154. டிரக்கில் பயணித்த மாருதி
எப்படியும் மாருதி காருக்கு வீ.ஆர்.டி.ஈ என்ற வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் அங்கீகார சான்றிதழ் கிடைக்காது; அது கிடைக்காவிட்டால், கார் தயாரிப்பு சாத்தியமில்லை.
அப்போது மாருதி கார் திட்டம் தானாகவே ஒரு முடிவுக்கு வந்துவிடும். இந்திரா காந்திக்கும் அனாவசியமான இந்தத் தலைவலி தீர்ந்துவிடும் என்று கணக்குப் போட்டார் பி.என்.ஹக்ஸர்.
ஹக்சரின் இந்த ஆலோசனையை முதலில் சஞ்சய் காந்தி வரவேற்கவில்லை. கடைசியில் வேறு வழி இல்லாமல் மாருதியின் மாதிரி கார் ஒன்றைத் தயாரித்து, அகமதுநகரில் இருந்த வீ.ஆர்.டி.ஈ ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பச் சம்மதித்தார்.
மாருதி தயாரிப்பில் முதல் கோணலான எஞ்சின் வடிவமைப்பு பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டிய கட்டாயமான சூழ்நிலையில் ஒரு ஜெர்மனி இஞ்சினியரைப் பிடித்து, அவரிடம் இந்த வேலையை ஒப்படைத்தார் சஞ்சய்.
Add Comment