Home » ஒரு குடும்பக் கதை – 62
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 62

வட்டத்துக்குள் சதுரம்

மோதிலால் நேரு லண்டன் டெய்லி ஹெரால்டு பத்திரிகையாளர் ஜார்ஜ் ஸ்லொகொம்ப்க்குப் பேட்டியளித்தபோது, “வட்டமேஜை மாநாட்டுக்கு அழைப்பு வந்தால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில் அதனை ஏற்றுக் கொண்டு மாநாட்டில் பங்கேற்பீர்களா?” என்ற கேள்வியைக் கேட்டதும் நிதானமாக யோசித்து, பதில் சொன்னார்.

“வட்டமேஜை மாநாடு, எந்த நோக்கத்துக்காக நடத்தப்படுகிறது என்பது முதலில் தெளிவுபடுத்தப்பட வேண்டும். மாநாட்டின் விளைவாக சுதந்திர இந்தியாவுக்கான அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் இருக்குமானால், காங்கிரஸ் கட்சி பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அழைப்பினை ஏற்றுக் கொண்டு, பங்கேற்பது குறித்துப் பரிசீலனை செய்யும்” என பதிலளித்தார்.

“இந்தியாவின் ஆட்சி அதிகாரம் இந்தியர்கள் கையில் இருக்க வேண்டும். அதற்காக ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் பிடிக்கும் என்றால், அதற்காகக் காத்திருப்பதில் தவறில்லை” என்றும் கூறினார்.

மோதிலால் நேருவின் இந்தப் பதில், அவரது சொந்தக் கருத்து என்று சொல்லிவிட முடியாது. காந்திஜி, வைஸ்ராயை சந்தித்தபோது கூட இதே அடிப்படையில்தான் பேச்சு வார்த்தை நடத்தினார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!