Home » பிடிஆர்: ஓங்கி ஒலிக்கும் தனிக்குரல்
தமிழ்நாடு

பிடிஆர்: ஓங்கி ஒலிக்கும் தனிக்குரல்

“கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதற்கான எந்த நிறுவனங்களும் இல்லை. எனவே இந்த அரசு, தொழில்நுட்பப் பூங்கா ஒன்றினைத் தொகுதியில் அமைத்துத் தர இயலுமா எனத் தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.” சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது இப்படிச் சொல்லிவிட்டு அமைதியாக அமர்ந்துவிட்டார் அதிமுகவைச் சேர்ந்த கூடலூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஜெயசீலன். ஆனால் அந்தக் கேள்விக்குத் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அளித்த பதிலும் அதற்கு முதல்வர் ஸ்டாலினின் எதிர்வினையும் தொடர்ந்து பல விவாதங்களை உருவாக்கியிருக்கின்றன.

“இந்தக் கூட்டத் தொடரிலேயே என்னுடைய துறையில் இருக்கக்கூடிய சிக்கல்களைக் கூறியிருக்கிறேன். நிதியும் மிகக்குறைவாக ஒதுக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களைப் போல இங்குத் தொழில் நுட்பப் பூங்காக்கள் எங்கள் துறையில் செயல்படுவதில்லை. கடந்த இருபதாண்டுகளாக இந்தத் துறையில் இதுதான் நிலைமை. எனவே யாரிடம் நிதியும் திறனும் அதிகாரமும் இருக்கிறதோ அவரிடம் கேட்டால் அவர் செய்து கொடுப்பார் என நான் கருதுகிறேன்.” பிடிஆரின் இந்தப் பதில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல திமுகவினருக்கே அதிர்ச்சியை அளித்திருக்கும். அதனுடைய வெளிப்பாடாகத்தான் சபாநாயகர் அப்பாவு “இதெல்லாம் நீங்க முதல்வரிடம் பேசித் தீர்க்க வேண்டும். மாண்புமிகு அமைச்சர் பாசிட்டிவா உறுப்பினர்களுக்குப் பதில் சொன்னால் நன்றாக இருக்கும்” என உடனடியாகவே எதிர்வினையாற்றினார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!