Home » ஒரு  குடும்பக்  கதை – 63
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 63

63. கமலா நேருவுக்குப் பரிசு
ஜவஹர்லால் நேருவும், கமலா நேருவும் அலகாபாத்தில் தீவிரமாக காங்கிரஸ் கட்சிப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அதே நேரத்தில்,  பிரிட்டிஷ் அரசாங்கம், ஜவஹர்லால் நேருவை மீண்டும் கைது செய்யத்  திட்டம் போட்டுக் கொண்டிருந்தது. கமலா நேரு, வரும் நாட்களில் தனது கணவர், தன்னுடன் சேர்ந்து இருக்கும் நாட்களை விட சிறையில் தனித்துக் கழிக்கும் நாட்களே அதிகமாக இருக்கும் என்று எண்ணினார்.
முசூரியிலிருந்து அலகாபாத் திரும்பிய நேருவிடம், அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசுவதற்குத் தடை விதிக்கும் உத்தரவு  அளிக்கப்பட்டது. அதை வாங்கிப் பார்த்துவிட்டு, “தடையை மீறுவது எனது விருப்பம்; என்னைக் கைது செய்வது உங்கள் விருப்பம்” என்று சொல்லிவிட்டார்.
மறுநாள் முசூரியிலிருந்து அலகாபாத் திரும்பிய மோதிலால் நேருவையும், மற்றவர்களையும் ஜவஹர்லால் நேருவும், கமலாவும் ரயில்நிலையத்துக்குச் சென்று வரவேற்றார்கள். மற்றவர்கள் எல்லோரும் வீட்டுக்குச் செல்ல, ஜவஹர்லால் நேரு, கமலா இருவரும் மட்டும் நேரே  ஒரு பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகச் சென்றுவிட்டார்கள்.

Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!