15 நரகம்
கையைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டான். சற்று நேரம் அமைதியாக இருந்தவன்,
‘நீ பின்னால் உட்கார். நான் ஓட்டுகிறேன்‘ என்றான்.
‘இட்ஸ் ஓகே நர்ஸி. நானே ஓட்டுகிறேன்‘ என்றாள் அவள்.
கொஞ்ச நேரம் ஒன்றும் சொல்லாமல் இருந்தவன்,
‘இல்லை. வண்டியை நிறுத்து நான் ஓட்டுகிறேன்‘ என்றான்.
‘புறப்பட்டதிலிருந்து இவ்வளவு நேரம் நீ தானே ஓட்டிக்கொண்டு வந்தாய். நானும் கொஞ்சம் ஓட்டுவது நல்லதுதானே. நாளையிலிருந்து நானல்லவா ஓட்டியாகவேண்டும். இது எனக்குப் பயிற்சியாக இருந்துவிட்டுப் போகட்டுமே.’
கோபமாக ஒரு வார்த்தை சொல்லியிருந்தால்கூட பரவாயில்லை எனத் தோன்றிற்று. ஒன்றுமே நடக்காததைப்போல சகஜமாகப் பேசிக்கொண்டு வருவது ரொம்ப அவமானமாக இருந்தது.
Add Comment