Home » கடவுளுக்குப் பிடித்த தொழில் – 37
கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் – 37

மருந்துகள் கண்டுபிடிக்கப்படும் கதை

கோவிட் பெருந்தொற்றின் ஆரம்பக் காலக்கட்டங்களில் பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பு எப்பொழுது கோவிட் வைரஸிற்கு எதிரான தடுப்பு மருந்து அல்லது மருந்து கிடைக்கும் என்பதாகவே இருந்தது. எதிர்பார்த்ததுபோலவே கூடிய விரைவில் தடுப்பு மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டு அவை சந்தைக்கும் வந்துவிட்டன. கூடவே சந்தேகமும்- எப்படி இவ்வளவு சீக்கிரமாக இந்த மருந்துகளைக் கண்டுபிடிக்க முடிந்தது என்று. இதில் மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களின் சூழ்ச்சி உள்ளது என ஒரு தரப்பினர் கூச்சல் போட ஆரம்பித்துவிட்டனர். இன்னும் சிலர் இது மருந்தே இல்லை. வெறும் உப்பு நீர் என்றும் கூறினர். உண்மையில் மருந்து கண்டுபிடிப்பது என்ன அவ்வளவு கடினமான காரியமா? ஒரு விஞ்ஞானி அல்லது தொழில் முனைவரின் மூளையில் உதிக்கும் ஓர் எண்ணம் (Idea) எவ்வாறு நம் கையில் மருந்தாக வந்து சேர்கிறது? அதில் ஈடுபட்டுள்ள தரப்பினர் யார் யார்? உண்மையிலேயே மருந்துகள் கண்டுபிடிக்க நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும் எனில் எவ்வாறு கோவிட் சமயத்தில் மட்டும் இந்த மருந்துகள் விரைவாகக் கண்டுபிடிக்கப்பட்டன? இவற்றினைப் பற்றி நாம் இங்கு விரிவாகப் பார்க்கலாம்.

மருந்துக் கண்டுபிடிப்பு என்பது வேதியியலாளர்கள் (Chemists), மூலக்கூறு உயிரியலாளர்கள் (Molecular Biologists), மருத்துவர்கள் (Physicians), உயிர் வேதியியல் வல்லுநர்கள் (Biochemists), டிஎம்பிகே (DMPK or Drug Metabolism and Pharmacokinetics) எனப்படும் மருந்து வளர்சிதை மாற்றம் மற்றும் மருந்தியக்கவியல் துறை வல்லுநர்கள், கணினிப் பொறியாளர்கள், காப்புரிமை வழக்கறிஞர்கள் (Patent attorneys), முதலீட்டாளர்கள் (Investors), அரசாங்கம், ஒழுங்குமுறை அமைப்புகள் (Regulatory agencies), தொழில் முனைவர்கள் மற்றும் ஏனைய பல்துறை வல்லுநர்களின் ஒத்துழைப்புத் தேவைப்படும் ஒரு கடும் சவால் நிறைந்த, மிகச் சிக்கலான வேலை.

உலகமெங்கிலும் உள்ள மருந்து நிறுவனங்கள் ஓர் ஆண்டிற்குச் சுமார் ரூ.8,00,000 கோடியை மருந்து ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பணிகளுக்காகச் செலவிடுகின்றன. மேற்கத்திய நாடுகளில் ஒரு மருந்து நிறுவனம் சராசரியாகத் தன்னுடைய வருமானத்தில் நான்கில் ஒரு பங்கினை அதன் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்காகச் செலவிடுகின்றது. தொழில்நுட்பம் சார்ந்து இயங்கும் அறிவுசார் தொழில் துறையில் (Knowledge based industries) இத்தகைய பங்கு விகிதம் மருந்துத் துறையில்தான் அதிகம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!