கல்யாணத்துக்குத் தேதி குறித்து விட்டால் அடுத்தடுத்த காரியங்கள் தானாக நடக்கும். சீனாவும் தேதி குறித்து விட்டது. சரியாக 2030-ஆம் ஆண்டில் விண்வெளி வீரர்கள் கொண்ட குழுவொன்று சந்திரனில் தரையிறங்கப் போவதாக சீனாவின் விண்வெளி மையமான CNSA தீர்மானித்துள்ளது. அந்தப் பயணத்தின் வெற்றியைப் பொறுத்து 2035-இல்...
Tag - அறிவியல்-தொழில்நுட்பம்
“க்ளவுட்” என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் ஒரு சொல்லாகிவிட்டது. ஆரம்பத்தில் சில முக்கியமான ஃபைல்களை மட்டும் க்ளவ்டில் ஏற்றி வந்தோம். க்ளவுட்காரர்கள் கொடுத்த சொற்ப ‘ஜி.பி.’களே போதுமானதாக இருந்தது. ஆனால் இந்தச் சொகுசுக்குப் பழகிப்போன நாம், ‘எதுக்கும் இருக்கட்டுமே…’ என்று எல்லாவற்றையுமே க்ளவ்டில்...
குறைக்கடத்திகள் என்று சற்று கொச்சையாக மொழிபெயர்க்கப்பட்டு விட்டாலும் செமி கண்டக்டர்களின் (semi conductor) ஆகிருதி மிகமிகப் பெரியது. ஒரு நாளின் அத்தியாவசியக் காரியங்கள் ஒவ்வொன்றிலும் நம்மை அறியாமலேயே ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் பரப்பிரம்மம் அது. அதுவன்றி நம் நாளை அசையவிடாத செல்ஃபோனில் தொடங்கி...
திருவனந்தபுரத்தில் உள்ள KTCT மேல்நிலைப்பள்ளி அண்மையில் ஒரு புதிய ஆசிரியரைப் பணியில் சேர்த்தார்கள். இந்த ஆசிரியரின் பெயர் ஐரிஸ். தென்னிந்தியப் பெண் ஆசிரியர்களைப் போலவே இவரும் சேலை அணிந்து பள்ளிக்கு வருகிறார். இவர் கல்வி கற்பிக்கும் வகுப்புகளில் மாணவர்கள் அதிக உற்சாகத்துடன் கலந்து கொள்கிறார்களாம்...
முன்பெல்லாம் ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜன்ஸ் மீதான ஆராய்ச்சி மற்றும் செயல்பாட்டிற்கு முன்னணியிலேயே இருந்த நிறுவனமென்றால்… கண்ணைக் கட்டிக்கொண்டு ‘ஓப்பன் ஏ.ஐ.` திசையை நோக்கி விரல் நீட்டி விடுவார்கள். கடந்த ஓரிரு வருடங்களாகத்தான், கணினித் தொழிலெனும் தண்டலை எடுத்த எல்லா தண்டல்காரர்களும் தங்களை செய்யறிவு...
ஜெமினி அல்லது மிதுன ராசிக்கு கேதுகாரகனால் சற்று டென்ஷன் அதிகம் என்று புத்தாண்டுப் பலன்களில் சொல்லப்பட்டிருந்தது. அதை கவனிக்காமலோ என்னவோ கூகுள் தனது செய்யறிவுச் செயலித் திட்டத்திற்கு (generative AI Project) அதே பெயரை வைத்தது. இப்போது சோதனை மேல் சோதனை என்று பாடாத குறையாக நொந்து போயிருக்கிறது...
கடத்தி வைத்துக்கொண்டு காசு கேட்பது. இது ஆதிகாலம் முதல் நடந்துவரும் ஒரு குற்றம். இதன் டிஜிட்டல் அவதாரம் தான் ரேன்சம்வேர். தனிநபர்கள், நிறுவனங்கள் என்றெல்லாம் எந்தப் பாரபட்சமும் இல்லை. திருமலை திருப்பதி பாலாஜியைக் கூட இந்த ரேன்சம்வேர்கள் விட்டு வைக்கவில்லை. சைபர் குற்றங்கள் பெருகிவரும் இன்றையச்...
90களின் ஆரம்பத்தில் `கொலையுதிர்காலம்` என்ற தலைப்பில் சுஜாதா குமுதத்தில் ஒரு தொடர்கதை எழுதினார். கணேஷ், வசந்த் என்கிற அவரது பிரதான புனைவுப் பாத்திரங்கள் துப்பறியும் கதை அது. நகருக்கு வெளியே இருக்கும் ஒரு பண்ணை வீட்டில், திடீரென இரவில் எழுந்து நடமாடும் ஓர் ஒளியுருவம் பற்றித்தான் பிரதான வழக்கு...
அரசாங்கத் தொலைக்காட்சியும், வானொலியுமே பொழுதுபோக்குகளாக இருந்த 1980-களின் இறுதியில், `சிரிப்போ சிரிப்பு` என்ற தலைப்பில் ஒரு கேசட் வெளியாகியிருந்தது. அப்போது பிரபலமாக இருந்த பல காமெடி நடிகர்களின் குரல்களை மிமிக்ரி செய்து உருவாக்கப்பட்ட ஒருமணி நேரத் தொகுப்பு அது. கிட்டத்தட்ட டேப் ரெக்கார்டர்...
முதன்முதலில் செல்ஃபோன்களின் சந்தை இந்தியாவில் திறக்கப்பட்டபோது அது செல்வந்தர்களின் வசம் மட்டுமே செல்லும் இன்னொரு ‘ஏழைகளின் கைக்கெட்டா கச்சாப்பொருள்’ என்றுதான் சந்தை நினைத்தது, மக்களும் நினைத்தார்கள். ஆனால் மெல்ல மெல்லச் சாமானியனும் தொடும் விலைக்கு விற்க ஆரம்பித்த சில வருடங்களிலேயே அதன் அவதாரங்கள்...