Home » ஆபிஸ் – 37
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபிஸ் – 37

37 எழுத்தும் வாழ்வும் 

மறுநாள் மாலை ஆபீஸ் விட்டதும் அறைக்கு வராமல், வீட்டில் தங்கவைத்து, அறையும் பார்த்துக்கொடுத்த ஜீவாவைப் பார்க்க மரியாதை நிமித்தம் அவர் வீட்டிற்குப் போனான். வாசலிலேயே பெரியவர் அமர்ந்திருந்தார். பார்த்ததும் வழக்கம்போல நட்போடு சிரித்தார். ஆனால், முதல்முறை பார்த்தபோது இருந்ததுபோல கருஞ்சட்டையில் இல்லாமல், பட்டன்கூட சரியாகப் போடாமல் எல்லோரையும்போல சட்டை அணிந்திருந்தார். பெரியார் மாதிரி எப்போதும் கருப்புச் சட்டை அணிபவர் என்று நினைத்திருந்ததைப்போல இல்லையோ அவர் என்று தோன்றிற்று. படித்திண்னையின் மறுபுறத்தில் அமர்ந்துகொண்டான். 

அட. ஆபீஸ் விட்டு வந்தாச்சா என்றபடி ஜீவா உள்ளேயிருந்து வந்து, பேச வசதி என்பதைப்போல, தெருவில் நின்றுகொண்டார், 

ரூமெல்லாம் எப்படி. சவுரியமா இருக்கா.

ரூமுக்கென்ன ராத்திரி படுக்கதானே. 

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்