ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரால் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் என்ன செய்ய முடியும்.? நிச்சயமாய் வெல்ல முடியாது என்று தெரியும். ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் அப்பேர்பட்ட ஒருவருக்கு ஓட்டுப் போட்டால் என்ன நடக்கும்..? சந்தேகமேயில்லை. வாக்குகளைச் சிதறடிக்க முடியும். சரி, சனத்தொகையில் இருபத்தைந்து சதவீதமான தமிழ்...
Tag - இலங்கை
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் ஜூரம், கொளுத்தும் சித்திரை வெயிலையும் தாண்டி மெதுமெதுவாய்ப் பொதுமக்கள் மத்தியில் படர்ந்து கொண்டிருக்கிறது. பெரும் பொருளாதார மந்தத்திற்குப் பிறகு நடக்கும் மக்கள் வாக்கெடுப்பு என்பதாலும், வழக்கமான இலங்கைத் தேர்தல்களுக்குரிய கல்யாண குணங்களான இனவாதமும், மதவாதமும்...
நம்பர் ஒன் ஆக வருவது எப்போதுமே நல்லது என்றில்லை. இலங்கை சில காலமாகவே பலவித பலான உலகத் தரப்படுத்தல்களில் முதலிடத்தைப் பிடித்து மானம் போய் நின்றது. நீண்ட காலத்திற்குப் பின்னர், இப்போது ஓர் உருப்படியான முதலிடம் கிடைத்திருக்கிறது. வழங்கியது “டைம் அவுட்” சர்வதேசச் சஞ்சிகை. உலகிலேயே, பெண்கள் தனியாகச்...
குடைபிடித்து, செருப்புமணிந்த ஒரு பெண், கொழும்பின் பிரதான தெருவொன்றின் மீது நடந்து செல்கிறாள். அவளது கையில் ஒரு முட்டை. ஒளிப்படக் கருவியுடன் படப்பிடிப்புக் குழுவினர் பின்தொடர, முட்டையை நடு வீதியில் உடைத்து ஊற்றுகிறாள். சரியாக அறுபத்தி இரண்டு செக்கன்களில் முட்டை முற்றாகப் பொரிந்து வருகிறது...
“நீ பிழைப்புக்கு ரவுடி, நான் பிறந்ததில் இருந்தே ரவுடி” என்று ‘போக்கிரி’ படத்தில் விஜய், வில்லனைப் பார்த்துச் சொல்வார். மகிந்த ராஜபக்சேவும் அப்படித்தான். அவரும் பிறந்ததில் இருந்தே ரவுடிதான். ஆனால் சில விவகாரங்களில் பிழைப்புக்கு ரவுடிப் பாத்திரம் ஏற்றவர் அவர். தமிழர் பிரச்னையில் அவரால் இந்த...
மகிந்த ராஜபக்சேவின் 2005-ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் வெற்றி என்பது வெறும் ஒரு லட்சத்து எண்பதாயிரம் வாக்குகளால் அமைந்த ஒன்று. வடகிழக்கில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுக்கள் அன்று போடப்பட்டு இருந்தால் நிச்சயம் ரணில் விக்ரமசிங்கே ஜனாதிபதியாகி இருப்பார். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால்...
பதினேழு வருட கால ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை மீட்டிப் பார்த்தால் தெரியும்.சர்வதேசத்தில் இலங்கையை நரமாமிசம் சாப்பிடும் அகோரிகள் வாழும் தேசம் போல மாற்றிவிட்டுத்தான் அதன் தலைவர்கள் ஓய்ந்து போனார்கள்.உலகத்திற்கு அதிகளவில் அகதிகளை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாய்ப் போனது இலங்கை. அரச வளங்கள்...
ஆர்ப்பாட்டங்களால், புரட்சிகளால், கலவரங்களால் வீழ்ந்த ஆட்சிகள் உலக சரித்திரத்தில் ஏராளம் தாராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் அமைதியான பாதயாத்திரைகூட, ஒரு எதேச்சாதிகார அரசின் அஸ்திவாரத்தைப் பொலபொலக்க வைத்துவிடும் என்பதற்கு இலங்கையைத் தவிர வேறு நல்ல உதாரணம் கிடையாது. பலஸ்தீனத்தில் நடந்த இண்டிஃபாதா...
பாடகர் அல்லாத சிங்களவரையோ, பருப்புக்கறி சமைக்காத சிங்கள வீட்டையோ தேடிக் கண்டுபிடிப்பது சிரமமானது என்பார்கள்.யார் வேண்டுமென்றாலும் எந்நேரத்திலும் கலைத்தாகம் முத்திப் போய் மைக் பிடித்துப் பாடிவிடும் நிலமை தான் அச்சமூகத்தில் என்றைக்குமிருக்கிறது.இந்த கலாசார செல்கள் மகிந்த ராஜபக்சேவுக்கு மட்டும்...
மகிந்த ராஜபக்சே மட்டுமல்ல… ஒட்டுமொத்தச் சிங்கள தேசமே இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு 1987-ம் ஆண்டு ஜுலை மாதமளவில் வந்துவிட்டது. ஜே.வி.பியும் எதிர்க்கட்சிகளும் நாடெங்கும் மிகப் பரவலான எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கின. அரசாங்கம்கூட வெளியே ஒன்றைச் சொல்லிக் கொண்டு உள்ளே குமுறிக்...