Home » நீங்கள் ஏன் நடனமாடக்கூடாது?
இலக்கியம் உலகச் சிறுகதைகள்

நீங்கள் ஏன் நடனமாடக்கூடாது?

ரேமண்ட் கார்வர் | தமிழில் : ஜி.குப்புசாமி


சமையலறையில் இன்னொரு கோப்பையை நிரப்பிக்கொண்டு வெளிமுற்றத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த படுக்கையறை சாதனைங்களைப் பார்த்தான். மெத்தை தனியாகவும் அதன் பட்டாபட்டி உறை தனியாகவும் ஒப்பனை மேசை மீதிருந்த இரண்டு தலையணைகளுக்குப் பக்கத்தில் இருந்தன. இவற்றைத் தவிர மற்ற எல்லா பொருட்களும் அவர்களுடைய படுக்கையறையில் இருந்ததைப் போலவே இங்கும் இருந்தன – படுக்கையில் அவன் படுக்கும் பகுதிக்குப் பக்கத்தில் நிலையடுக்கும், படிக்கும் விளக்கும். அவள் படுக்கும் பகுதிக்குப் பக்கத்தில் நிலையடுக்கும், படிக்கும் விளக்கும். அவனுக்கான பகுதி, அவளுக்கான பகுதி. விஸ்கியை அருந்திக்கொண்டே அதைப்பற்றி யோசித்தான். கட்டிலிலிருந்து சில அடிகள் தள்ளி ஒப்பனை மேசை நின்றது. அதன் இழுப்பறைகளில் இருந்தவற்றையெல்லாம் எடுத்து அன்று காலையிலேயே அட்டைப்பெட்டிகளில் போட்டு மூடிவிட்டிருந்தான். அந்த அட்டைப்பெட்டிகள் வீட்டுக்குள் வசிப்பறையில் இருந்தன. ஒப்பனை மேசைக்குப் பக்கத்தில் ஒரு ‘போர்டபிள் ஹீட்டர்’ இருந்தது. கட்டிலையொட்டி அலங்காரத் தலையணையோடு ஒரு பிரம்பு நாற்காலி போடப்பட்டிருந்தது. வண்டிப்பாதையின் ஒரு பகுதியை மஞ்சள் அலுமினிய சமையல் பாத்திரங்கள் நிறைத்திருந்தன. பரிசாக வந்திருந்த ஒரு மிகப்பெரிய மஞ்சள் மஸ்லின்துணி மேசையை மூடி பக்கவாட்டில் தொங்கிக் கொண்டிருந்தது. மேஜைமீது தொட்டியில் பெரணிச் செடியும், பரிசாக வந்த வெள்ளிக்கலம் ஒன்றும் இருந்தன. மர அலமாரியுடன் பொருத்தப்பட்ட ஒரு பெரிய கான்ஸோல் – மாடல் தொலைக்காட்சிப் பெட்டி காபி மேஜைமீது வைக்கப்பட்டிருந்தது. அதற்கு சில அடிகள் தள்ளி ஒரு சோபாவும், ஒரு நாற்காலியும், ஒரு நிலை விளக்கும். அவன் வீட்டிலிருந்து எக்ஸ்டென்ஷன் ஒயரை இழுத்துவந்து எல்லா சாதனங்களுக்கும் இணைத்திருந்ததால் எல்லாமே வேலைசெய்யும் நிலையில் இருந்தன. கார் ஷெட்டின் கதவையொட்டி போட்டிருந்த குள்ளமான மேஜையின் மீது ஒரு சுவர்க் கடிகாரம், இரண்டு சட்டமிட்ட படங்களோடு இன்னும் சில சாமான்களும் இருந்தன. வண்டிப்பாதையில் இருந்த அட்டைப்பெட்டியில் கிண்ணங்களும் கோப்பைகளும் தட்டுகளும் செய்தித்தாள்களில் சுற்றி வைக்கப்பட்டிருந்தன. உள் அலமாரிகளில் இருந்த எல்லாவற்றையும் அவன் அன்று காலையிலேயே ஒழித்துக் கட்டியிருந்தான். வசிப்பறையில் வைத்திருந்த மூன்று அட்டைப்பெட்டி சாமான்களைத் தவிர மற்ற எல்லா பொருட்களும் வீட்டுக்கு வெளியே இருந்தன. அவ்வப்போது கார்கள் தயங்கி வேகத்தைக் குறைக்க, வண்டிக்குள்ளிருப்பவர்கள் இங்கே வீட்டுக்கு வெளியே முற்றத்தில் வைக்கப்பட்டிருப்பவற்றை வியப்புடன் நோக்குவார்கள். ஆனால் ஒருவரும் நிற்கவில்லை. அவனே கூட வண்டியை நிறுத்திப் பார்த்திருக்க மாட்டான் என்று நினைத்துக்கொண்டான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!