சஞ்சய் காந்திக்கு நேரெதிரான மென்மையான குணம் கொண்டவர் ராஜிவ் காந்தி. சிறு வயது முதலே அவர்களின் சுபாவம் அப்படித்தான்.
ராஜிவ் பிறந்து சுமார் இரண்டு வருடங்களுக்கு எல்லாம் சௌகரியமாகத்தான் போய்க் கொண்டிருந்தது.
1946ல் இந்திரா காந்தியும், ஃபெரோஸ் காந்தியும் அலகாபாத்திலிருந்து லக்னௌவிற்கு இடம் பெயர்ந்தார்கள். அங்கேதான் அவர்களுக்கு அடுத்த குழந்தை பிறந்தது.
வீட்டில் இரண்டு குழந்தைகள் இருந்தால், அம்மாவும் மற்ற உறவுகளும் குட்டிப் பாப்பா மீது அதிக கவனம் செலுத்துவதை மூத்த குழந்தையால் பொறுத்துக் கொள்ள முடியாது என்பது குழந்தைகள் சைக்காலஜி.
எனவே, தன் மீது அவர்களது கவனத்தை ஈர்க்க கூடுதலாக அடம், அழுகை, ஆர்ப்பாட்டம் போன்ற அஸ்திரங்கள் பெரிய குழந்தையால் பிரயோகிக்கப்படும்.
அதனால், அம்மாவும், மற்றவர்களும் எரிச்சலைடைவார்கள். பெரிய குழந்தைக்கு திட்டு, அடி இன்னபிற கிடைக்கும்.
ராஜிவும், சஞ்சயும் இதற்கு விதி விலக்கல்ல. ராஜிவ் அழுது, அடம் பிடித்தால் இந்திரா காந்தி எரிச்சல் அடைந்து கோபித்துக் கொள்வார். இது குழந்தையின் அழுகையை அதிகரிக்கவே செய்தது.
Add Comment