கனடா, கிரீன்லாந்து, பனாமா, காஸா என்று அனைத்திற்கும் ஆசைப்படும் டிரம்புக்கு, பலஸ்தீன் என்ற சரித்திர பூமியின் பின்புலம் அவசியமில்லாத ஒன்று. இந்த உலகத்தில் நடந்த மிகப் பெரும் நில அபகரிப்பின் வலிகளும், போராட்டங்களும் தேவையில்லாத ஒன்று. வரலாறு நெடுகிலும் நடந்த யுத்தங்களும், பலியான லட்சக்கணக்கான...
Tag - உலகம்
ரஷ்ய அதிபர் புதினுடன் ஒரு நீண்ட தொலைபேசி உரையாடல். பிறகு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் ஒரு சிறிய தொலைபேசி உரையாடல். இரண்டும் முடிந்தவுடன் ரஷ்யா உக்ரைன் போர் பேச்சுவார்த்தைகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிவிட்டதாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப். சவூதி அரேபியாவில் பட்டத்து இளவரசர் முகமது பின்...
அமெரிக்காவுக்குப் பலவகை கடவுச்சீட்டுகளில் வருபவர்கள் முறையாகப் பணி செய்து அரசுக்கு வருமான வரி செலுத்தி வாழ்பவர்கள் உண்டு. அவர்கள் குழந்தைகள் இங்கே அரசால் பெறும் சலுகைகள் குறித்து அரசாங்கத்துக்கோ மக்களுக்கோ எந்தக் குறையும் இல்லை. ஆனால், சட்டவிதிகளை மீறி அமெரிக்காவில் நுழையும் மக்கள், கடவுச்சீட்டுக்...
நம்புவதற்குச் சற்றுக் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். ஒரு பாரம்பரிய வழக்கம், தொன்று தொட்டுத் தொடர்ந்த ஒரு கலாசாரம் அத்தனை சீக்கிரத்தில் எப்படிக் காணாமல் போனது என்று புருவம் உயர்த்துவதைத் தவிர வேறு வழி இல்லை. ஆம். ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதித் தேர்தலில்...
‘உன் நண்பனைக் காட்டு, நீ யாரென்று சொல்கிறேன்’ என்பது டிஜிட்டல் உலகிலும் செல்லுமா என்பது தெரியவில்லை. ‘நெகிழி (பிளாஸ்டிக்) பாட்டிலைக் காட்டு. எந்த நாட்டில் இது தயாரிக்கப்பட்டதென்று சொல்கிறேன்.’ என்று சவால் விடத் தயாராக இருக்கின்றனர் கடல் உயிரியலாளர்கள். இங்கிலிஷ் கால்வாயில்...
இந்தியாவும் பங்களாதேஷும் தத்தமது நாட்டில் இருக்கும் தூதரக அதிகாரிகளைக் கூப்பிட்டு மாறி மாறி அதிருப்தி தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். முஜிபுர் ரஹ்மான் நினைவு இல்லத்தை இடித்து நொறுக்கி, ஆரம்பித்த இடத்திலேயே இருக்கிறோம் எனச் சொல்லாமல் சொல்கிறது பங்களாதேஷ். வன்முறை எதனால் ஆரம்பித்தது என்று...
கேரள மாநிலத்தைப் பாதியாக வெட்டியெடுத்தால் கூட எல் சால்வடோரை விடச் சற்று பெரியதாக இருக்கும். பத்து வருடங்களுக்கு முன்னர் இந்தச் சிறிய நாடு உலகின் குற்றவாளிகளின் தலைநகரம் என்றும், உலகின் பயங்கரவாத நாடுகளில் ஒன்று என்றும் அழைக்கப்பட்டது. இன்று தங்கள் நாட்டை சுத்தமாக்கிவிட்டு, வெளிநாட்டுக் குற்றவாளிகளை...
டொனால்ட் டிரம்ப், தாம் பதவியேற்ற நாள்முதல் தேர்தல் வாக்குறுதிகளை அதிரடியாக நிறைவேற்றி வருகிறார். ‘முதலில் அமெரிக்கா பிறகுதான் மற்ற நாடுகள்’ என்ற கொள்கையில் தீவிரமாக இருக்கிறார். உலக நாடுகளுக்கு அமெரிக்கா செய்து வந்த உதவிகளை அடுத்த தொண்ணூறு நாள்களுக்கு நிறுத்தியிருக்கிறார். அமெரிக்க...
ஒரு கையெழுத்து பல கோடி மக்களின் தலையெழுத்தை ஒரே வாரத்தில் புரட்டிப் போட்டிருக்கிறது. இப்படி நடக்கும் என்று தெரிந்தே, சிறிது கூட கவலையோ பரிதவிப்போ இல்லாமல் அதைச் செய்திருக்கிறார் அமெரிக்க அதிபர். சென்ற வருடத்தில் மட்டும் அமெரிக்கா, தன் பன்னாட்டு நிறுவனத்தின் (USAID) மூலம் $7.2 பில்லியன் பணத்தை...
மெக்சிகோ உள்ளிட்ட இதர மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து புலம்பெயர நினைக்கும் மக்களின் கனவில் மண்ணை அல்ல; பாறாங்கல்லையே தூக்கிப் போட்டுள்ளன அமெரிக்காவின் புதிய விதிமுறைகள். உலகின் ஓய்வில்லாத எல்லையாகச் சொல்லப்படுவது அமெரிக்காவின் தெற்கு திசையிலுள்ள மெக்சிகோ எல்லை. தினசரி சுமார் ஆறாயிரம் மக்கள் இங்கே...