ரமலான் மாதம் ஆரம்பித்தவுடன், இரவுச் சிறப்புத் தொழுகைக்குப் பள்ளிவாசல் நோக்கி சாரை சாரையாக இஸ்லாமியர்கள் செல்கிறார்கள். ஐந்து வேளைத் தொழுகையோடு இந்தச் சிறப்புத் தொழுகையான ‘தராவீஹ்’ ரமலான் மாதம் முழுக்க இரவுகளில் அனைத்து மசூதிகளிலும் நடக்கும். ஆனால் பாலஸ்தீனத்தில் இருக்கும் அல்-அக்ஸா மசூதியில்...
Tag - உலகம்
இருபத்திரண்டு இந்தியப் பணியாளர்கள், இரண்டு அமெரிக்கப் பைலட்டுகளுடன் அந்தக் கப்பல் புறப்பட்டபோது, அதுவொரு பெரும் விபத்தைச் சந்திக்கப் போகிறது என்று யாரும் நினைத்திருக்க வாய்ப்பில்லை. கப்பலில் பைலட்டா..? ஆம். சரிதான். பொதுவாக ஒரு சரக்கு கப்பல் துறைமுகத்தை நோக்கி வரும்பொழுதும், துறைமுகத்தை விட்டு...
“என்னைக் குதிரை லாயத்திற்குக் கூட்டிச் சென்றார்கள். அங்கு ஒரு தொழுவத்தில் குதிரை இருந்தது. இன்னொரு தொழுவத்தில் குதிரை போலவே நீண்ட முடியும், தாடியும் கொண்ட ஒரு மனிதர் இருந்தார். கூடிய விரைவில் எனக்கும் அதே கதிதான் என்பது புரிந்து விட்டது.” சிரியாவில் வாழ வழியில்லாமல், லிபியா வழியாக...
சரக்குக் கப்பலில் மின்சாரம் நின்று தடுமாறிய செய்தி வந்த மறுகணமே, “கீ பிரிட்ஜில் (key bridge) செல்ல யாரையும் அனுமதிக்காதீர்கள்” என்று இரவையும் கிழித்துக்கொண்டு வந்த அந்த அதிகாரக் குரலால் மேம்பாலத்தின் இரு பக்கமும் வாகனங்கள் தடுக்கப்பட்டன. இதனால் பல உயிர்ச் சேதங்கள் தடுக்கப்பட்டன...
“எல்லோரும் மண்டியிடுங்கள். இல்லாவிட்டால் கொன்றுவிடுவோம் என யாரும் மிரட்டவில்லை. துப்பாக்கியை மேலே உயர்த்திச் சுடவுமில்லை. அரங்கிற்குள் நுழைந்தார்கள். எதுவும் பேசாமல் குறிபார்த்து மக்களைச் சுட்டார்கள். சுடும் சத்தத்தின் எதிரொலி கேட்டுக்கொண்டே இருந்தது. ஒன்றும் புரியவில்லை. நிஜமாகவே அதிர்ஷ்டம்...
வீடு, நிறுவனம், மதம் ஆலயம் அல்லது அரசியல் கட்சி எதுவானாலும் சரி…. பொருளாதாரமும் அதைச் சார்ந்த முடிவுகளும் யாருடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்கின்றனவோ அவருக்கே அங்கே அதிகாரம் இருக்கிறது. அதிலும் தாழ்வு மனப்பான்மை உள்ள ஒருவருக்கு அவரின் அதிகாரம், அந்த அதிகாரத்தின் மூல காரணம் அவரிடம் இருக்கிற பணபலம்...
ஒரு முட்டாளுக்கு வழிகாட்டி, சிறகுகளையும் தந்துவிட்டால், அவனது முன்னேற்றம் உறுதி. குண்டுகளில்கூட கெட்டிக்காரக் குண்டுகள், முட்டாள் குண்டுகள் என்று உண்டு. விமானத்திலிருந்து வீசப்பட்ட பின்பு எந்தக் கட்டுப்பாடுமின்றி, தன்பாட்டுக்கு நினைத்த இடத்தில விழுபவை முட்டாள் குண்டுகள். ஒரு முட்டாள் குண்டிற்கு...
மியான்மர் ராணுவ அரசு கட்டாய ராணுவச் சேவை திட்டத்தை ஏப்ரல் முதல் செயல்படுத்த உள்ளது. ஏற்கெனவே அதிகாரப்பூர்வமற்ற வகையில் ஆள் சேர்ப்புப் பணி நடந்துகொண்டுதான் இருக்கிறது. பல்வேறு நாடுகளில் இம்மாதிரித் திட்டம் நடைமுறையில் உள்ளதுதான். பெரும்பான்மை மியான்மர் மக்கள் இந்த அரசைத் தங்கள் சட்டப்படியான அரசாகக்...
சோழர் காலக் குடவோலை முறை தொடங்கி மின்னணு வாக்கு வரையான காலம் வரை மக்களாட்சியின் மகத்துவமே, மக்கள் அனைவரும் சேர்ந்து தங்களுக்குப் பிடித்த ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுக்க முடிவதுதான். இவரால் நம்மை நல்ல முறையில் வழிநடத்திச் செல்ல முடியும் என்ற நம்பிக்கையில் ஒருவரை அல்லது ஒரு கட்சியை ஆட்சி செய்ய...
பிறப்பும் இறப்பும் மட்டும் மனிதனின் முழுக் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரே காரணத்தால்தான் கடவுள் இன்றும் மனிதர்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். கூடவே அவரது படைத்தல் காத்தல் கடமை சார்ந்த நம்பிக்கைகளும். அழித்தல்? ம்ஹும். அணு ஆயுதங்களைக் கண்டுபிடித்து அந்தப் பணியில் இருந்து கடவுளை அகற்றிவிட்டோம்...