Home » ப்ரோ – 20
தொடரும் ப்ரோ

ப்ரோ – 20

மகிந்த ராஜபக்சேவின் 2005-ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் வெற்றி என்பது வெறும் ஒரு லட்சத்து எண்பதாயிரம் வாக்குகளால் அமைந்த ஒன்று. வடகிழக்கில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுக்கள் அன்று போடப்பட்டு இருந்தால் நிச்சயம் ரணில் விக்ரமசிங்கே ஜனாதிபதியாகி இருப்பார். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

ஆனால் பிரபாகரனோ காசை வாங்கிக் கொண்டு மக்களின் ஜனநாயக உரிமையை அவர் புதைந்த நந்திக் கடலுக்குள்ளே புதைத்தார். புலிகள் காசு வாங்கினார்கள் என்பதற்கு மிக வலுவான ஆதாரம்தான் இன்னாள் போலிஸ் துறை அமைச்சரும் அந்நாள் விமான சேவை நிறுவனத் தலைவருமான டிரான் அலஸின் வாக்குமூலம். இன்றும் அது யூடியுபில் மிகப் பத்திரமாய் இருக்கிறது. எமில் காந்தன் என்ற வர்த்தகரை ராஜபக்சேக்களுக்கு அறிமுகப்படுத்திய இடைத்தரகராய் தான் டிரான் அலஸ் அப்போது செயற்பட்டு இருந்தார். எமில் காந்தன், ராஜபக்சேக்களின் தூதைப் புலிகளுக்கு எத்தி வைத்தார். அவ்வளவுதான்.

‘சிங்கள ஆட்சியாளர்கள் யார் வந்தாலும் நமக்குக் கவலை இல்லை. நாம் இத்தேர்தலைப் புறக்கணிக்கிறோம்’ என்று என்னதான் புலிகள் அறிக்கைவிட்டு இருந்தாலும் அவர்கள் மகிந்த ராஜபக்சேவின் வெற்றியைத்தான் அப்போது மறைமுகமாய் விரும்பினார்கள். காரணம், ரணிலின் சமாதானப் பொறியில் தம் கிழக்கு மாகாணத் தளபதி கருணாவைத் தாரை வார்த்திருந்தார்கள். கருணா, இலங்கை அரசின் மாண்புமிகு நல்லடியாராய் மாறியதற்குக் காரணமே ரணிலின் சமாதானத் திருகுதாளங்கள்தான். ஆகவே சர்வதேச அழுத்தங்களுடனான ரணிலின் பிரசன்னத்தைத் தோற்கடித்து விட்டால் அவரைவிடப் புத்திக் குறைபாடு உடைய மகிந்த ராஜபக்சேவை வைத்துக் கொண்டு கண்டபடி கம்பு சுத்தலாம் என்று நினைத்தார் பிரபாகரன்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!