இருநூறு ரூபாய் விலைக் குறைப்பு – இந்திய சமையல் எரிவாயுவிற்கு. அடுத்து பெட்ரோல் என்ற ஆசையிருந்தால், மனத்தைத் தேற்றிக் கொள்ளுங்கள். இப்போதைக்கு வாய்ப்பில்லை இந்தியர்களே! உக்ரைன் – ரஷ்யப் போரின் புண்ணியத்தில், நமக்கு விலையேறாமல் இருந்ததே பாக்கியம். ஐரோப்பிய நாடுகளின் திண்டாட்டத்தைப்...
Tag - உலகம்
சொந்த மண்ணில் வாழ வழியில்லாமல் அலைவோருக்காக அமைக்கப்படுவது, அகதி முகாம். இது உலகெங்கும் உண்டு. பல்வேறு நாடுகள். பல்வேறு காரணங்கள். பல்லாண்டு காலமாக உள்நாட்டுப் போரில் சிதறிச் சின்னாபின்னமாகிக் கிடக்கும் சிரியாவில் இல்லாதிருக்குமா? உண்டு. என்ன ஒரு வித்தியாசம் என்றால் சிரியாவின் வடக்கு எல்லையோரம்...
ஆப்கானிஸ்தான் என்றால் உள்நாட்டுப் போரும் தாலிபன் இயக்கமும்தான் பொதுவாக நினைவுக்கு வருபவை. ஆனால் இந்த நாடு இயற்கை வளங்கள் அதிகமுள்ள ஒரு நாடு என்பது பலருக்குத் தெரிந்திருக்காது. செம்பு, லிதியம் போன்ற உலோகப் பொருட்களும், இரத்தினக் கற்களும் ஆப்கானிஸ்தானின் இயற்கை வளங்களில் முக்கியமானவை. பாஞ்ஷிர்...
உலகில் இரண்டு பெரிய மக்களாட்சி நடக்கும் நாடுகளான இந்தியாவும் அமெரிக்காவும் பொதுத் தேர்தலுக்குத் தயாராகிக்கொண்டிருக்கின்றன. இரண்டுமே ஜனநாயக முறையில் ஆட்சி நடக்கும் நாடுகள்தான் என்றாலும் இரண்டின் தேர்தல் முறையும் மாறுபட்டவை. அமெரிக்கா தனது அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது...
உலகத்தில் புரிந்து கொள்ள முடியாத சங்கதிகளின் பட்டியலை எழுதச் சொன்னால் பெண்களின் மனசுக்கு அடுத்தபடியாகப் பாகிஸ்தான் அரசியலைக் கை காட்டும் போக்கே இத்தனை நாளாய் இருந்தது. வரிசையின் புது அப்டேட்டில் தாராளமாய் ரஷ்யாவின் அதிபர் விளாதிமிர் புதினையும் சேர்த்துக் கொள்ளலாம். புதின் இந்த உலகத்தின் மர்மங்களில்...
தமிழர் ஒருவர் சிங்கப்பூரின் புதிய அதிபராகியிருக்கிறார். தர்மன் சண்முக இரத்தினம். லீ க்வான் யூவைத் தவிர சிங்கப்பூரில் வேறெந்தத் தலைவரையும் அறியாததொரு தலைமுறை இங்குண்டு. அவர்களுக்கு இக்கட்டுரை பயன்படும். சிங்கப்பூர், ஆசியாவில் ஒரு அதிசயம். சின்னஞ்சிறியதாக, சென்னை நகரின் பரப்பளவை விடவும் சிறிது...
ஆகஸ்ட் 24, 2023 அன்று எல்லா நாட்டுத் தொலைக்காட்சிகளிலும் இதுவரை காணாத அதிபர் டிரம்ப்பின் புகைப்படம் ஒன்று காட்டப்பட்டது. ஜார்ஜியா வழக்கில், முதன்மைக் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டு $200,000 சொந்தப் பிணையில் (Bail bond), வெளியே வந்த அதிபர் டிரம்ப்பின் புகைப்படம்தான் அது..! அமெரிக்க அதிபர்களைப்...
உலகத்தில் மனிதர்கள் வாழப் பொருத்தமற்ற நாடுகளின் அணிவரிசையில் எப்போதுமே முன்னணி முத்தண்ணாவாக உட்கார்ந்திருக்கும் ஸிம்பாப்வேயில் சென்ற வாரம் அதிபர் தேர்தல் நடந்தது. முடிவு ஒன்றும் பிரமாதமில்லை. கடந்த நான்கு தசாப்தங்களாகத் தோல்வியடைந்த தேசத்துக்குரிய அவல லட்சணங்களில் ஒன்றுதான் பெருபேறுகளும். கடந்த...
2023, ஜூலை 26-ஆம் தேதி அசர்பைஜானின் இணைய ஊடகத்தில் காணொளி ஒன்று வைரலானது. அத்தனைத் தெளிவில்லாத அந்த வீடியோவில் நீலநிறத் தார்பாலின் போர்த்திய சரக்கு லாரிகள் சாலையில் சென்றுகொண்டிருந்தன. அதன் தொடர்ச்சியாக அஜர்பைஜான் தலைவரின் வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் ஹிக்மத் ஹாஜியேவ் உடனே அந்நாட்டிற்கான இந்தியத்...
கொந்தளிப்பு நல்லதல்ல. மனத்திற்கும் சரி, விமானத்திற்கும் சரி… வெளிப்படும் நேரம் விமானம் மட்டுமல்ல, வாழ்க்கையும் சரிந்துவிடும். சீராகப் பறந்து கொண்டிருந்தது வாக்னர் படையின் ஜெட் விமானம் திடீரென்று மேலும், கீழும் உயரத்தை மாற்றுகிறது. பின்பு செங்குத்தாகப் பூமிக்குப் பாய்ந்து, தற்கொலை செய்து கொள்கிறது...