ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி ஸ்மரணானந்தா, கடந்த மார்ச் 26-ஆம் தேதி மகாசமாதி அடைந்தார். மேற்கு வங்க மாநிலத்திலிருக்கும் பேளூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது ராமகிருஷ்ண மடம். 2017-ஆம் ஆண்டு முதல் அதன் தலைவராக இருந்து வருபவர் சுவாமி ஸ்மரணானந்தா. உடல்நலக் குறைவு காரணமாக...
Tag - ஆளுமை
பூலேஷ்வரி தேவிக்கு உடல் நலம் சரியில்லை. வைத்தியரிடம் அழைத்துச் செல்லவேண்டும். எழுபதுகளின் பாட்னாவில் இன்று இருப்பதைப் போன்ற நவீன வாடகை வண்டி வசதிகள் எதுவும் இருக்கவில்லை. அறிந்தவர்கள் தெரிந்தவர்களின் காரில்தான் செல்லவேண்டும் அல்லது வாடகை ரிக்ஷா. பூலேஷ்வரியின் கணவரிடம், அவருடைய தொழில் நிமித்தம்...
மதுரையின் மத்தியில் அமைந்துள்ள சென்ட்ரல் திரையரங்கத்தின் டிக்கெட் கிழிக்கும் பெரியவர் அந்தச் சிறுவனைப் பார்த்ததும், “இன்னிக்குமாடா?” என்று கேட்பார். “எங்க தலைவர் படம் நான் பாக்காம யார் பாப்பா?” என்றவாறு உள்ளே சென்ற அவன் அறுபதாவது நாளாகத் தொடர்ந்து பார்த்த திரைப்படம் ‘எங்க வீட்டுப் பிள்ளை.’ மதுரை...
ஒரு ஸ்டாக்கின் விலை மட்டும் 4.5 கோடி. கேட்கும் போதே தலைசுற்றுகிறதா? அது தான் பெர்க்சயர் ஹாத்வே A (Berkshire Hathway A). அதன் உருவாக்கத்திற்குச் சொந்தக்காரர்கள் மற்றும் காரணமானவர்கள் வாரன் பஃபெட்டும் (Warren Buffett) அவரின் வலது கை, படைத்தளபதி இப்படிப் பல்வேறு பட்டத்திற்குச் சொந்தக்காரரான சார்லி...
கம்யூனிஸ்ட் கட்சியின் மிக மூத்தத் தலைவர் தோழர் என்.சங்கரய்யா. சுதந்திரப் போராட்ட வீரர், பொதுவுடைமை போராளி, அரசியல் கட்சித் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் எனப் பல பரிமாணங்களைக் கொண்ட, தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவர். குரோம்பேட்டையில் வசித்து வந்த அவர் முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக...
பெருமாள்முருகன் தமிழ் இலக்கியத்தின் சமீபப் பரபரப்பு. அநேகமாக எல்லா தமிழ் எழுத்தாளர்களுக்கும் அவர் மீது மெல்லிய பொறாமை உண்டு என்றுதான் சொல்வேன். ஆங்கில மொழிபெயர்ப்பு பெரும்பான்மை எழுத்தாளர்களின் ரகசியச் சொப்பனம். அவை கொணரும் உரிமப் பணமும் பெரும் புகழும் ஒரு பக்கம், அவை திறந்து விடும் பிரம்மாண்ட...
ஒவ்வொரு வருடமும் இலக்கிய நோபல் பரிசு அறிவிக்கப்படும். ஒவ்வொரு வருடமும் எதிர்பார்ப்புப் பட்டியலில் முரகாமியின் பெயர் இருக்கும். ஒவ்வொரு வருடமும் பரிசு அவருக்கு இருக்காது. இது இன்று நேற்றல்ல. பல வருட காலமாக நடப்பதுதான். இந்த வருடமும் இந்தத் திருவிழா ஜோராக நடந்து முடிந்தது. ஆனால் முரகாமி இதையெல்லாம்...
1950 கால கட்டம். இந்தியாவில் உணவுத் தட்டுப்பாடு அதிக அளவில் இருந்தது. சிறிது காலம் முன்னர், அதாவது 1943-இல் தான் அதிபயங்கர வங்காளப் பஞ்சம் ஆட்டிப்படைத்திருந்தது. இதன் பலி எண்ணிக்கை வங்காளத்தில் மட்டும் 38 லட்சம் பேர். உணவின்றி இவ்வளவு பேர் இறந்துள்ளார்கள் என்பது நம் தலைமுறையினருக்கு நம்ப முடியாததாக...
எழுபதாண்டுகள் பணியாற்றிய பின்னர் தொண்ணூற்றிரண்டாவது வயதில் ஒருவர் தனது பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார். அது உலகெங்கும் பெரிய செய்தியாக அனைத்து ஊடகங்களிலும் வெளி வருகிறது. காரணம் ஊடகத்துறையில் ஒரு பெரும் வணிக சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்பியவர் அவர் என்பதே. அந்தத் தொண்ணூற்றிரண்டு வயதில் தனது இரு...
புதுக்கோட்டையில் வசித்த வெங்கோப ராவ் – பத்மாவதி தம்பதிக்கு ஆகஸ்ட் 27, 1938ம் ஆண்டு மகனாகப் பிறந்தவர் ரங்கநாத ராவ் (எ) மாருதி. எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்த அவர் ஓவியம் வரைவதன் மீதான காதலால் கல்லூரிப் படிப்பைத் தொடரவில்லை. 1959ல் சென்னைக்கு வந்த ரங்கநாதன், திரைப்படங்களுக்கு பேனர் வரையும்...