Home » மாருதி: மறையாத நினைவுகள்
ஆளுமை

மாருதி: மறையாத நினைவுகள்

புதுக்கோட்டையில் வசித்த வெங்கோப ராவ் – பத்மாவதி தம்பதிக்கு ஆகஸ்ட் 27, 1938ம் ஆண்டு மகனாகப் பிறந்தவர் ரங்கநாத ராவ் (எ) மாருதி. எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்த அவர் ஓவியம் வரைவதன் மீதான காதலால் கல்லூரிப் படிப்பைத் தொடரவில்லை. 1959ல் சென்னைக்கு வந்த ரங்கநாதன், திரைப்படங்களுக்கு பேனர் வரையும் கம்பெனியில் ஓவியராக வேலைக்குச் சேர்ந்து வரையலானார்.

1959 ஏப்ரலில் இவரது முதல் பத்திரிகை ஓவியம் குமுதத்தில் வெளியானது. வீ.ரங்கநாதன் என்று கையொப்பமிட்டு அவர் வரைந்த ஓவியத்தால் வேலை பார்க்கும் நிறுவனத்தில் பிரச்சனை வந்ததால், ‘மாருதி’ என்ற புனைபெயர் சூட்ட எண்ணியபோது அவர் வேலை பார்த்த நிறுவனத்திற்கு எதிரே இருந்த ‘மாருதி பார்மஸி’ போர்டு கண்ணில்பட, ‘மாருதி’ என்ற புனைபெயரில் வரையலானார். அன்று முதல் விரிவடையத் தொடங்கிய அவரது ஓவிய சாம்ராஜ்யம் ஜூலை 27, 2023 அன்று அவர் மறையும்வரை தொடர்ந்தது.

மாருதியின் மறைவு தமிழ் வார இதழ் வாசகர்கள் அனைவரையும் மனம் கலங்கச் செய்தது. சமூக ஊடகங்களில் வெளியான இரங்கல் குறிப்புகளே அதற்குச் சான்று. அவரது பிறந்த தினமான ஆகஸ்ட் 27ம் தேதியன்று சென்னையில் அவருக்கு ஓர் நினைவஞ்சலிக் கூட்டம் நடத்தப்பட்டது. முன்னின்று நடத்தியது, மாருதியின் மாணவர்கள் கமலநாதன், அறிவழகன் ஆகியோர். நிகழ்ச்சியில் பிரபல ஓவியர்களும் எழுத்தாளர்களும் ஓவியர் மாருதியுடனான தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!