஆமா. எனக்கென்ன பெரிய தேவை இருக்கு. பெரிய ஆசையே இல்லாதப்ப பெருசா தேவைனு என்ன இருக்கப்போகுது.’...

Read More
தடயம் தொடரும்

தடயம் – 1

தடயவியல் – ஓர் அறிமுகம் பதினைந்து இருபது வருடங்களுக்கு முன்னால் தடயவியலைப் பற்றி அதிகம் பேர் பேசியதில்லை. அதன் மீது நிழற்திரை படர்ந்தே இருந்தது. ஆனால், தற்சமயம் இந்த இயல் பெரிய பேசுபொருளாக உள்ளது. அதன்மீது ஊடகங்கள், குறிப்பாக வெப் சீரீஸ்கள் பாய்ச்சிய ஒளி இதற்குக் காரணமாக இருக்கலாம். இன்றைய தமிழ்த்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 130

130. ‘கே’ பிளான் “நேருவுக்குப் பின் யார்?” என்ற கேள்வி  1962ல் நேருவுக்கு உடல் நலம் குன்றியதை அடுத்துதான்  முதல் முறையாக எழுப்பப்பட்டது என்று நினைத்துவிடாதீர்கள்.  1950களின் மத்தியில் கூட ஒரு முறை  எழுந்தது. அப்போதும், அதற்கு  நேரிடையாக பதிலேதும் சொல்லாமல், புறந்தள்ளிவிட்டார் நேரு. இந்தக்...

Read More
சண்டைக் களம் தொடரும்

சண்டைக் களம் – 1

அறிமுகம் ஆதிமனிதன் உணவுக்காக முதலில் ஓடியிருக்கிறான். பின்னர் விலங்குகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள அவற்றுடன் போராடியிருக்கிறான். விலங்கு சூழ் காட்டில் உயிர்வாழ அவன் மூச்சுவிட்டதற்கும் உணவு உண்டதற்கும் அடுத்தபடியாக சண்டைதான் செய்திருக்கிறான். விலங்குகளுடன் சண்டையிடும்போதே அவற்றின் தாக்கும்...

Read More
எனதன்பே எருமை மாடே தொடரும்

எனதன்பே, எருமை மாடே! – 1

1. எருமையின் அருமை எருமை. தமிழ் பேசும் நல்லுலகில் வாழ்வில் ஒரு தடவையாவது இந்த வார்த்தையால் திட்டப்படாதவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றே சொல்லலாம். வீட்டில் குடும்பத்தினரால், முக்கியமாக வயதில் மூத்த குடும்ப அங்கத்தினரால், அல்லது பொறுமை குறைந்த ஆசிரியர்களால் அல்லது நண்பர்களால் இந்த வசைச்...

Read More
குட்டிச்சாத்தான் வசியக் கலை தொடரும்

குட்டிச்சாத்தான் வசியக் கலை – 1

அந்தந்த நேரத்து நியாயம் ஆயகலைகள் அறுபத்து நான்கு. அத்துடன் இப்போது ஒன்றைச் சேர்த்துக்கொள்ளுங்கள். அறுபத்தைந்தாவதாக, ஒரு நியூ அட்மிஷன். ப்ராம்ப்ட் எஞ்சினியரிங். சுருங்கச் சொன்னால் ஏ.ஐயிடம் வேலை வாங்கும் கலை. இதுவே குட்டிச்சாத்தான் வசியக் கலை. வேலை செய்வது எளிது. ஆனால் பிறரிடமிருந்து வேலை வாங்குவது...

Read More
உரு தொடரும்

உரு – 30

செம்பருத்தி எழுத்துரு உருவாக்கத்தில் அழகான எழுத்துகளை வடிவமைப்பது ஒரு பாதி வேலை. அதைக் கணினியில் பயன்படுத்தும் விதத்தில் மாற்றுவது மறு பாதி வேலை. எழுத்துரு வடிவமைப்பாளர், எழுத்துருப் பொறியாளர் என்று இரு வேறு வேலைகள் இவை. இன்னும் சில நுட்பமான வேலைகளும் இத்துறையில் உள்ளன. அது பற்றிய விழிப்புணர்வு...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 129

129. கை கொடுத்த கோவா ஏற்கனவே இரண்டு பொதுத் தேர்தல்களையும், அதனோடு கூட மாநில சட்டப் பேரவைகளுக்கான தேர்தல்களையும் நடத்திய அனுபவம் பெற்றிருந்தது தேர்தல் கமிஷன். அதன் பயனாக, மூன்றாவது பொதுத்தேர்தலை எதிர்கொள்வது அதற்கு சுலபமாகத்தான் இருந்தது. இந்தியாவின் முதல் தேர்தல் ஆணையாளராக இருந்த சுகுமார் சென்...

Read More
சாத்தானின் கடவுள் தொடரும்

சாத்தானின் கடவுள் – 30

30. ஒன்றானது ஆதியிலே பிரம்மம் இருந்தது. அதைத் தவிர வேறொன்றுமில்லை. பிரம்மத்திலிருந்து பிரபஞ்சம் தோன்றியது. பிரபஞ்சத்தில் பூமியும் இருந்தது. நீரும் நிலமும் கலந்த பூமியில் உயிரினங்கள் தோன்றின. தாவரங்கள் தோன்றின. பிறகு குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான். அவனுக்கு ஆறாவது அறிவு தோன்றியது. அவன்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!